எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு பதிலாக புதிய வில்லன்.. நெகட்டிவ்வர்ஸ்க்கு ஜீவானந்தத்தின் செம பதிலடி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 16ஆம் தேதி குணசேகரனுக்கு பதிலாக புதிய வில்லன் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இனி ஜனனி மற்றும் சக்திக்கு புது வில்லன் விஷ்ணுவால் தான் பிரச்சனை வர இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலின் நெகட்டிவர்ஸ்களுக்கு நேற்றைய எபிசோட்டில் ஜீவானந்தம் செம பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் நேற்று எபிசோடு ஆரம்பத்திலேயே ஈஸ்வரி ஜீவானந்தம் வீட்டிற்கு வந்த நிலையில் ஜீவானந்தத்தின் மகள் வெண்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இன்று தன்னுடைய மனைவி கயல் பிறந்தநாள் என்று ஜீவானந்தம் சொல்லி இருந்தார். அதோடு ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல, சரி என்று அவரும் பேச வந்திருந்தார்.
அப்போது நீங்கள் அப்பத்தா நடத்தும் பங்க்ஷனுக்கு வரவேண்டாம் என்று சொல்ல அதற்கு ஜீவானந்தம் எதற்காக அப்படி சொல்லுறீங்க? உங்க புருஷன் தான் இப்போ வீட்ல இல்லையே ஜெயிலில் தானே இருக்கிறாரு? நான் அப்பத்தா சொத்தை எழுதி வாங்கிட்டேன்னு முதலில் என் மேல கோபத்தில் இருந்தாங்க. ஆனா இப்போ தான் சொத்தை அப்பத்தா பெயருக்கே மாற்றி எழுதி கொடுத்து விட்டேனே, அதனால அவங்களுக்கு என் மேல கோபம் இருக்காது.
அதுபோல அப்பத்தா ஒரு பெரிய மனுஷி என்ன மதிச்சு கூப்பிட்டு இருக்காங்க போகலைன்னா நல்லா இருக்காது என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி வேறு வழி இல்லாமல் உங்க மனைவி கயல்விழியை கொலை செய்தது என்னுடைய புருஷன் குணசேகரனும், அவருடைய தம்பி கதிரும் தான் என்ற உண்மையை சொல்ல, அதை கேட்டு ஜீவானந்தம் கடும் கோபத்தில் நான் உங்கள் மீது ஒரு காலத்தில் அன்பாக இருந்தேன் அந்த அன்பில்தான் நீங்க இப்ப என் குழந்தையையும் என்னையும் பார்க்க வரீங்கன்னு நினைச்சிருந்தேன்.
ஆனா நீங்க உங்க சுயநலத்துக்காக தான் அன்னைக்கு உங்க வீட்டிலிருந்தே நீங்க நான்கு பேரும் இங்க வந்து இருக்கீங்க. அப்போ நந்தினி என் குழந்தையை பார்த்ததும் அவரையும் மீறி அழுது இருந்தார். அப்போது கூட நான் இப்படி எல்லாம் கூட சிலர் இருக்காங்களா? அடுத்தவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு இப்படி ஃபீல் பண்ணுகிறார்களேனு நினைத்தேன். ஆனால் நீங்க எல்லாம் உண்மையையும் தெரிஞ்சு குற்ற உணர்ச்சியில் தான் அழுது இருக்கீங்க.
அந்த அன்னைக்கு கொஞ்சம் விட்டு இருந்தா நந்தினி எல்லாத்தையும் சொல்லி இருப்பாங்க... ஆனால் அதை நீங்கள் தடுத்துட்டீங்க. எல்லா உண்மையும் உங்களுக்கு தெரிந்திருந்தும் இத்தனை நாட்களாக நீங்கள் மறைத்து வைத்திருந்ததற்கு காரணம் உங்கள் சுயநலம். உங்க புருஷனை நான் ஏதாவது பண்ணிடுவேன் என்று தானே நீங்க சொல்லல. அதே நேரத்தில் இப்போ அவர் வீட்டில் இல்ல ஜெயிலில் இருக்கிறார் அதனால இப்ப என்கிட்ட சொன்னா நான் அவரை எதுவும் பண்ண மாட்டேன் என்கிறதுனால தான் நீங்க சொல்லி இருக்கீங்க.
இனி இந்த வீட்டு பக்கம் வர வேண்டாம் என்று ஈஸ்வரியை பேசவிடாமல் ஜீவானந்தம் அவமானப்படுத்தி அனுப்பி இருந்தார். இதுவரைக்கும் ஈஸ்வரிக்கும் ஜீவானந்தத்திற்கும் மீண்டும் காதல் மலரப்போகுது என்று சில நெகட்டிவர்ஸ் கூறி வந்திருந்த நிலையில் நேற்று எபிசோடில் இதற்கெல்லாம் சரியான பதிலடி ஜீவானந்தம் கொடுத்திருக்கிறார். அதில் ஈஸ்வரி மீது இருப்பது ஒரு அன்பு மட்டும்தான். ஆனால் தன்னுடைய மனைவி மீது இருப்பதுதான் காதல் என்பதை நேற்று ஜீவானந்தம் வெளிக்காட்டி இருக்கிறார்.

அதை நேரத்தில் என்னுடைய மனைவியை கொலை செய்த குணசேகரனையும் அவனுடைய தம்பியையும் இனி நான் மன்னிக்கவே மாட்டேன். அவனுடைய சாவு என் கையில் தான் நீங்க கடவுளை நம்புறதா இருந்தா உங்க தாலிய கழட்டி பேக்குக்குள்ள வச்சுட்டு போங்க என்று பேசி இருந்தார். அதே நேரத்தில் நேற்றைய எபிசோடிலேயே ஜனனி மற்றும் சக்தி இருவரும் தனக்கு கம்பெனி தருகிறவர் உடனடியாக பார்க்க வேண்டும் என்று சொன்னதால் அவரை பார்க்க போயிருந்தனர்.
அப்போது அவர் நான் இப்போது உங்களுக்கு கம்பெனி தர முடியாது நான் இன்னொருவருக்கு கொடுக்கப் போகிறேன் என்று சொல்ல, அது எப்படி முடியாது என்று சொல்ல முடியும்? நீங்கள் என்னிடம் கம்பெனியை கொடுத்து விட்டீர்கள். நான் உங்களுக்கு பணம் அனுப்பி விட்டேன். இதற்குப் பிறகு எப்படி நீங்க தர முடியாது என்று சொல்லலாம் என்று பிரச்சனை செய்ய, அதற்கு அவர் நான் உங்களை விட பெரிய ஆள் ஒருவருக்கு கம்பெனியை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் என்று சொல்லி பில்டப் கொடுத்து இருந்தார்.
அப்போது சக்தி யார் அந்த பெரிய மனுஷன் அவன் அவ்ளோ பெரிய ஆளா என்று கேட்க உயரத்தில் பெரியவர் கிடையாது. அவர பார்த்தா தான் உங்களுக்கு தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே காரில் இருந்து ஒரு நபர் இறங்கி வருகிறார். அத்தோடு தன்னுடைய பெயர் கிருஷ்ணா என்றும் தன்னுடைய அண்ணன் பெயர் ராம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த இடத்தில் பத்து யூனிட் இருக்கு அதில் ஒன்பது யூனிட் எங்களுடையது இப்போ இருக்கிற இந்த யூனிட்டும் எங்களுடையதாக இருந்தால் தான் இது கம்பெனியாக முடியும்.
இல்லை என்றால் இது யூனிட் தான் உங்களைவிட நான் உயரத்தில் குறைந்தவர் ஆனால் வலியவன். வலியவன் எளியவனிடம் இருந்து பிடுங்கி கொள்வான் என்று மிரட்டும் தோணியில் பேசிக்கொண்டு போகிறார். அத்தோடு அவருக்கு விக்ரம் திரைப்படத்தில் நடிகர் ஜாஃபர் சாதிக்க்கு எவ்வளவு பில்டப் கொடுக்கப்பட்டதோ அதுபோல கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இனி குணசேகரன் இல்லாத குறையை விஷ்ணு தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications