எதிர்நீச்சல்: ஒரே வார்த்தையால் பிளானை உளறிய கரிகாலன்..கட்சி மாறிய விசாலாட்சிக்கு அப்பத்தாவின் பதிலடி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 19ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கோவில் திருவிழாவில் வைத்து கதிர் கொலை செய்வதற்காக பிளான் போட்டிருப்பதை ஜான்சி ராணி தெரிந்து கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து அப்பத்தா பேசிக் கொண்டிருக்கும்போது கரிகாலன் கேட்ட கேள்வியால் அனைவருக்கும் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது குணசேகரனும் அவருடைய தம்பியும்தான் என்ற உண்மை ஜீவானந்தத்திற்கு இப்போது தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவை கோவில் திருவிழாவில் வைத்து போட்டுத் தள்ள வேண்டும் என்று குணசேகரன் தன்னுடைய தம்பிமார்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார்.

அதை சிறப்பாக முடித்தே ஆகுவேன் என்று கதிர் மற்றும் ஞானம் இருவரும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கதிர் நேரடியாகவோ சந்தித்து ரகசிய பிளான் போட்டு இருக்கிறார். அதோடு ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திக்கிறாரா? இல்லையா? என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக கரிகாலனை ஃபாலோ செய்ய சொல்லி பிளான் போட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஜனனி மற்றும் சக்தி கம்பெனி தொடங்குவதிலும் கிருஷ்ணாவால் புது பிரச்சனை வருகிறது.
இப்படியாக சீரியல் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதிர்," அண்ணன் அங்க வந்து இறங்குனதும் நம்ம அவருக்கு முதலா கொடுக்கப் போற பரிசு ஒரு உசுரு தான்..." என்று கரிகாலன் மற்றும் ஞானத்திடம் பேசிக் கொண்டிருக்க, இதை மறைந்திருந்து ஜான்சி ராணி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து மாடியில் எல்லோரும் பேசி கொண்டிருக்கின்றனர்.

அப்போது அப்பத்தா அந்த ஃபங்ஷனில் வைத்து 40% ஷேர் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்ல போறேன் என்று சொல்ல, அதற்கு விசாலாட்சி கோபமாக அதை இப்பவே சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறார். அதற்கு அப்பத்தா, "நாங்க விழாவுக்கு இரண்டு நாள் முன்னாடியே கிளம்பிடுவோம் என்று சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சியான கரிகாலன் நீங்களுமா..? என்று கேட்கிறார்.
கரிகாலன் கேட்ட வார்த்தையை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் இப்போது சில காலங்களாக எந்த நேரமும் பிரச்சனையாகவே இருக்கிறது. இது சீரியலின் சுவாரசியத்தை குறைத்து இருக்கிறது என்று சிலர் இந்த ப்ரோமோவிற்கு கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அதோடு இப்போதெல்லாம் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது என்றும் பலர் பீல் பண்ணி வருகின்றனர். ஆரம்பத்தில் கரிகாலன் பேசினாலே காமெடியாக இருக்கும். ஆனால் இப்போது அவர் பேசுவது கடுப்பாக இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications