எதிர்நீச்சல்: குணசேகரனை சுற்றும் பிரச்சனை.. கரிகாலன் கேட்ட முக்கிய கேள்வி.. ஆட்டத்தை தொடங்கிய ஈஸ்வரி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 21ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவானந்தம் சொன்னபடியே ஈஸ்வரிக்கு காலேஜில் வேலை கிடைத்திருக்கிறது. அதனால் ஈஸ்வரி நான் இனி யார் தடுத்தாலும் வேலைக்கு போவேன் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.

அதேபோல குணசேகரன் தங்களை நோக்கி சுட்டது புல்லட்டு சத்தம் தான் என்று சொன்னதை வைத்து கரிகாலன் கேள்வி கேட்க, அதை கேட்டு ஞானமும் சந்தேகப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அப்பத்தா உயிரோடுதான் இருக்கிறாரா? அல்லது காரோடு எரிந்து போய்விட்டாரா? என்று சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அப்பத்தா இறந்து போய்விட்டார் என்று ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் சொன்னதை கேட்டதும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் மருமகள்களும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

ஆனாலும் அப்பத்தா ஆசைப்பட்டபடி பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சபதம் போட்டு இருக்கின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் நேற்று ராமேஸ்வரத்துக்கு போயிருந்த குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வந்து இருந்த நிலையில், வீட்டிற்குள் அப்பத்தாவின் புகைப்படத்தை வைத்து மாலை போட வேண்டும் என்று சொல்ல அதற்கு ஜனனி முடியாது அப்பதா இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று பிரச்சனை பண்ணியிருந்தார்.

ஆனாலும் குணசேகரன் முடியாது என்றால் வீட்டை விட்டு வெளியே போ இது என்னுடைய வீடு என்று திமிராக பேசி வீட்டு பெண்களின் வாயை அடைக்க வைத்திருந்தார். அதோடு தான் நினைத்த மாதிரி அப்பத்தா புகைப்படத்திற்கு மாலை போட்டு மரியாதையும் செய்திருந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஏற்கனவே ஜீவானந்தம் சொன்னது போலவே ஈஸ்வரிக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.

அதை பிரித்துப் பார்த்து ஈஸ்வரி சந்தோஷமாக இருக்கும்போது அங்கு வரும் குணசேகரன் என்ன தர்ஷன் காலேஜ்ல இருந்து வந்திருக்கா? இன்னும் பீஸ் கட்டலையா? என்று விசாரிக்கிறார். அப்போது தர்ஷினி அம்மாவுக்கு வேலைக்கு சேர்றதுக்கு லெட்டர் வந்திருக்கு என்று சொல்கிறார். அதை கேட்டு குணசேகரன் என்ன... என்று அதிர்ச்சி அடைகிறார்.
அதைத் தொடர்ந்து மாடியில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி யார் என்ன சொன்னாலும் சரி அதை பத்தி எனக்கு கவலை இல்லை என்று தான் காலேஜுக்கு வேலைக்கு போவதில் உறுதியாக இருக்கிறார். மறுபக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் குணசேகரன் ஞானம் கதிர் மூவரும் இருக்கின்றனர்.

அங்கு வரும் கரிகாலன், குணசேகரன் எவனோ சுடுறான்னு சொன்னீரு..? ஆனா அது புல்லட் சத்தம் தான்னு நீரூ எப்படி உறுதியாக சொல்றது என்று கேட்க இதைக் கேட்டு ஞானம் மற்றும் கதிர் திரு திருவென முழிகின்றனர். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இனி உண்மையை தெரிந்து கொண்டதும் கரிகாலன் குணசேகரனுக்கு எதிராக வீட்டு பெண்களுக்கு சப்போர்ட்டாக இருக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
ஆனால் அது நடப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் குறைவு தான். ஏற்கனவே அப்பத்தாவை போட்டு தள்ள போற பிளான் கூட கரிகாலனுக்கு தெரிந்தது தானே? அதற்கு கரிகாலன் சம்மதம் என்று சொல்லி தானே குணசேகரனுக்கு உதவி கொண்டு இருந்தார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் குணசேகரன் ஆமா நான் தான் பிளான் போட்டு அப்பத்தாவை காரோடு எரித்து கொன்றேன் என்று சொன்னாலும் அது பற்றி கரிகாலன் பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று தான் தோன்றுகிறது.
ஆனால் கதையில் சுவாரசியத்திற்காக இனி எப்படியெல்லாம் மாறப்போகிறது தெரியவில்லை. ஆனாலும் இன்று ஈஸ்வரி தன்னுடைய முடிவில் உறுதியாக நின்று இனி நான் காலேஜ் வேலைக்கு கண்டிப்பா போயி ஆவேன் என்று கூறியிருப்பதால் ஈஸ்வரி தன்னுடைய நீச்சலை தொடங்கி இருக்கிறார். இனி மற்ற பெண்கள் எப்போது தங்களுடைய பயணத்தை தொடங்குவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications