எதிர்நீச்சலில் மாறியது குணசேகரன் மட்டுமல்ல.. ப்ரோமோவும் தான்.. தொடங்கியது வீட்டு மருமகள்களின் ஆட்டம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 11ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ, எபிசோடு முடிவடைந்ததும் உடனே வெளியாகிவிடும். ஆனால் இப்போது ஒரு சில நாட்களாகவே ப்ரோமோ மிகவும் காலதாமதமாக வெளியாகிறது.
அதே நேரத்தில் ஆதி குணசேகரன் கேரக்டர் மாறியது போன்று இனி வீட்டில் இருக்கும் மருமகள்களின் கேரக்டரும் வேகமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. காரணம் எதிர்நீச்சல் சீரியலில் புதியதாக ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேல ராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருந்தார். ஏற்கனவே நடித்து வந்த மாரி முத்துவின் கேரக்டரை போல அல்லாமல் வேல ராமமூர்த்தி தன்னுடைய வித்தியாசத்தை இந்த கேரக்டரில் காட்டி இருக்கிறார்.
அதே நேரத்தில் சீரியலில் அறிமுகமானதும் வேல ராமமூர்த்தி ஒரு சில நாட்களிலே சீரியலில் காணாமல் போயிருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் மாரிமுத்துவாக குணசேகரன் கேரக்டரை பார்த்து பழகி இருந்த ரசிகர்களுக்கு இப்போது வேல ராமமூர்த்தியை பார்ப்பதால் வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனாலும் அவரும் சீரியலில் தினமும் வருவதில்லை. இதனால் இந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி ரசிகர்களின் மத்தியில் மனதில் பதிவதற்கு அதிக நாட்கள் எடுக்கும்.
அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ப்ரோமோவிலும் இப்போது பல மாற்றங்கள் நடந்திருக்கிறது. இதற்கு முன்பு எதிர்நீச்சல் சீரியல் எபிசோடு வெளியான உடனே ப்ரோமோ வெளியாகி விடும். அப்படியே இல்லை என்றாலும் அடுத்த நாள் காலையில் ப்ரோமோ வெளியாகி விடும். ஆனால் இப்போது ப்ரோமோ வருவதற்கே அதிகமான நேரம் எடுக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ப்ரோமோ வரவே இல்லை. அன்றைய நாளில் அதற்கு முந்தின ஏழாம் தேதி எபிசோடின் ஸ்பெஷல் கிளிப்சுகள் மட்டும்தான் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதுபோல இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவும் மாலை 4 மணிக்கு மேலே தான் வெளியாகி இருக்கிறது. இதனால் ஆதி குணசேகரன் கேரக்டர் மாறியதும் சீரியலுக்கான ப்ரோமோ கூட இப்போது மாறி போய்விட்டது என்று ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இன்றைய ப்ரோமோவில் சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கிறது.
குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை என்பதால் கதிர், ஞானம், கரிகாலன் மூன்று பேரும் ஆடிட்டர் வழக்கறிஞரோடு நீதிபதியின் வீட்டிற்கு வந்து இருக்கின்றனர். அங்கு விசாரிக்கையில் அவர்கள் குணசேகரன் இங்கிருந்து வெளியே போய்விட்டார் என்று சொல்கின்றனர். எங்க மாமா வராம நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என்று தர்ணா இருக்கப் போவதாக மிரட்டி கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் வீட்டில் ஜான்சி ராணி நாச்சியப்பன் இடம் பொம்பள பிள்ளைங்க படிச்சா குடிகெட்டு போயிடும். அதற்கு உதாரணம் தான் இந்த வீடு என்று சொல்ல, அதற்கு கோபமான ரேணுகா கடுப்பாகி, உனக்கு என்ன அருகதை இருக்கு என்று பேச ரேணுகாவுக்கும் ஜான்சி ராணிக்கும் தகராறு ஏற்படுகிறது. அப்போது கோபமான ஜனனி ஸ்டாப் இட் என்று கத்திக்கொண்டு தன்னுடைய அப்பாவிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வாங்க என்று கூப்பிட அதற்கு நாச்சியப்பன் விடு கையை. என் பொண்ணுக்கு கல்யாணம் அதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன் என்று சொல்ல, அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே ஈஸ்வரியின் அப்பா குணசேகரன் வீட்டில் வந்து ஜீவானந்தத்தை பற்றி சொல்லியதால்தான் வீட்டில் பூகம்பமே வெடித்தது. அதைத் தொடர்ந்து இப்போது ஜனனியின் அப்பாவும் வீட்டில் வந்து பிரச்சனை செய்கிறார். இந்த நிலையில் வீட்டு மருமகள்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications