எதிர்நீச்சல்: அப்பத்தா விஷயத்தில் ஜனனி கண்டுபிடித்த உண்மை.. ஜீவானந்தம் கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் அப்பத்தா இருந்த கார் தீப்பிடித்த இடத்தில் இருந்து அப்பத்தாவின் புடவையை ஜனனி கண்டுபிடித்து இருக்கிறார்

Ethirneechal Serial 2023 November 16th promo full update

அதே நேரத்தில் குணசேகரன் செஞ்ச தப்பை வெளிய கொண்டுவர எந்த ஆதாரமும் இல்லை என்று ஜீவானந்தம் ஈஸ்வரி இடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு போலீஸ் வந்துவிடுகிறது. இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அப்பத்தா இறந்து போய்விட்டதாக குணசேகரனும் கதிர் மற்றும் ஞானமும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே குணசேகரன் பாலில் மயக்க மருந்து கொடுத்து அப்பத்தாவை மயக்கம் அடைய வைத்து அதற்கு பிறகு ஹாஸ்பிடலுக்கு தானே கூட்டிட்டு போவது போன்று குணசேகரன் நாடகமாடி இருந்தார்.

இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் மருத்துவமனையில் போய் தேடிப் பார்த்தபோது அங்கு அப்பத்தா இல்லாததால் எல்லோரும் சந்தேகத்தோடு குழப்பத்தில் இருந்தனர். அப்போது வீட்டிற்கு அனைவரையும் ஞானம் வர வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஞானம் மற்றும் கதிர், அப்பத்தாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கும்போது தங்களை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டதால் அவர்களை தேடி நாங்கள் காரை விட்டு இறங்கிய போது காரில் இருந்த குண்டு வெடித்தது.

Ethirneechal Serial 2023 November 16th promo full update

அப்போது உள்ளே மயக்கத்தில் இருந்த அப்பத்தாவும் காரோடு எரிந்து போய் விட்டார் என்று ஞானம் மற்றும் கதிர் வீட்டில் வந்து தகவல் கொடுத்து இருந்தனர். இதை நம்பாத ஜனனி மற்றும் சக்தி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பற்றி தெரிந்து கொண்டு அங்கு விசாரிப்பதற்காக வந்திருந்தனர்.

அதே நேரத்தில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை தேடி போயிருந்தார். இப்படியாக இருந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கார் இருந்த இடத்தில் கிடந்த அப்பத்தாவின் புடவையில் ஒரு சில பகுதி சக்தி மற்றும் ஜனனியின் கையில் கிடைத்திருக்கிறது.

அதே நேரத்தில் வீட்டில் ரேணுகா நந்தினி அழுது கொண்டிருக்க அங்கு வரும் விசாலாட்சி அந்த அம்மா எங்கே என்று ரேணுகாவிடம் கேட்க அதற்கு ரேணுகா அழுது கொண்டே போயிடுச்சி, உங்க பையனுவ மொத்தமாக கொண்டு போய் சேர்த்துட்டாங்க என்று கதறி அழுது கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial 2023 November 16th promo full update

மறுபக்கத்தில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்திருக்கிறார். அப்போது ஜீவானந்தம் குணசேகரன் செஞ்ச தப்ப வெளிய கொண்டுவர எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு போலீஸ் வருகின்றனர். அப்போது ரேணுகாவின் பக்கத்தில் வெண்பா இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அப்பத்தாவின் புடவையை கையில் வைத்துக் கொண்டு ஜனனி குணசேகரனை விடவே மாட்டேன் அப்பத்தா என்று கதறி அழுது கொண்டிருக்கும் போது அதை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் இனி இன்று இரவு என்ன நடக்கப் போகிறது என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+