குணசேகரனின் சூழ்ச்சியை கண்டுபிடித்த அப்பத்தா..மனம் மாறிய விசாலாட்சி..நந்தினியை மிரட்டிய ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் கேரக்டரை அனைவரும் முன்னாடியும் அப்பத்தா நிரூபித்து இருக்கிறார்.
சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் குணசேகரன் ஆதிரையின் திருமண விஷயத்தில் டபுள் கேம் விளையாடி வருகிறார்.
இதுவரைக்கும் மருமகளுக்கு வில்லியாக இருந்த விசாலாட்சி மருமகள்களின் மீது பாசத்தை காட்ட தொடங்குகிறார்.
நந்தினி, அப்பத்தா மற்றும் ஜனனியை தவறாக புரிந்து கொண்டிருப்பதற்கு ஜனனி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

மனம் மாறிய மாமியார்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இந்த வாரத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் விசாலாட்சி தன்னுடைய மருமகள்களிடம் கடுமையாக நடந்து நடந்து கொண்டு இருந்தார். ஆனால் இன்று முதல் முறையாக மருமகள்களின் மீது பாசத்தை காட்ட தொடங்கி இருக்கிறார். தன்னுடைய மகன் குணசேகரனுக்கு எதிராக சமீப காலமாக எதிர்த்து பேசி வரும் விசாலாட்சி ஜனனியை பற்றி நல்ல விதமாக ஜனனியின் அம்மாவிடம் பேசுகிறார்.

இதுவரைக்கும் இருந்த குணம்
கால் மூட்டு வலியில் இருக்கும் விசாலாட்சிக்கு அடிக்கடி மருந்து போட்டுக் கொண்டிருந்தால் சரியாகாது அதற்கு முறையான சிகிச்சை செய்ய வேண்டும் என்று சென்னைக்கு ஜனனி கூட்டிக்கொண்டு சென்றிருக்கும் நிலையில் அங்கே வரும் ஜனனியின் அம்மாவிடம் விசாலாட்சி நல்ல முறையில் பேசுகிறார். இதுவரைக்கும் வீட்டில் சம்மந்தியிடம் கடுமையாக தான் பேசிக் கொண்டிருந்தார். ரேணுகாவின் அம்மாவாக இருந்தாலும் சரி, நந்தினி என் அப்பாவாக, இருந்தாலும் சரி, இல்லை ஈஸ்வரியின் அப்பாவாக இருந்தாலும் சரி தங்கள் வீட்டில் பெண் கொடுத்து விட்டால் தங்களுக்கு அடிமைகள் என்கிற மாதிரி தான் விசாலாட்சி நடந்து கொண்டு இருந்தால் ஆனால் இப்போது முற்றிலும் மாறி இருக்கிறார்.

அசிங்கப்படுத்திய அப்பத்தா
இந்த நிலையில் குணசேகரன் ஒரு பக்கம் ஆதிரைக்கு எஸ் டி ஆர் தம்பியோடு திருமணம் செய்து வைக்க சரி என்று அப்பத்தாவிடம் 40% ஷேர் எனக்கு வேண்டும் என்று டீலிங் பேசி இருக்கிறார். அதே நேரத்தில் ஜான்சி ராணி இடமும் கரிகலனுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று வீடியோவில் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தனது தங்கைக்காக எல்லாமே செய்வது போல பேசிக் கொண்டிருக்கும் குணசேகரனிடம் நீ 40% ஷேருக்காக தானே இப்படி செய்கிறாய் என்று அனைவரும் முன்னிலையிலும் அப்பத்தா பேசி அசிங்கப்படுத்துகிறார்.

புரிஞ்சிக்காத நந்தினி
இந்த நிலையில் அப்பத்தா 40% ஷேர் குணசேகரனின் பெயருக்கு எழுதிக் கொடுக்க சம்மதம் என்று சொன்னதால் ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மூவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதை வைத்து தான் தங்களை காப்பாற்ற வைத்திருந்தார்கள். ஆனால் அதையும் இப்போது அவர்களுடைய ரத்த சொந்தத்துக்கு ஆக கொடுக்க முடிவு செய்துவிட்டார்களே என்று குழம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல நந்தினி அப்பதாவுக்கு சாதமாக தான் ஜனனியும் இருக்கிறார் என்று ஜனனியை முகத்துக்கு நேராகவே திட்டுகின்றனர். இதனால் ஜனனி நீங்கள் என்னிடம் பேசாமல் இருக்காதீங்க. நான் உங்களை என்னுடைய அக்கா என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்பத்தா என்ன முடிவு எடுத்திருக்காங்க எனக்கு தெரியாது. நான் உங்களுக்காக தான் இந்த வீட்டை விட்டு போன பிறகு மீண்டும் திரும்பி வந்தேன் என்று விளக்குகிறார். பிறகு நந்தினி சமாதானமாகி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications