Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சலில் எதிர்பாராத திருப்பம்.. விக்ரம் படத்தை கையில் எடுத்த இயக்குனர்.. இனி நடப்பது இது தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இறந்து போய் விட்டார் என்று குணசேகரன் மொத்த குடும்பத்தையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நேற்று ஜனனியிடம் ஜீவானந்தம் சில ரகசியங்களை உளறி இருப்பார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Ethirneechal Serial 2023 November 23th episode full update

அதுபோல ஜீவானந்தத்திற்கு ஆதரவாக ஜனனி சாருலதாவிடம் உதவிக்கு போய் இருக்கிறார். அதே நேரத்தில் அருணுக்கு ஆக்சிடென்ட் செய்ததும் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்று ரகசியம் இப்போது சாருலதாவிற்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் கதைக்களம் மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் குனசேகரனுக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டுக் கொண்டிருந்த கேரக்டர் என்றால் அது பட்டமாளின் கேரக்டர் தான். ஆனால் அந்த கேரக்டரை ஒரே நாளில் டக்கென்று இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்..

ஆனால் பட்டம்மாள் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற குழப்பத்திலேயே ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் பட்டமாள் உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்லும் வகையில் தான் நேற்று ஜீவானந்தம் ஜனனியிடம் பேசி இருந்தார். அதை சீரியல் பார்த்த பலரும் புரிந்திருப்பார்கள். அதாவது ஜனனி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த ஜீவானந்தத்தை சந்தித்து பேசுவதற்காக போயிருந்த போது அப்பத்தாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம நாங்க யோசிச்சு யோசிச்சு மண்டையே குழம்புது என்று பேசி இருப்பார்.

அப்போது ஜீவானந்தம் நீங்க எதுக்கு அப்பத்தாவை பத்தி நினைக்கிறீங்க. அவங்கள பத்தி யோசிக்கதை விட்டு விட்டு, அவங்க கனவை நிறைவேற்ற பாருங்க என்று கூறி இருப்பார். அதற்கு ஜனனி வீட்டில அந்த குணசேகரன் அப்பத்தா போட்டோவை வைத்து மாலை போட்டு வைத்திருக்கிறார். என்று சொல்ல அதற்கு ஜீவானந்தம் நீங்க என்ன நினைக்கிறீங்க? அப்பதா உயிரோட இருக்காங்கனு நினைக்கிறீங்களா?

அப்போ அவங்க உயிரோட தான் இருக்கிறாங்க. நீங்க அவங்க கனவை நிறைவேத்துங்க. அவங்க வருவாங்க என்று கூறி இருக்கிறார். இதனால் அப்பத்தா உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரிய வருகிறது. அதுபோல அப்பத்தா உயிரோடு எரிக்கப்பட்டு விட்டார் என்று சொன்ன இடத்தில் சக்தியும் ஜனனியும் போய் பார்க்கும்போது அப்பத்தாவின் புடவை மற்றும் அப்பத்தா உடைய வளையல்கள் அங்கே கிடந்தது.

இது கூட அப்பத்தாவுடைய பிளான் ஆக இருக்கலாம் ஏனென்றால் அப்பத்தா பங்ஷன் முடிந்து வீட்டிற்கு வந்தபோது குணசேகரன் டம்ளரில் பாலை கொண்டு வந்து கொடுக்கும்போது நிலைமையை யூகித்து சிரித்த வண்ணமாக தான் அந்த பாலை குடிப்பார். அதனால் ஒருவேளை அப்பத்தா தனக்கு பிரச்சனை என்பதை ஜீவானந்தத்திடம் சொல்லிவிட்டு தான் பாலை குடித்தாரா? என்று யோசிக்க வைக்கிறது.

அதனால்தான் காரில் அப்பத்தாவை மருத்துவமனைக்கு கொண்டு போய்க் கொண்டிருக்கும் போது அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டபோது குணசேகரன் தம்பிகளோடு வெளியே ஓடிப்போய் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பத்தாவை காரில் இருந்து ஜீவானந்தம் குரூப் தூக்கிக்கொண்டு போனார்களா? அப்போது அப்பத்தாவின் கை வளையல்கள் அங்கே கழன்று விழுந்து இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

ஏற்கனவே கோமாவில் இருந்த அப்பத்தா திடீரென்று இப்படித்தானே காணாமல் போயிருந்தார். பிறகு கெத்தாக வந்ததும் எல்லோருக்கும் ஞாபகம் இருந்திருக்கும். இதனால் இப்போதும் அப்படி விக்ரம் படத்தில் எப்படி கமல்ஹாசன் தான் இறந்தது போன்ற ஒரு செட்டிங்கை போட்டுவிட்டு பிறகு தன்னுடைய காரியத்தை சாதித்து முடிப்பாரோ அதுபோல அப்பத்தாவும் தான் இறந்தால்தான் வீட்டுப் பெண்கள் சாதிப்பார்கள் என்று இப்படி ஒரு நாடகம் போட்டு இருக்கிறாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+