வீட்டிற்கு வரும் குணசேகரன்.. போலீஸோடு வந்த சக்தி.. பல்ட்டி அடித்த விசாலாட்சி.. செம ட்விஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னுடைய மகன் ஆதி குணசேகரன் வீட்டிற்கு வர போகிறான் என்று ஆர்வத்தோடு காத்திருந்த விசாலாட்சிக்கு சக்தியால் அதிர்ச்சி கிடைக்கிறது.

அதே நேரத்தில் ரேணுகா மற்றும் ஜனனியும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் யோசித்து கொண்டு இருக்கின்றனர். ரசிகர்கள் ஒன்றை நினைத்தால் கதையில் வேறொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலரையும் இன்னுமும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த நிலையில் இப்போது குணசேகரனாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குணசேகரனின் கேரக்டருக்கு அதிகமான முக்கியத்துவமும் பில்டப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடு முடிவடைந்ததும் வெளியான ப்ரோமோவில் குணசேகரன் மீண்டும் என்ட்ரிஆவது போன்ற காட்சிகள் வைத்திருந்தனர். அதில் நடிகர் வேலராம மூர்த்தி நடிப்பது போன்று சில சில கிளிப்சுகளும் காட்டியிருந்தனர்.
இதனால் அவர் இன்றைய எபிசோட்டில் என்ட்ரி ஆவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இன்று இரண்டாவது முறையான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டில் விசாலாட்சி தன்னுடைய மருமகள்களை பார்த்து பழிய போட்டு நேத்து அப்படி எல்லாம் பேசிக்கிட்டு இன்னைக்கு எதுவுமே நடக்காத மாதிரி சமைத்துக் கொண்டாந்து வைக்கிறீங்க என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு ரேணுகா "இன்னும் பொங்கவில்லையா? நாங்க திங்க வேணாமா? என்று வசனம் பேசுனது இந்த வாய் தானே.." என்று பதிலடி கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டு மருமகள்கள் எல்லோரும் வாசல் படியில் குழந்தைகளோடு அமர்ந்திருக்கின்றனர். அப்போது டைனிங் டேபிளில் விசாலாட்சி அமர்ந்து கொண்டு எதிரே இருக்கும் கரிகாலனிடம் "நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். வந்துகிட்டே இருக்கேன்னு சொன்னான்" என்று சொல்லிக்கொண்டு, வெளியில் இருக்கும் மருமகள்களிடம் "நான் சொன்னது கேக்குதில்ல. பெரியவன் வரப்போறான்" என்று மிரட்டுகிறார்.
அப்போது சக்தியும் ஜனனியும் வீட்டிற்கு சில போலீசார்களை கூட்டிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஞானம் மற்றும் கதிரிடம் உங்க அண்ணன் குணசேகரனை எங்க என்று விசாரிக்கின்றனர். அதற்கு ஞானம் எங்க அண்ணனை காணவில்லை என்று யாரும் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்களோ? என்று கேட்க, அதற்கு ஆமா நான் தான் கொடுத்தேன் என்று சக்தி சொல்கிறார். இப்படியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications