அப்பத்தாவை கடத்திய குணசேகரன்..வெளிச்சத்துக்கு வந்த உண்மை..யார் அந்த ஜீவானந்தம்? பரபரப்பான தருணம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் மே ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அப்பத்தாவை குணசேகரன் கடத்திக்கொண்டு வந்திருக்கிறார்.
அப்பத்தாவை காணாமல் ஜனனி தவித்துக் கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்திருந்த பல திருப்பங்கள் நடைபெற தொடங்கியிருக்கிறது. அப்பத்தா இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பல ட்விஸ்ட் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் அப்பாவிடம் கையெழுத்து வாங்கியது செல்லாது, 40% ஷேர் குணசேகரனுக்கு வராது என்று ஜனனி கூறியதை தொடர்ந்து குணசேகரன் வில்லத்தனமாக யோசித்து மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் அப்பத்தாவை ஆள் வைத்து கடத்தி இருக்கிறார்.. அப்பத்தாவின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் ஜனனி ஒரு பக்கம் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பத்தா எங்க போயிருக்கிறார் என்பது தெரியாமல் இப்போது அடுத்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.

அதே நிலையில் கோமாவில் இருந்து கண்விழித்த அப்பத்தா முதன்முறையாக ஜீவானந்தன் என்ற பெயரை கூறியிருக்கிறார். யார் அந்த ஜீவானந்தன் என்று ஜனனிக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இனி ஜீவானந்தத்தை ஜனனி கண்டுபிடித்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறாரா? அல்லது அப்பத்தாவை கண்டுபிடித்து குணசேகரனை பழிவாங்க இருக்கிறாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏற்கனவே புது ஜீவானந்தன் யார் என்று தெரியாமல் இருக்கும் நிலையில் தற்போது அப்பத்தாவை கடத்திக் கொண்டு வைத்திருக்கும் குணசேகரன் நர்ஸ் ஒருவரிடம் அப்பத்தாவை கவனித்துக் கொள்ளும்படி சொல்ல, அந்த நர்ஸ் நல்லாவே கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்ல, நல்லாவெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டாம். கவனித்துக் கொண்டால் மட்டும் போதும் என்று குணசேகரன் கூறுகிறார் இதனால் அப்பத்தாவை கொலை செய்ய முயற்சி செய்கிறாரா? என்ற கேள்விகளும் எழுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications