சக்திக்கு ஜனனி கொடுக்கப் போகும் பதில்!? குணசேகரனுக்கு எதிராக ஜான்சி ராணி செய்யப் போகும் பிளான்?
குணசேகரன் தன்னை அவமானப்படுத்தி அனுப்பி விட்டதால் ஜான்சி ராணி குணசேகரனுக்கு எதிராக மாறி இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் புது பிளான் போட்டு ஆதிரையின் திருமணத்தில் தன்னுடைய பகையை தீர்த்துக் கொள்ள இருக்கிறார்.
ஏற்கனவே திருமண விஷயத்தில் ஒரு முறை ஏமாந்த கரிகாலனுக்கு மீண்டும் குணசேகரனால் ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.
குணசேகரனை போட்டு தள்ள ஜான்சி ராணி முடிவெடுத்து இருக்கிறார்.

குணசேகரனின் மனமாற்றம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஆதிரை திருமண விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை இருந்து வந்த நிலையில் தற்போது குணசேகரன் ஆதிரை சொத்துக்கு ஆசைப்பட்டு அவருக்கு பிடித்த அருணையே திருமணம் செய்து வைத்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்.

பழிவாங்க துடிக்கும் ஜான்சி ராணி
தன்னை ஏமாற்றிய குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்று ஜான்சி ராணி ஆள் செட் பண்ணி குணசேகரனுக்கு எதிராக பல வேலைகளை செய்து வருகிறார்.

பட்டம்மாள் முடிவு
பட்டம்மாள் எவ்வளவு சொல்லியும் வீட்டில் இருக்கும் மருமகள்கள் தங்களுடைய சுய புத்தியால் முன்னுக்கு வர முயற்சி எடுக்காத நிலையில் அவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் 40% ஷேரில் புது முடிவு எடுத்து விட்டு வந்திருக்கிறார்.

ஜனனி எடுக்க போகும் முடிவு
இதுவரைக்கும் அண்ணன் பேச்சை கேட்டு ஜனனி எனக்கு வேண்டாம் என்று டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்த சக்தி இப்போது ஜனனிதான் என்னுடைய மனைவி என்று அனைவர் முன்னிலையிலும் ஜனனிக்காக போராடி இருக்கும் நிலையில இனி அடுத்த திருப்பம் வர இருக்கிறது.

சக்தியை பாராட்டும் அப்பத்தா
இந்த நிலையில் அப்பத்தா கதிரிடம் இன்னைக்கு வந்து உன்னுடைய மனைவி எல்லாரும் பேசிட்டாங்கன்னு இந்த குதிக்கிறியே உனக்கு இன்னும் அந்த உரிமை இருக்கா? என்று கேட்க, அதை முடிவு பண்ண வேண்டியது ஜனனி. அவள் என்னை மன்னிக்கிறாளோ? தண்டிக்கிறாளோ? அது அவளோட விருப்பம். அதை பத்தி யாரும் பேச வேண்டாம் என்று சொல்ல, அப்பத்தா நல்ல பேச கத்துக்கிட்ட சக்தி என்று கைதட்டி இதே போல எப்பவும் இருந்தா எனக்கு சந்தோசம் என்று கூறுகிறார். இதே மாதிரி உன்னுடைய பொண்டாட்டிக்காக எந்த சூழ்நிலையை வந்தாலும் நீ நிக்கிறியான்னு பார்க்கிறேன் என்று பட்டம்மாள் கூறியிருக்கிறார்.

அப்பத்தாவின் பிளான்
தன்னுடைய ஷேர் விஷயத்தில் வீட்டில் இருக்கும் மருமகள்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த 40% வைத்து குணசேகரனை பணிய வைக்கிறேன் என்று சொன்னதை அவர்கள் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் இந்த 40% வைத்து குணசேகரனை மட்டும் அல்ல குணசேகரனை போல இருக்கும் பலருக்கும் பதில் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தன்னுடைய பிளானை அப்பத்தான் தெரிவிக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications