எதிர்நீச்சல்: வந்தது குணசேகரன் இல்லை.. ரகசியத்தை உடைத்த மாமா.. ஈஸ்வரி அப்பாவிற்கு கிடைத்த அவமானம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி எதிர்நீச்சல் சீரியலின் அக்டோபர் ஆறாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனின் வருகையை குறித்து அவருடைய மாமா வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறார்.

அதே நேரத்தில் வரும் குணசேகரனுக்கு ஆரத்தி எடுக்க சொல்லி வீட்டு மருமகளை விசாலாட்சி மிரட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடப்பது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் வீட்டிலிருந்து கடிதம் எழுதி வைத்து விட்டு போன குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வருகிறார். வரும் வழியில் நேற்றைய எபிசோட்டில் கோவிலில் வைத்து தன்னுடைய தம்பிகளிடம் தான் ஆரம்ப காலகட்டத்தில் கண்டக்டர் ஆக வேலை பார்க்கும் போது பட்ட கஷ்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தான் கண்டக்டராக வேலை பார்க்கும் போது சக்தி கை குழந்தையாக இருந்தான். கதிர் ஒன்னும் தெரியாத பச்சைப் பிள்ளையாகத்தான் இருந்தான். ஆனால் ஞானம் தான் நான் வேலை பார்க்கும் போது எனக்கு தூக்கு சட்டியில் சாப்பாடு கொண்டுட்டு வருவான். அவன் எனக்கு சாப்பாடு தந்துட்டு வெயிலில் நடந்து போகும் போது என் கண்ணில் கண்ணீர் வரும்.
அப்ப இடுப்புல ஞானத்திற்கு டவுசர் நிற்க்காது. ஒரு கையில் டவுசர் பிடித்துக் கொண்டு ஒரு கையில் தூக்கு சட்டியை தூக்கி கிட்டு என் தம்பி என்னை தேடி வருவான் என்று தன்னுடைய பழைய கதையை சொல்லி ஞானம் மற்றும் கதிரை கண்கலங்க வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து தான் அந்த நேரத்தில் எவ்வளவு அழகாக இருந்தேன் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் குணசேகரன் வீட்டிற்கு வந்தால் தான் நான் சாப்பிடுவேன் என்று விசாலாட்சி வீட்டில் அடம்பிடித்து கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டிற்கு ஈஸ்வரியின் அப்பாவும், நந்தினி அப்பா எல்லோரும் வந்திருக்கும் போது குணசேகரன் காரில் வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தியை கேட்டதும் விசாலாட்சி சாப்பிட்டார். அதைத் தொடர்ந்து கதிர் தன்னை ஈஸ்வரி அடித்ததை பற்றி குணசேகரிடம் போட்டுக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகியிருக்கிறது
அதில் குணசேகரனின் மாமா, "வர்றவன் குணசேகரன் இல்லம்மா... ஒத்தப்பனை சுடலை உக்கிரமா வந்துகிட்டு இருக்காமா" என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சியோடு இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து குணசேகரன் காரில் வந்து வீட்டில் இறங்கியதும் ஓடி வந்து தன்னுடைய மகனை கட்டி அணைத்த விசாலாட்சி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி எல்லாரும் வாங்கடி ஆரத்தி எடுங்க வென்று சொல்கிறார். எல்லோரும் ஆரத்தி எடுக்கும் போது குணசேகரன் அதை தடுத்து வீட்டிற்குள் வருகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் இருக்கும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரியின் அப்பா அப்போ நாங்க கிளம்புறோம் என்று சொல்லி கிளம்ப பார்க்க, அதற்கு குணசேகரன், "பொண்ணு கொடுத்து இந்த வீட்டுக்கு பெருமை சேர்த்திருக்கீங்க. நல்லா இருந்து உட்கார்ந்து விருந்து சாப்டுட்டு போகலாம்" என்று சொல்கிறார். அப்போது எல்லோரும் குழப்பமாக இருக்கின்றனர். அந்த நேரத்தில் பட்டம்மாள் வீட்டிற்குள் வருகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications