எதிர்நீச்சல்: ஆதிரை கழுத்தில் தாலி கட்டிய கரிகாலன்.. ஜனனி செய்த பைத்தியக்காரத்தனம்.. திடீர் அதிர்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த ஆதிரை திருமணம் இன்று நடைபெற்று இருக்கிறது.
ஜனனி எந்த செயலும் செய்ய முடியாமல் நடுத்தெருவில் விழுந்து அழுது கொண்டிருக்கிறார்.
மொத்த குடும்பமும் ஜனனி ஆதிரை பிரச்சனையை பாத்துக்குவா என்று நினைத்திருந்த நிலையில் குணசேகரன் தான் நினைத்ததை சாதித்து விட்டார்.

எதிர்நீச்சல் சீரியலில் பல மாதங்களாகவே இழுத்துக் கொண்டு இருந்த ஆதிரை திருமணம் இன்றைய எபிசோட்டில் நடைபெற இருக்கிறது. ஆதிரை திருமணம் யாரோடு நடைபெறும் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் கரிகாலன் ஆதிரை கழுத்தில் நடு தெருவில் தாலி கட்டி இருக்கிறார்.
நேற்றைய எபிசோடில் கோவிலுக்கு குறித்த நேரத்திற்குள் அருண் வராததால் ஜனனி தவித்துக் கொண்டிருக்க, கௌதம் தன்னால் முடிந்த அளவிற்கு எல்லா இடமும் தேடி விட்டு இங்கே இருந்து அருண் கிளம்பி போயிருக்கிறான். ஆனால் பாதி இடத்திற்கு பிறகு அவன் காணாமல் போய் இருக்கிறான். எங்க போனான் என்று தெரியவில்லை என்று கௌதம் கூறி விட அதிர்ச்சியில் ஜனனி இருக்கிறார்.
அதே நேரத்தில் ஜனனி கோவிலில் ஆதிரையோடு இருக்கும் விஷயம் குணசேகரனுக்கு தெரிய வர காரில் வேகமாக குணசேகரன் கரிகாலன் மற்றும் தன்னுடைய தம்பிகளை கூப்பிட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கும் வழியில் கூட பல தடங்கல்கள் வந்தாலும் தான் கண்டிப்பாக எப்படியும் அந்த கோவிலுக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவேன் என்று கூறிக்கொண்டு வந்தார்.
அதே நேரத்தில் கரிகாலா... உன்னுடைய கல்யாணம் ரொம்ப வித்தியாசமா நடக்க போகிறது என்றும் கூறியிருந்தார். அப்போது கூட இந்த கல்யாணம் நடக்கலைன்னா உங்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன் எல்லார் தலையையும் சீவி போட்டுடுவேன் என்று ஜான்சி ராணி மிரட்டி கொண்டு இருந்தார். அந்த நிலையில் இந்த இடம் அண்ணனுக்கு தெரிந்துவிட்டது இங்கே இப்போ வந்துருவாரு நாம இங்கிருந்து போகணும் என்று சக்தி கூறிக் கொண்டிருந்தார்.
அனைவரும் கோவிலை விட்டு போய்விடலாம் என்று கிளம்பும்போது சரியாக குணசேகரன் குடும்பத்தோடு அந்த கோவிலுக்கு வந்துவிட கோவிலில் பெரும் கலவரம் நடக்கிறது. ஆதிரையை ஜான்சி ராணி அடிக்காத குறையாக போட்டு உலுக்கி எடுத்து மிரட்டிக் கொண்டிருக்க, எல்லா பிளானும் நான் மட்டும்தான் போட்டேன் நான்தான் ஆதிரை அருணுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைத்தேன் என்று ஜனனி மொத்த பலியையும் தன் மீது போட்டுக் கொள்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரையை கோவிலில் இருந்து தரதரவென இழுத்தபடி குணசேகரன் ஒரு பக்கமும் கதிர் ஒரு பக்கமும் இழுத்துக் கொண்டு வர, சக்தி அதை தடுக்க பார்க்க ஞானம் சக்தியை தள்ளி விடுகிறார். அதைத் தொடர்ந்து மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்த விசாலாட்சி ரேணுகாவிடம் நம்மளையே போட்டு அந்த பாடு படுத்தினானே அங்க போய் என்ன செய்யப் போறானோ என்று பயப்படுகிறார்.
அதற்கு ரேணுகா பயப்படாதீங்க அத்தை அது எல்லாத்தையும் ஜனனி பாத்துக்குவா என்று கூறுகிறார். அந்த நேரத்தில் நடுத்தெருவில் வைத்து குணசேகரன் அங்கு இருக்கும் ஊர்க்காரர்களின் முன்னாடியே இது என்னுடைய ஒரே தங்கச்சி, அவளுக்கு நாங்க இங்க வச்சு கல்யாணத்தை பண்ண போறோம் என்று சொல்லி கையில் இருந்த மஞ்சள் கயிற்றை கரிகாலனிடம் கொடுத்து கரிகாலா கட்டுடா தாலியை என்று கூறுகிறார்.
நந்தினி, ரேணுகா என அழுது கொண்டு இருக்க ஆதிரை கழுத்தில் கரிகாலன் தாலி கட்டி விடுகிறார். இதை பார்த்த ஜனனி தெருவில் விழுந்து அழுகிறார். தற்போது இந்த பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த மாதிரி கல்யாணம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கலையே, கடைசியில் ஆதிரைக்கு கரிகாலனோடு கல்யாணம் முடிந்து விட்டதா என்று பலரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications