எதிர்நீச்சல்: ஆதிரையை கொடுமைப்படுத்தும் ஜான்சி ராணி.. சிங்கமாக மாறிய "தர்ஷினி”..பரபரப்பின் உச்சம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய பிரமோவில் ஆதிரையை நீ இங்கே இருந்தது போதும் வா என்று ஜான்சி ராணி தர தரவென கையைப் பிடித்து இழுக்கின்றார்.
அதைப் பார்த்து கடுப்பான தர்ஷினி நீங்க இங்க இருந்து போறீங்களா? இல்லனா போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணவா? என்று மிரட்டுகிறார்.

இதை பார்த்து பயந்து போன கரிகாலன் குணசேகரன் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்க முடியாத பல திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றது.ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது சீரியலின் வேகம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே நேற்றைய எபிசோடில் பட்டமாலின் ஷேர் இரண்டு நாளுக்குள் ஜீவானந்தம் பெயருக்கு மாறுவதறகு எல்லா வேலைகளையும் இனி கௌதம் தான் பார்க்க வேண்டும் என்று ஜீவானந்தம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது? கௌதம் யாரு பக்கமாக நடந்து கொள்வார்? இந்த விஷயத்தை ஜனனிக்கு சொல்வாரா? இல்லையா? என்று பல்வேறு கேள்விகள் இருக்கிறது.
அதே நேரத்தில் புது மாப்பிள்ளை கரிகாலனை விருந்துக்கு கூட்டிட்டு வந்து ரசம் சோறு போட்டு விட்டார்கள் என்று ஜான்சி ராணி குணசேகரன் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார். என்னுடைய மகனை நீங்க கூட்டிட்டு வந்து இங்க ரசம் சோறு போட்டு கொடுமை படுத்துறீங்க? அதுவும் ஆதிரை ஒரு ரூமில் இருந்து வருகிறா, என் மகன் ஒரு ரூமில் இருக்கிறான். அதனால இங்க என்ன நடக்கிறது? கூப்பிடுங்க குணசேகரனை என்று பெரும் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்.

அதோடு இல்லாமல் அப்போது வீட்டு மருமகள் பற்றி அசிங்கமாக ஜான்சி ராணி பேசிக் கொண்டிருந்ததால் கோபமான ஜனனி வீட்டை விட்டு வெளியே போங்க என்று திட்டி இருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் இதுக்கு மேல இங்க பேசினா வேலைக்கு ஆகாது வா வீட்டுக்கு போகலாம் என்று ஆதிரையை ஜான்சி ராணி கையை பிடித்து இழுக்க, ஆதிரை நான் வரமாட்டேன் நாங்க இங்க தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறார்.
ஒரு கட்டத்துக்கு மேல கோபமான ஜான்சி ராணி ஆதிரையை தரதரவென கையை பிடித்து இழுக்க, எல்லோரும் தடுத்து பார்க்கிறார்கள். அப்போது கேட்காமல் மீண்டும் ஜான்சி ராணி ஆதிரையை கையை பிடித்து இழுத்துக் வெளியே கூட்டிக்கொண்டு போவதாக இருக்கும் நிலையில தர்ஷினி கோவமாகி, ஸ்டாப்பிட்... இப்ப வெளியே போறீங்களா? இல்ல போலீசுக்கு போன் பண்ணவா? என்று கைவிரலை காட்டி கோபமாக கத்துகிறார்.

அதை பார்த்த கரிகாலன் நெசமாளுமே இவங்க செஞ்சாலும் செஞ்சிடுவாங்கமா, மாமா மாதிரி இல்லை. அவரு தான் வாயிலே வடை சுடுவாரு.. என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இரவு வீட்டு வாசலில் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யா நான் இனி அந்த ஸ்கூலுக்கு போகல என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர்.
அதனால் எல்லோரும் ஏன் ஐஸ்வர்யா இப்படி பேசுறா என்று கேட்க, எனக்கு பீஸ் எங்க அப்பா கட்டுனா பரவாயில்ல. பெரியப்பா தான கட்டுறாரு. அதையே ஒவ்வொரு வாட்டியும் சொல்லி காட்டுறாரு. அதனால நான் கவர்மெண்ட் ஸ்கூல்லயே படிக்கிறேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் இனி குணசேகரன் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications