எதிர்நீச்சல்: குத்தி காண்பித்த ஈஸ்வரி.. கடும் கோபத்தில் சவால் விட்ட ஜனனி.. கரிகாலனால் மாட்டும் கதிர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 12ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜனனியை அவமானப்படுத்தி பேசிய நாச்சியப்பனை ஈஸ்வரி அவமானப்படுத்துகிறார்.
அதே நேரத்தில் குணசேகரன் அப்பத்தாவை கொலை செய்ய சொன்னது கரிகாலனுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலின் கதை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது குணசேகரனாக வேலராமமூர்த்தி அறிமுகமான பிறகு சீரியலில் ஆக்ரோஷமான காட்சிகள் மேலும் அதிகரித்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து புதிதாக வந்த குணசேகரனும் தற்போது காணாமல் போய் இருக்கிறார். அதே நேரத்தில் ஜனனிக்கு புதிய பிரச்சனையும் வந்திருக்கிறது. ஏற்கனவே வீட்டு பெண்கள் முன்னேற்ற பாதையில் குணசேகரன் முட்டுக்கட்டையாக வந்து இருக்கும் நிலையில், இப்போது ஜனனியின் அப்பா நாச்சியப்பனால் ஜனனியின் சகோதரியின் வாழ்க்கையும் சீரழிய போகிறது. ஏற்கனவே ஜனனிக்கு குணசேகரன் வீட்டில் அவசரமாக திருமணத்தை செய்து வைத்தது போல இப்போது ஜனனியின் சகோதரி அஞ்சனாவுக்கும் அவசரமாக நாச்சியப்பன் திருமணத்தை முடிவு செய்து இருக்கிறார்.
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த நாச்சியப்பன் ஜனனியிடம் எதுவுமே பேசாமல் ஜனனியை தொடர்ந்து அவமானம் செய்து கொண்டு நான் என்னுடைய பொண்ணுக்கு திருமணம் வைத்திருக்கிறேன். அதனால் என்னுடைய சம்மதியை கூப்பிட வந்திருக்கிறேன் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் வீட்டு பெண்கள் அனைவரும் சுற்றி நிற்க நாச்சியப்பன் கோபத்தில் இருக்கிறார்.

அப்போது ஈஸ்வரி உங்களோட ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு பாடா பட்டு கிட்டு இருக்கா ஜனனி, அவளை போய் நீங்க ஃபெயிலியர்னு சொல்றீங்களே? இது எந்த வகையில் நியாயம்? என்று ஈஸ்வரி கேட்க நாச்சியப்பன் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். அதைத்தொடர்ந்து காரில் வந்து கொண்டிருக்கும் கதிர் ஞானத்திடம் அவர் சொன்னதை எந்த பிசிறும் இல்லாமல் நான் முடிச்சு காட்டுறேன் என்று சொல்ல, அப்போது காரில் இருக்கும் கரிகாலன் என்னது அப்பத்தாவை கொலை செய்யணுமா? என்று கேட்க கதிர் மற்றும் ஞானம் அதிர்ச்சி அடைகின்றனர்.
அடுத்ததாக ஜனனி தன்னுடைய அப்பாவிடம் எந்த சத்தியை கல்யாணம் பண்ணினதால நான் தோத்துட்டேன்னு நீங்க சொல்றீங்களா? அதே சக்தியோட சேர்ந்து நான் ஜெயிக்க போறேன் என்று சவால் விட, வீட்டு மருமகள்கள் சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் வெளியில் சக்தி எதுவும் பேசாமல் இறுக்கமாக இருக்கிறார். இதனால் சக்தி இப்படியே ஜனனிக்கு ஆதரவாக இருப்பாரா? அல்லது மீண்டும் கட்சி மாற போகிறாரா? என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications