Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர் நீச்சல்: அருணால் ஏமாந்த ஜனனி குரூப்..தற்கொலை முயற்சியில் குணசேகரன்..மிரட்டும் ஜான்சி ராணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி ஆதிரையை அருணுக்கு கல்யாணம் செய்து வைக்க செய்த சூழ்ச்சிகளை குணசேகரன் தெரிந்து கொள்கிறார்.

கரிகாலனையும் சக்தியையும் ஏமாற்றிவிட்டு ஜனனி, ஆதிரையை கூப்பிட்டு கொண்டு சென்றுவிட்டார் என்பது தெரிந்ததும் குணசேகரன் தற்கொலை முயற்சி செய்கிறார்.

அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி குணசேகரனை மிரட்டுகிறார்.

Ethirneechal serial 2023 June 20th promo and Episode full update

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த ஆதிரை திருமணம் பிரச்சனை உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. திருமண நடக்குமா? இல்லையா? என்பது தொடர்பாக அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

கரிகாலனை ஏமாற்றிவிட்டு ஜனனி, நந்தினி, ரேணுகா மூவரும் ஆதிரையை அருணுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சக்தி சொன்ன கோவிலுக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர். அதே நேரத்தில் கரிகாலன் போனில் சார்ஜ் இல்லாமல் குணசேகரனிடம் எதுவும் சொல்ல கூட முடியாமல் நடுத்தெருவில் இவர்களை தேடி அலைந்து கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

Ethirneechal serial 2023 June 20th promo and Episode full update

இந்த நிலையில் கடைசியாக கரிகாலன், பக்கத்தில் இருந்த பேக்கரியில் போனை சார்ஜ் போட அந்த நேரத்தில் கதிர் போன் செய்து இருவரும் ஒன்றாக சந்தித்து மண்டபத்திற்கு வந்து சேர்ந்து இருக்கின்றனர். அதுவரைக்கும், கூட்டிக்கொண்டு இன்னும் வரவில்லையே என்று குணசேகரன் விசாலாட்சி மற்றும் ரேணுகாவை பாடாய்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ரேணுகாவை மிரட்டி ஞானம் போனிலிருந்து ஜனனிக்கு போன் செய்ய வைத்த குணசேகரன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் ஜனனி போனை எடுத்ததும் ஈஸ்வரி போனை கட் பண்ணி விட்டு அவங்க போன எடுக்கவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார் அதைத் தொடர்ந்து ஜனனிக்கு அங்கு ஏதோ பிரச்சனை என்பது தெரிய வருகிறது.

Ethirneechal serial 2023 June 20th promo and Episode full update

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் சக்தி சொன்ன கோவிலுக்கு வந்த ஜனனி நந்தினி ரேணுகா ஆதிரை அனைவரும் கோவிலுக்கு என்னும் அருண் வரவில்லை என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர் அதைத் தொடர்ந்து சக்தியிடம் கெளதமுக்கு போன் பண்ணுனியா என்று கேட்க நானும் போன் பண்ணினேன் எடுக்கல என்று சக்தி கூறுகிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான ரேணுகா என்னடி இவன் இப்படி சொல்றான் போன் எடுக்கலைன்னுட்டு நெஞ்சு கூறிக் கொண்டிருக்க அதே நேரத்தில் வீட்டில் புடவையில் தூக்கு போட முயற்சி செய்த குணசேகரனை குடும்பத்தினர் அனைவரும் காப்பாற்றி வைத்திருக்கின்றனர் அப்போது ஜான்சி ராணி குணசேகரனிடம் நீ முடிவு பண்ணிக்க உன்ன அண்ணன்னு கூப்பிடனுமா இல்லையா என்று இந்த கல்யாணத்துல தான் தெரியப்போகுது என்று மிரட்டுகிறார் இந்த நிலையில் இனி குணசேகரன் எடுக்க போகும் முடிவு என்ன என்பது பரபரப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+