கடைசி நேரத்தில் குணசேகரனை அவமானப்படுத்திய அப்பத்தா... புது பிளான் போடும் ஜனனி.. அடுத்த பிரச்சனை ரெடி
அப்பத்தா எடுக்கும் முயற்சிகளை தெரிந்து கொண்ட குணசேகரன் புது முடிவு எடுக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் எஸ்கேஆர் வீட்டிற்கு சென்று திருமண பேச்சு வார்த்தை பேசி இருக்கிறார்.
எஸ் கே ஆர் வீட்டில் குணசேகரனுக்கு அடுத்தடுத்த அவமானங்கள் ஏற்படுகிறது.
எஸ்கேஆர் தம்பி அரசு ஜனனியை வைத்து குணசேகரனுக்கு எதிராக புது திட்டம் போடுகிறார்.

அடுத்தடுத்த எதிர்பார்ப்புகள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பல எதிர்பாராத ட்விஸ்ட்கள் நடைபெற்று வருகிறது. குணசேகரனின் முடிவு பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்கும் நிலையில் குணசேகரனுக்கு எதிராக அப்பத்தாகவும் புது பிளான் செய்து வருகிறார். தான் செய்யும் காரியங்கள் என்ன என்பதை பற்றி வெளிப்படையாக தெரிவிக்காமல் குணசேகரன் ஒரு பக்கமும் அப்பத்தா ஒரு பக்கமும் காய் நகர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆதிரையில் திருமணம் யாரோடு நடக்கும் என்பது பற்றி பெரும் எதிர்பார்ப்பும் அதிகரிக்க அதிகரித்திருக்கிறது.

குணசேகரனின் மனமாற்றம்
ஆதிரையின் திருமணத்திற்கு குணசேகரன் சம்மதிப்பதற்காக 40% ஷேர் தருகிறேன் என்று அப்பத்தா சொன்ன பிறகு ஆதிரையின் திருமணமதிருக்கு குணசேகரன் சம்மதித்திருக்கிறார். இந்த நிலையில் எஸ்கேஆர் வீட்டில் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தாம்பூலம் தட்டு மாத்த வேண்டும் என்று அப்பத்தா கூறியதால் குணசேகரன் தான் தனக்கு ஒரு காரியமாக வேண்டுமென்றால் யாருடைய காலையும் பிடிப்பேன். எனக்கு அது தேவையில்லை என்றால் காலை வாரவும் செய்வேன் அதனால் நானே போய் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிச்சிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார்.

அவமானப்படுத்தும் எதிரி குடும்பம்
குலசேகரர் கூட ஜனனி மட்டுமே எஸ் கே ஆர் வீட்டுக்கு செல்கிறார். எஸ் கே ஆர் வீட்டில் செல்வதற்கு முன்பே அரசு குணசேகரனை அவமானப்படுத்துகிறார். இதற்கு முன்பு குணசேகரன் செய்த செயல்களை எல்லாம் நக்கலாக சொல்லிக்காட்டுகிறார் ஆனால் அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத குணசேகரன் வீட்டிற்குள் வந்ததும் உள்ளே இருந்த எஸ் கே ஆர் ஐ பார்த்து வணக்கம் முதலாளி எப்படி இருக்கீங்க என்று இயல்பாக பேசுகிறார். ஆனாலும் எஸ்கேஆர் குணசேகரனை மட்டம் தட்டி அவருடைய கேரக்டரை குத்தி காண்பித்து பேசுகிறார்.

எஸ்கேஆர் முடிவு
எஸ்கேஆர் எனக்கு உன்னோடு சம்பந்தம் வைத்துக் கொள்வது துளியும் விருப்பமில்லை. அதனால் உன்னுடைய தங்கச்சி இந்த வீட்டில் வந்தால் நல்லபடியாக சந்தோஷமாக வாழ்வதற்கான சூழ்நிலை இருக்காது. இது என்னுடைய முடிவு வீட்டில் நாங்கள் யாருடைய கருத்துக்கும் இடையூறு செய்வது கிடையாது. அதனால் நான் இந்த தாம்பூலத்தை வாங்க மாட்டேன். வேறு யாரும் நீ கொண்டு வந்திருக்கிற தாம்பூலத்தை வாங்கினால் நான் தடுக்கவும் மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

குணசேகரனின் புது ப்ளான்
அதற்கு குணசேகரன் எனக்கு தெரியும் முதலாளி உங்களுடைய குணத்தை. உங்கள் பக்கத்தில் இருந்தே பார்த்தவன் நான் அதனால் உங்களை பற்றி என்னால புரிஞ்சுக்க முடியும். அரசு இடம் குணசேகரன் தாம்பூல தட்டை வாங்கிக்கொள் என்று சொல்ல, வேண்டாம் இதுவெல்லாம் நாங்க வாங்கின நல்லா இருக்காது. வீட்டு பெண்கள் தான் வாங்க வேண்டும் வீட்டில் எல்லோரும் வெளியே சென்று இருப்பதால் எங்க வீட்டு சார்பாக ஜனனியே இந்த தாம்பூல தட்டை வாங்கிக் கொள்ளட்டும் என்று கூற, குணசேகரன் ஜனனியிடம் தாம்பூல தட்டை மாற்றிக் கொள்கிறார். இந்த நிலையில் புது ப்ரோமோவில் என்னதான் எனக்கு எதிராக எல்லோரும் முயற்சிகள் செய்து கொண்டிருந்தாலும் அதை முடித்து வைக்க போறது நான்தான் என்று குணசேகரன் திமிராக பேசுகிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications