எதிர்நீச்சல்: புது பிளான் போடும் ஜனனி..வாயை மூடுடி! அதிரடி காட்டும் விசாலாட்சி..குணசேகரன் முடிவு?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி ஆதிரையை சந்தேகப்படுவதை பார்த்து கடும் கோபத்தில் அனைவர் முன்னிலையிலும் விசாலாட்சி திட்டுகிறார்.
கல்யாணம் நடக்க இன்னும் ஒரு சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில் ஜனனி புது பிளான் போட குணசேகரன் குழப்பம் அடைகிறார்.
ஜனனிக்கு ஆதரவாக விசாலாட்சி செய்யும் செயலைப் பார்த்து ஜான்சி ராணி சந்தேகமடைகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த ஆதிரை திருமணம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நடைபெற இருக்கிறது என்ற இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் திருமணம் ஜனனி நினைத்த மாதிரி அருணோடு நடக்குமா? அல்லது குணசேகரன் சொன்ன மாதிரி கரிகாலனோடு நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் திருமண நேரத்திலும் ஜான்சி ராணி செய்யும் அலப்பறையை பார்த்து குணசேகரன் கடுப்பாகி இருக்கிறார். ஏற்கனவே கரிகாலன் செய்யும் அட்டூழியங்களை பார்த்து அடிக்கடி திட்டி கொண்டு இருந்தாலும், இவன்தான் நாம என்ன சொன்னாலும் கேட்டு நடந்துக்க போற பையன் என்று மனதை தேற்றிக்கொண்டு இருந்தார்.
ஆனால் ஜான்சி ராணி குடித்துவிட்டு மண்டபத்தில் போட்ட ஆட்டத்தை பார்த்து தப்பான முடிவெடுத்து விட்டேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இதே நிலையில் ஜனனி மொத்த குடும்பத்தோடும் சேர்ந்து ஆதிரையை குடும்ப கோவிலுக்கு பரிகாரம் செய்வதற்காக கூட்டிக்கொண்டு போக வேண்டும் அங்கு வைத்து அருண் மற்றும் ஆதிரை திருமணத்தை நடத்தி வைத்து விட வேண்டும் என்று பிளான் போட்டிருக்கிறார்.
ஏற்கனவே தன் வீட்டு மருமகள் மீது சந்தேகத்தில் இருக்கும் குணசேகரன் நேற்று ஆதிரை கிளம்பி வரும் வரைக்கும் அந்த அறையை விட்டு கதிர் வரக்கூடாது என்று குணசேகரன் சொன்னதால் அறையில் தான் இருப்பேன் என்று கதிர் அடம்பிடிக்க, பிறகு விசாலாட்சி திட்டியதால் அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார் இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் 11 மணி கல்யாணத்திற்கு நாலு மணிக்கே சென்று ஆதிரையை ஜான்சி ராணி எழுப்புவதால் கோபமான விசாலாட்சி அவரைத் திட்டி அனுப்பி இருந்தார். அதை குணசேகரன் இடம் போட்டுக் கொடுத்த ஜான்சிராணி, உன் வீட்டு பொம்பளைங்க எல்லாரும் ஏதோ பிளான் போடுறாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் மனக்கோலத்தில் ஆதிரையை ரெடி பண்ணி கூட்டிக் கொண்டு வருகின்றனர். அப்போது ரேணுகாவும், ஜனனியும், குணசேகரனிடம் ஆதிரையை குடும்ப கோவிலுக்கு கூட்டிட்டு போய் பரிகாரம் பண்ணனும். சீக்கிரமா போய் பண்ணிட்டு வந்துருவோம். தாலி கட்டுறதுக்கு முன்னாடி வந்து விடுவோம் என்று சொல்கின்றனர்.
அதைக் கேட்டு சந்தேகமான ஜான்சி ராணி இது என்னப்பா புது கதையா இருக்கு. ஊரு உலகத்துல இல்லாத கட்டா இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி குடும்ப கோவிலுக்கு போகணுமா? என்று கேள்வி கேட்க, அதற்கு கோபமான விசாலாட்சி ஏய் நிறுத்துடி என்று கத்துகிறார். இதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி ஆகிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications