எதிர்நீச்சல்: இருக்கிற பிரச்சனையில் அப்பத்தா செய்த வில்லங்கம்.. குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் ஒன்பதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அப்பத்தா தன்னுடைய சொத்து விஷயத்தில் தான் எடுத்திருக்கும் முக்கிய முடிவு பற்றி சொல்லி குணசேகரன் மற்றும் கதிருக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதே நேரத்தில் கௌதம் துப்பாக்கியோடு நிற்பதை பார்த்து அப்பத்தா அதிர்ச்சியாகி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த திருவிழா பங்க்ஷன் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஜீவானந்தம் குணசேகரன் மற்றும் கதிரை கொலை செய்வதற்காக வந்திருந்த நிலையில் அங்கு வெண்பாவை பார்த்ததும் அதிர்ச்சியாகி இருக்கிறார்.
அதே நேரத்தில் ஜீவானந்தத்தை வெண்பாவோடு பார்த்த குணசேகரன் ஜீவானந்தத்தை தன்னுடைய வீட்டு பங்க்ஷனில் கலந்து கொள்ளும்படி கூப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே ஜீவானந்தத்தை போட்டு தள்ளுவதற்காக ஏற்பாடுகளை குணசேகரன் பார்த்து வைத்திருக்கிறார்.

அதிலும் கிள்ளிவளவன் மற்றும் கதிர் இருவரிடமும் எல்லா பிளானையும் போட்டு கொடுத்திருந்தாலும் கிள்ளிவளவனிடம் ஜீவானந்தத்தை என் பொண்டாட்டி முன்னாடி போட்டு தள்ள வேண்டும். அதை பார்த்து என் பொண்டாட்டி கதற வேண்டும் என்று கூறி வைத்திருக்கிறார்.
இப்படியாக இருக்கும் நிலையில் ஈஸ்வரி எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு ஜீவானந்ததிடம் பேசிக் கொண்டிருப்பதையும் குணசேகரன் பார்த்து இருக்கிறார். ஆனால் அப்போது எந்த பிரச்சினையும் செய்யாமல் அப்பத்தா சொத்து விஷயத்தில் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக காத்திருக்கிறார்.
அதுபோல தர்ஷினி ஜீவானந்தத்தை அப்பா என்று அழைத்து அவருடைய தோளில் சாய்ந்து அழுதது இப்போதும் குணசேகரனுக்கு தெரியாமல் இருக்கிறது. அதே நேரத்தில் வெண்பா ஈஸ்வரியை அம்மா என்று சொல்வது அனைவரும் முன்னிலையிலும் குணசேகரனுக்கு தெரிய வந்திருக்கிறது. இப்படியாக இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் கௌதம் வேகமாக பைக்கில் போய்க்கொண்டே இருக்கிறார். பின்னாடி இன்னொரு பைக்கில் சக்தி கௌதமை கூப்பிட்டுக்கொண்டு துரத்தி செல்கிறார். மறுபக்கத்தில் அப்பத்தா எல்லோரும் எனக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தாங்க. எனக்கு நம்பிக்கை கொடுத்தது என்னுடைய பேரன் குணசேகரன் தான்.
ஒவ்வொரு மருமகளா வீட்டுக்கு வந்தாங்க. ஆனா எந்த மாற்றமும் நடக்கல. அப்புறம் தான் ஜனனி வந்தா, அதன் பிறகு தான் சின்ன மாற்றங்கள் நடந்தது என்று மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது கௌதம் அங்கு வருகிறார். அதைத்தொடர்ந்து அப்பத்தா மேனேஜிங் டிரஸ்டியாக நான் ஜீவானந்தத்தை நியமிச்சி இருக்கிறேன் என்று சொல்ல, கதிரும் குணசேகரனும் கோபப்படுகின்றனர்.
இந்த நேரத்தில் கௌதம் துப்பாக்கியை வைத்து சுடுவதற்காக முயற்சி செய்ய அதை அப்பத்தா பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் இன்று பெரிய சம்பவம் எபிசோடில் நடக்க இருக்கிறது. ஒருவேளை கௌதமிடமிருந்து குணசேகரனை அப்பத்தா காப்பாத்த போகிறாரா? அல்லது குணசேகரன் பிளான் போட்டபடி அப்பத்தாவின் கதை முடிய போகிறதா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications