எதிர்நீச்சல்: ஜான்சி ராணியை வீட்டை விட்டு துரத்தும் ஜனனி.. எதிர்த்து பேசும் ரேணுகா..திடீர் திருப்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி குணசேகரன் வீட்டிற்கு வந்து வீட்டு மருமகளை மிரட்ட கோபமான ஜனனி, ஜான்சி ராணியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி மிரட்டுகிறார்.
அதே நேரத்தில் குணசேகரன் ரேணுகா அம்மாவிடம் எப்படியாவது உன் பொண்ணுகிட்ட எடுத்து சொல்லி சடங்கு சுத்துற வேலைய பாருங்கம்மா என்று மிரட்டுகிறார்.

ஆனால் குணசேகரன் எவ்வளவோ பேசினாலும் அதற்கு ரேணுகா "எவன் சொன்னாலும் என் பிள்ளைக்கு நான் சடங்கு சுத்த மாட்டேன்" என்று மிரட்டலாக பேசுகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கரிகாலன் திருமணம் யாரும் எதிர்பார்க்காத விதமாக முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் சடங்கு வைத்து அடுத்தடுத்து வீட்டில் புது பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

ஐஸ்வர்யா தான் வயதுக்கு வந்ததை வீட்டில் சொன்னால் தர்ஷினிக்கு நடந்தது போல தனக்கும் சடங்கு வைத்து யாரையாவது மாப்பிள்ளை என்று கூட்டி கொண்டு வந்து விடுவார்கள் என்று பயந்து மூன்று நாட்களாக அதை சொல்லாமல் மறைத்திருந்த நிலையில் தற்போது டீச்சர் மூலமாக வீட்டிற்கு தகவல் தெரிந்திருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன் என்று ரேணுகா விடாப்பிடியாக இருக்கிறார். ஞானம் எவ்வளவோ முயற்சி செய்தாலும் அதற்கு பதிலடி கொடுத்து அவமானப்படுத்திய ரேணுகாவிடம் இப்போது குணசேகரன் மிரட்டும் தோணியில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அதற்கும் பணியாத ரேணுகா தொடர்ந்து எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரேணுகாவின் அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரிடம் குணசேகரனும் பொண்ணுக்கு எடுத்துச்சொல்லி இன்னைக்கு சடங்கு சுத்துற வேலையை பாருங்க என்று கறாராக பேச, அதற்கு ரேணுகா எவன் சொன்னாலும் பரவாயில்லை நான் என் பிள்ளைக்கு சடங்கு சுத்த விட மாட்டேன் என்று கூறுகிறார்.
அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் கரிகாலனுக்கு சாப்பாடு போடாமல் நந்தினி பழிவாங்கியதை தொடர்ந்து இன்று ஜான்சி ராணி குணசேகரன் வீட்டிற்கு வந்து, அமைதியா அடக்க ஒடக்கமா வீட்டிற்கு வந்து மறு வீட்டுக்கு கூப்பிடும் போதே நெனச்சேன். ஏதோ இவுளுக நடிக்கிறாளுக என்று... அது மாதிரியே இப்ப பண்ணிட்டீங்க என்று சண்டை போட்டுக் கொண்டிருக்க, அதற்கு இப்படி அநாகரிக்குமா பேசாதீங்க. முதல்ல வீட்டை விட்டு வெளியே போங்க என்று ஜனனி மிரட்டுகிறார்.

இந்த நிலையில் ஜனனி பேசுவதற்கு குணசேகரன் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஜீவானந்தம் கௌதம் முன்னிலையில் பட்டம்மாள் மற்றும் ஜனனியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு கொளதம் அதிர்ச்சி அடைகிறார். இதனால் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது..? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications