எதிர்நீச்சல்: காலில் விழுந்த குணசேகரன்.. மகிழ்ச்சியில் ஜனனி எடுத்த முடிவு.. தொடங்கியது புது ட்ராக்
ஞானத்தின் காலில் விழுந்து குணசேகரன் மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 8ஆம் தேதியில் ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தனக்கு உதவிய ஞானத்திடம் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி குணசேகரன் கெஞ்சுகிறார்.
ஜனனி, நந்தினி மற்றும் ஈஸ்வரியோடு சேர்ந்து ஆதிரைக்கு அருணை திருமணம் செய்து வைப்பதாக சத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.

அவமானப்படுத்திய குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குணசேகரன் ஞானம் ஆதிரை திருமண விஷயத்தில் தன்னை எதிர்த்து பேசியதால் நீ எல்லாம் என்னை பேசுவதற்கு அருகதை கிடையாது. எனக்கு சமமானவன் கிடையாது என்று அசிங்கப்படுத்தி திட்டி இருந்தார். அடுத்த நாள் காலையில் ஞானம் குணசேகரன் உடன் ஒன்றாக சாப்பிடுவதற்கு டைனிங் டேபிளில் உட்காரும்போது கூட என்னோடு சரிசமமாக உட்காருவதற்கு உனக்கு அருகதை கிடையாது என்று சாப்பிடும் வேலையிலும் திட்டி அனுப்பி இருந்தார்.

ஞானத்தின் செயல்
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் குணசேகரனை அரசுவின் அடியாள்கள் அடிக்கும் போது அந்த பக்கமாக வந்த ஞானம் மனம் கேட்காமல் ஓடி சென்று அந்த அடியாள்களை அடித்து துரத்தி குணசேகரனை காப்பாற்றினார். பிறகு குணசேகரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கிளம்பி சென்று விட்டார். குணசேகரன் எவ்வளவோ தம்பி ஞானம் என்று கூப்பிட்டாலும் அதற்கு திருப்பிக் கூட பார்க்காமல் ஞானம் சென்று கொண்டே இருந்தார். நான் அன்று செஞ்சது தப்புதான், ஞானத்தை நான் அப்படி அவமானம் செய்திருக்க கூடாது என்று நேற்றைய எபிசோடில் கதிரிடம் குணசேகரன் கதறி அழுது கொண்டிருந்தார்.

மருமகள்களின் சத்தியம்
ஏற்கனவே அருண் ஆதிரையை நான் திருமணம் செய்து காட்டுகிறேன் என்று குணசேகரன் முன்பு நேற்று சவால் விட்டிருக்கும் நிலையில் இன்று மருத்துவமனையில் இருக்கும் ஆதிரையை அருண் மற்றும் அரசு இருவரும் நேரில் போய் பார்க்கின்றனர். அங்கே ஜனனி, நந்தினி, ஈஸ்வரி மூவரும் ஆதிரையை அவருக்கு பிடித்த அருனுடன் தான் நாங்கள் திருமணம் செய்து வைப்போம் இது சத்தியம் என்று மூவரும் சத்தியம் செய்து கொண்டிருக்கின்றனர்.

காலில் விழுந்த குணசேகரன்
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த குணசேகரன் அங்கே இருக்கும் ஞானத்திடம், என் மேல ஒரு நாலு பேரு கை வச்சுட்டானுங்க என்று சொன்னதும் நீ சிங்கம் மாதிரி உள்ளே பாஞ்சால அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அண்ணனை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்றா? என்ன மன்னிச்சிடு என்று ஞானத்தின் காலில் குணசேகரன் விழுந்து கதறி அழ ஆரம்பத்தில் எதற்கும் அசராத ஆளாக ஞானம் நின்று கொண்டிருக்க, பிறகு கதிர் மற்றும் குணசேகரன் இருவரும் தொடர்ந்து ஞானத்தின் மனதை மாற்றுகின்றனர். இதை பார்த்து தர்ஷன் அதிர்ச்சியாக இருக்க, ரேணுகா இந்தா ஆரம்பிச்சிட்டாங்களா நாடகத்தை? இனி என்னென்ன பிரச்சனை பண்ண போறாரோ என்று மனதிற்குள்ளே புலம்பி கொண்டிருக்கிறார். இந்த பிரமோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications