எதிர்நீச்சல்: குணசேகரனை கொலை செய்ய துணிந்த சக்தி.. கடும் வாக்குவாதம்.. வீட்டை விட்டு போகும் ஜனனி?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்காக சக்தி கதிரை அடித்து குணசேகரனை அவமானப்படுத்தி அடுக்கடுக்காக கேள்விகளை கேட்கிறார்.
அதோடு கதிர் மற்றும் குணசேகரன் இருவரும் சக்தியை ஜனனியோடு சேர்ந்து வீட்டை விட்டு போகும் படி கூறுகின்றனர்.
அதன்படி சக்தி மற்றும் ஜனனி இருவரும் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜூன் 28ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் விசாலாட்சி வீட்டில் அழுது கொண்டு இருக்க வீட்டிற்கு வரும் குணசேகரன் சாமி கும்பிட்டு தன்னுடைய தங்கையின் திருமணம் நான் நினைச்ச மாதிரியே நடந்துட்டு என்று சந்தோஷப்பட்டு கொண்டு இருக்கிறார்.

அப்போது விசாலாட்சி ஆதிரையை எங்கே என்று கேட்க, அதற்கு குணசேகரன் அவ எங்க இருக்கணுமோ அங்க போயிட்டா என்று சொல்ல, விசாலாட்சிக்கும் குணசேகரனுக்கும் வாக்குவாதம் அதிகரிக்கிறது. நான் ஆசையா பெற்றெடுத்த என்மகா வாழ்க்கையை நாசமாக்கிட்டா என்று விசாலாட்சி குணசேகரனை திட்டி அழுகிறார்.
அது எல்லாம் பார்த்தும் மனம் மாறாமல் நிற்கும் குணசேகரன் இதே அழுகை நாடகம் போட்டு தான் மண்டபத்தில் இருந்து ஆதிரையை ஓட வச்சா? இப்போ இதே அழுகை போட்டாய் இனி நான் நம்ப மாட்டேன் என்று சொல்ல, அருகில் இருந்த ஈஸ்வரி குணசேகரனிடம் உங்க ஆசைக்கு தான் எங்களுடைய வாழ்க்கை இருக்கணுமா? எங்களுடைய வாழ்க்கையுடைய முடிவு எடுக்கிற உரிமை உங்களுக்கு யார் தந்தது? என்று கேள்வி கேட்கிறார்.
அதுக்கு நக்கலாக குணசேகரன் இப்படி எல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு சொல்லி தந்த அந்த மெட்ராஸ்காரி எங்க அவ? வரட்டும் கூடவே இருக்கிற இன்னும் ரெண்டு பேரு எங்க போனாங்க? வீட்டுக்கு வந்தாங்களா? என்று கேட்டுக் கொண்டிருக்க மாடியில் இருந்து ரேணுகாவும் நந்தினியும் குணசேகரன் பேசுவதை கேட்டு கோபத்தில் நினைக்கின்றனர். அப்போது கதிர் அவர்கள் இருவரையும் பார்த்து மாடியில் நிக்கிறாங்க அண்ணே என்று சொல்ல, குணசேகரன் அவர்கள் இருவரிடமும் மேலிருந்து பார்த்து ரசிக்கிறீர்களா? என்று நக்கல் செய்கிறார்.
அதைத் தொடர்ந்து நல்லா பாருங்க உங்க தலைவி வரட்டும் அவளுக்கு இருக்குது. அதுக்கு பிறகு தான் உங்களுக்கு என்று மிரட்டி கொண்டிருக்கிறார். அப்போது ஜனனியும் சக்தியும் ஆட்டோவில் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களை பார்த்ததும் குணசேகரன் இப்ப எதுக்கு இங்க வந்தா? அன்னைக்கு ஏதோ என் பேரை சொல்லி கூப்பிட்டு சவால் விட்ட, உங்க ஆசைப்படி தான் கல்யாணம் நடக்கும்னு சொன்ன? ஆனா இப்ப யாரு ஜெயித்தது என்று ஜனனியிடம் கேட்கிறார்.
அதற்கு ஜனனி இப்பவும் நாங்க தான் ஜெயிச்சோம். நீங்க உங்க தங்கச்சிக்கு சரியான வாழ்க்கைக்கு கொடுக்காமல் தோத்துட்டீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க, நீயும் சரி.. இந்த வீட்ல இருக்குற பொம்பளைங்களும் சரி, என்னதான் கூடி முடிவெடுத்தாலும் கடைசியில் ஒன்னும் ஆகப் போறது இல்லன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு நீ வீட்டை விட்டு வெளியே போயிடு, என்கிட்ட மன்னிப்பு கேக்குறவங்க இவளை தவிர மிச்ச எல்லாரும் வீட்டுக்குள்ள போகலாம் என்று குணசேகரன் கூறுகிறார்.
அதற்கு ஜனனி எதிற்கு பேசிக் கொண்டிருக்க அருகில் இருந்த கதிர் ஜனனியை அடிக்க பார்க்கிறார்.அப்போது சக்தி கதிரை அடித்து என் பொண்டாட்டிய யாராவது ஏதாவது சொன்னா நான் கழுத்தை அறுத்து போட்டு விடுவேன் என்று சொல்ல, குணசேகரன் நீ தப்பான முடிவு எடுக்கிற.. நீ தப்பா இன்னொருத்தர் பேச்சை கேட்டுட்டு ஆடிக்கிட்டு இருக்க என்று சொல்ல, குணசேகரன் மீது தனக்கு இருக்கும் கோபத்தை எல்லாம் சக்தி கேள்வி கேட்கிறார்.
அத்தோடு இனி யாராவது என் பொண்டாட்டிய பத்தி ஏதாவது சொன்னா யாருன்னு பாக்க மாட்டேன் சங்க அறுத்து போட்டுட்டு போயிட்டே இருப்பேன் என்று சொல்ல, குணசேகரன் அதிர்ச்சியாகி நிற்கிறார். அதற்கு கதிர் நீயும் உன் பொண்டாட்டியோட வீட்டை விட்டு வெளியே போடா என்று சொல்ல, நான் போறேன் என்று பேசிய சக்தியை தடுத்த ஞானத்திடம் உன்ன மாதிரி எல்லாம் என்னால மானங்கெட்டு போய் இருக்க முடியாது. என்ன நம்பி வந்த என் பொண்டாட்டியை யாரும் ஒரு வார்த்தை சொன்னால் நான் இனி விடமாட்டேன் என்று சொல்ல, அதற்கு குணசேகரன் இன்னைக்கு பொண்டாட்டி எங்க இருந்து வந்தா? அன்னைக்கு உனக்கு டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு உன்னை அடிச்சிட்டு போனவ தானே என்று கேட்கிறார்.
அதற்கு ஆமா அவ என்ன அடிச்சா அதுல என்ன தப்பு? நான் உங்க பேச்சை எல்லாம் கேட்டதினால் தான் நான் அவகிட்ட தப்பா நடந்துகிட்டேன். என்னை நம்பி வந்த பொண்ணை நா நிற்கதியா விட்டது தப்புதான். அது எனக்கு இப்பதான் புரியுது. ஒரு ஆம்பள என்கிற திமிருல நம்மள நம்பி வந்தவங்கள மரியாதை கொடுக்காமல் அவங்க ஆசைக்கு குறுக்க நிக்கிறது தப்புதான், என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சியில் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications