வெளிச்சத்துக்கு வந்த உண்மை..கதிரை அடிக்க பாய்ந்த ஜனனி..எதிர்த்து பேசும் சக்தி..பரபரப்பான திருப்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை பார்க்க வேண்டும் என்று ஜனனியும்,சக்தியும் குணசேகரிடம் சண்டை இடுகின்றனர்.
அதற்கு பார்க்க விட முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய் என்று கதிர் ஜனணியிடம் சவால் விடுகிறார்.
குணசேகரனை எதிர்த்து பேசும் சக்தியை வீட்டில் இருக்கும் பெண்கள் பாராட்டுகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அதிரடியான பல திருப்பங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி நடக்க தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் ஆதிரையின் திருமண விஷயத்தில் இந்த சீரியல் இழுத்துக் கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்த நிலையில், தற்போது அதிரடியான பல விஷயங்கள் நடக்க தொடங்கி இருக்கிறது.

என்ன நடக்கப் போகிறது என்று எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பார்க்க முடியாத திருப்பங்களும் யோசிக்க முடியாத கதைகளமும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே 40% ஷேர் குணசேகரனுக்கு இல்லை என்று ஜனனி கூறியதை கேட்டு குணசேகரன் புலம்பி கொண்டு மருத்துவமனையில் இருந்த அப்பத்தாவை கடத்திக் கொண்டு வீட்டில் வைத்திருக்கிறார்.
அப்பாவை கவனித்துக் கொள்வதற்காக நர்ஸ் ஒருவரை வேலைக்கு வைத்திருக்கும் குணசேகரன் நர்ஸிடம் அப்பத்தாவை ரொம்ப நல்லாவெல்லாம் பார்க்க பார்த்துக்க்க வேண்டாம், பார்த்துக் கொண்டால் மட்டும் போதும் என்று கூறியிருக்கிறார். எப்படியாவது அந்த சொத்து முழுசா நமக்கு கிடைத்தால் மட்டும் போதும் அப்பத்தாவை பார்க்கத் தேவையில்லை என்று நினைப்பில்தான் அவர் இருந்து வருகிறார்.

அப்பத்தாவை கடத்திய குணசேகரன்..வெளிச்சத்துக்கு வந்த உண்மை..யார் அந்த ஜீவானந்தம்? பரபரப்பான தருணம்
அப்பத்தாவிற்கு மேல் சிகிச்சை செய்வதற்காக பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த ஜனனி, மருத்துவமனையில் இருந்து மாற்றிய அப்பத்தாவை காணாமல் சக்தியோடு தேடி அலைந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் அப்பத்தா வீட்டில் தான் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்.
அப்போது குணசேகரனிடம் சக்தி, எனக்கு உரிமை இருக்கு நான் போய் பார்ப்பேன் என்று சொல்ல, அதற்கு அந்த கிழவிக்கு நீங்க என்னடா செஞ்சு இருக்கீங்க என்று குணசேகரன் கேட்க, நீங்க என்ன செஞ்சீங்க அவங்களுக்கு என்று சக்தி கேட்கிறார். பிறகு ஜனனி நான் அப்பத்தாவை பாக்கணும் முடியுமா? முடியாதா? என்று கேட்க அதற்கு கதிர் முடியாது என்று கத்துகிறார்.

கதிர் கத்துவதை கேட்டு ஈஸ்வரி பயந்தபடியே ஐயோ என மேலே பார்க்கிறார். பிறகு உன்னால் என்ன பண்ண முடியுமோ போய் பண்ணு என்று கதிர் சொல்ல, ஜனனி மாடிக்கு செல்கிறார். ஜனனியை அப்பத்தாவை பார்க்க விடாமல் கதிர் கையைப் பிடித்து தரதரவென கீழே இழுத்தபடி வருகிறார். பிறகு ஜனனி கதிரை அடிக்க கையை ஓங்கி போக நந்தினியும், ரேணுகாவும் தடுத்து நிறுத்துகின்றனர். ஜனனிக்கு ஆதரவாக சக்தியும் இருக்கிறார். தற்போது இந்த பிரமோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications