முதல் நாளே மாஸ் காட்டிய ஜீவானந்தம்..குணசேகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..பரபரப்பான பின்னணி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தமாக இயக்குனர் திருச்செல்வன் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
பணக்காரர்களிடம் இருந்து நிலத்தை வாங்கி ஏழைகளுக்கு கொடுக்கும் கேரக்டராக இருக்கிறார்.
முதல் நாளே பணக்காரர் ஒருவரை கடத்தி வைத்து அவரிடம் தன்னுடைய பின்புலம் பற்றி கூறுகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த தருணம் நிகழ தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் ஆதிரை திருமணத்தை மட்டுமே மையமாகக் கொண்டு கதை நகர்ந்து வந்ததால் சலிப்பு ஏற்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.
பட்டம்மாள் அப்பத்தா தான் ஒரு பிஏ படித்தவர் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய எபிசோடு பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பியது. அதற்கு பிறகு ஆதிரை திருமணத்தினால் எதிர்நீச்சல் சீரியலுக்கான விறுவிறுப்பு குறைந்து இருந்த நிலையில் தற்போது ஜீவானந்தம் அறிமுகம் ஆகி மீண்டும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றது.
ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தமாக இயக்குனர் திருச்செல்வம் அறிமுகமாக வேண்டும் என்று எதிர்பார்த்து வந்தனர். அது நேற்றைய எபிசோட்டில் நடந்திருக்கிறது. குணசேகரன் போலவே அதிகமான சொத்து சேர்த்து வைத்திருக்கும் பணக்காரர்களை கடத்தி அவர்களிடம் இருக்கும் அதிகமான சொத்துக்களை ஏழை மக்களுக்கு எழுதி வாங்கும் கேரக்டராக ஜீவானந்தம் இருக்கிறார்.
நேற்றைய எபிசோடில் ஒரு நபர் கொடைகானலில் சொத்து வாங்கி போட்டதோடு சரி ஆனால் அது எங்க இருக்கு என்று கூட தெரியாது. ஆனால் அந்த சொத்து என் பெயரில் தான் இருக்கிறது என்று உரிமை கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில், அது யாரிடம் இருந்து வாங்கப்பட்டது அதற்கு முன்பு யார் வைத்திருந்தார் என்ற தகவல்களை கேட்டு ஜீவானந்தம் அந்த ஆளை மிரட்டுகிறார். பிறகு கடைசியில் அந்த இடம் எங்களிடமிருந்து வாங்கியது பணக்காரர்கள் வர்க்கத்தால் மிரட்டி வாங்கப்பட்டது.

ஏழைகளின் சார்பாக நான் வந்திருக்கிறேன். அந்த இடம் எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று அந்த நபரை மிரட்டி கொண்டிருக்கிறார். அவருடைய மகனும் மகளும் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை பாலோ செய்து வீடியோ எடுத்து பணக்கார நபரை மிரட்டிக் கொண்டிருக்கும் ஜீவானந்தத்திற்கு அந்த நபர் சொத்தை எழுதிக் கொடுப்பாரா? என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறது.
அதே நேரத்தில் அப்பத்தா மீண்டும் ஜீவானந்தம் வந்துட்டாரா? என்று கேட்க ஜனனி இதுபற்றி புது முடிவு எடுக்க வேண்டும் என்று சக்தியோடு பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் மண்டபத்திற்கு கிளம்புவதற்காக ரெடியாகி கொண்டிருக்கும் நிலையில் சக்தி மற்றும் ஜனனியை பார்த்த குணசேகரன் அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications