எதிர்நீச்சல்: முழு வில்லனாக வந்திருக்கும் புதிய குணசேகரன்.. அப்பத்தாவிற்கு தெரிய வந்த உண்மை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார்.
வீட்டிற்குள் வரும்போது அங்கிருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றி தலைமுழுகி விட்டு தான் வீட்டிற்குள் வந்து அலப்பறையை செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த அப்பத்தா வீட்டில் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விசாலாட்சி கிச்சனில் இருந்த மருமகள்களை உடனடியாக போய் உடையை மாற்றி அலங்காரம் பண்ணிக்கிட்டு வாங்க. என்னுடைய மூத்த மகன் இன்னும் கொஞ்ச நேரத்துல வர போறான் என்று சொல்ல, அதற்கு நந்தினி அவர் என்னை எங்களை பொண்ணு பார்க்கவா வராரு. ஏற்கனவே பார்த்ததுக்கு நாங்க அனுபவிப்பது போதாதா என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு நீங்க தானே இன்னைக்கு ஒரு முடிவு பண்ணனும்னு காத்திருக்கீங்க. அதற்கு என் மகன் வரட்டும் அவன் வந்ததும் முடிவு பண்ணும் இடத்தில் நான் இருக்கேன். உங்கள முடிச்சு விட்டுரலாம் என்று சொல்லி, அவன் வரும்போது நீங்க யாரும் மூஞ்ச தொங்க போட்டுட்டு இருக்க கூடாது. அலங்காரம் பண்ணிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார். அந்த நேரத்தில் விசாலாட்சியின் தம்பி வீட்டிற்கு வருகிறார்.
அவர் வீட்டு மருமகள் இடம் இப்ப வரப் போறவன் குணசேகரனே இல்லம்மா. இதற்கு முன்பு இருந்த குனசேகரன் உங்களை பேசியே கொல்லுவான். ஆனா இப்ப வரப்போற குணசேகரன் உங்களை கொன்னுட்டு தான் பேசவே செய்வான். ஒத்தப்பனை சுடலை ஆக்ரோஷமா வர்றது மாதிரி இப்ப வர்ற குணசேகரன் வரப்போறான் என்று சொல்ல வீட்டு மருமகள் வழக்கம் போல நடக்குது நடக்கட்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து எல்லோரும் அலங்காரம் பண்ணிட்டு வருவோம் ஏற்கனவே என்ன மாதிரி பிரச்சனை பண்ண காத்திருக்காருனு தெரியல. வந்ததும் இதை வச்சு ஒரு பிரச்சனை வர வேண்டாம் அதற்குப் பிறகு அவர் என்ன மாதிரி நடந்து கொள்கிறாரோ அதை வச்சு நாம பார்த்துக்கொள்ளலாம் என்று ஈஸ்வரி சொல்ல மற்ற மருமகள்களும் மனமே இல்லாமல் சரி என்று அதற்கு சம்மதித்து கிளம்பி வருகின்றனர்.
அந்த நேரத்தில் கரிகாலன் குணசேகரின் வருகைக்காக சந்தோஷத்தில் ஆடிக்கொண்டே இருக்கிறார். அதை தொடர்ந்து குணசேகரனின் கார் வரும்போது சரவெடியை போட்டு வரவேற்கின்றனர். வீட்டிற்கு வாசலில் இறங்கியதும் குணசேகரன் வீட்டு மருமகள் பார்த்து முறைத்த வண்ணமாகவே இருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆரத்தி எடுக்க விசாலாட்சி ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி என எல்லாரையும் கூப்பிட அவர்கள் ஆரத்தி தட்டோடு வரும்போது குணசேகரன் வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்.
பிறகு இருக்கும் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி தலை முழுகி விட்டு வீட்டிற்குள் வந்ததும் மீனாட்சி அம்மன் புகைப்படத்தின் முன்பு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து வந்த உறவுக்காரர்கள் அனைவரையும் இனி நீங்க வீட்டை விட்டு போங்க என்று விரட்டி விடுகிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரியின் அப்பா அப்போ நாங்க இனி கெளம்புறோம் என்று சொல்ல, இருங்க நீங்க எங்க வீட்டுக்கு பொண்ணு கொடுத்து பெருமை சேர்த்திருக்கீங்க.
இருந்து விருந்து சாப்பிட்டு போங்க என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வெளியே உறவுக்காரர்கள் குணசேகரன் என்னப்பா இப்படி நடந்துக்கிறான் என்று பேசிக்கொண்டே வெளியே இறங்கும்போது வீட்டிற்குள் அப்பத்தா வருகிறார். உள்ளே குணசேகரன் ஆட்டத்தை தொடங்கியதை பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications