எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு எதிராக தர்ஷினி கேட்ட வார்த்தை.. ஆடிப் போன ஞானம்..கரிகாலனுக்கு அதிர்ச்சி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஐஸ்வர்யா நான் இனி கவர்மெண்ட் ஸ்கூலுக்கு தான் போவேன் என்று குணசேகரனிடம் கூறுகிறார்.
அதைக் கேட்டு குணசேகரன் சொன்ன வார்த்தைக்கு ஐஸ்வர்யா பதிலடி கொடுக்கிறார். அதனால் ஞானம் பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் கரிகாலன் எனக்கும் ஆதிரைக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடத்த வேண்டும் என்று குணசேகரனிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்றைய எபிசோட்டில் தர்ஷினி ஜான்சி ராணியை திட்டி தைரியமாக பேசி வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்தார். அதை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் தன்னுடைய மனதில் இருப்பதை எல்லாம் மொத்தமாக கொட்டிக் கொண்டிருக்கிறார்

இதுவரைக்கும் குணசேகரனுக்கு எதிராக வீட்டு மருமகள் மட்டும்தான் கேள்வி கேட்டு பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது வீட்டு குழந்தைகளும் குணசேகரனிடம் அடுத்தடுத்து குரலை உயர்த்தி கேள்வி கேட்கின்றனர். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.
நேற்றைய எபிசோட்டில் ஜீவானந்தத்திடம் அவருடைய பி ஏ பர்ஹானா நீங்க முதல் சந்திப்பிலேயே கௌதமிடம் பட்டம்மாள் சொத்து பற்றிய பிரச்சினையை கொடுத்திருப்பது சரியா? என்று கேள்வி கேட்க, இது நான் கௌதமுக்கு கொடுத்திருக்கும் டாஸ்க் அல்ல பரிச்சை இதில் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்கலாம் என்று ஜீவானந்தம் கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் ஐஸ்வர்யா நான் இனி கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போகிறேன் நான் படிக்கும் ஸ்கூலில் படிக்கவில்லை. நான் இப்போ படிக்கிறதுக்கு பெரியப்பா தான் பீஸ் கட்டுறாரு எங்க அப்பா பீஸ் கட்டல. அதனால பெரியப்பா அடிக்கடி சொல்லிக் காட்டுறாரு என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கிச்சனில் வைத்து கரிகாலன், ஆதிரை சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர்.
அப்போது கரிகாலன் சாப்பிட்டபடியே ஆதிரைக்கு ஊட்டி விட பாக்கிறார். ஆனால் ஆதிரை எனக்கு வேண்டாம் என்று மறுத்து விடுகிறார். அதே நேரத்தில் இன்னைக்கு நடக்க வேண்டியதற்கான ஏற்பாடுகளை பாருங்க அக்கா என்று கரிகாலன் சொல்ல, நந்தினி என்ன ஏற்பாடு செய்யனும் என்று கேட்க, அதான் ஃபர்ஸ்ட் நைட்க்கு ரெடி பண்ணனும் என்று கரிகாலன் சொல்கிறார்.

அதற்கு நந்தினி அவ உன்னை ஏத்துக்கவே இல்ல என்று சொல்ல, யோவ்... மாமா, எனக்கு இங்க பஸ்ட் நைட் இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க. நீ என்னய்யா தூங்கிக்கிட்டு இருக்குறியா என்று கத்தி பிரச்சனை செய்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ரேணுகா ஞானத்திடம் உங்க புள்ள கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் சேரனும்னு சொல்றா என்று சொல்கிறார்.
அதைக் கேட்டு கோவமான குணசேகரன் என் வீட்டு பிள்ளை கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சா ஊர்கார பயிலுவ என்ன சொல்லுவான்? என்று சொல்ல, எங்க அப்பாவ பீஸ் கட்ட சொல்லுங்க நான் படிக்கிறேன் என்று ஐஸ்வர்யா சொல்கிறார். இதை கேட்டு ஞானம் அதிர்ச்சியாகி நிற்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பெரும் பிரச்சனை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications