எதிர்நீச்சல்: குணசேகரனை பற்றிய ரகசியத்தை உடைத்த அப்பத்தா.. அதிர்ச்சியில் ஈஸ்வரியின் அப்பா
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் வீட்டை விட்டு போயிருந்த குணசேகரன் வீட்டிற்கு வந்து வீட்டு மருமகள்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.
ஈஸ்வரியை அடித்து துன்புறுத்தி குணசேகரன் சொன்ன வார்த்தையை கேட்டு ஈஸ்வரியின் அப்பா அதிர்ச்சியில் இருக்கிறார்.

அதே நேரத்தில் குணசேகரின் கேரக்டர் குறித்தும் அவரைப் பற்றிய பல ரகசியங்களையும் அப்பத்தா வீட்டு மருமகள் இடம் சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் நேற்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த குணசேகரனிடம் ஈஸ்வரியின் அப்பா வீட்டிற்கு நாங்கள் கிளம்பவா என்று கேட்கையில், நீங்கள் இருந்து இருந்து சாப்பிட்டுட்டு போங்க. மகனை கொடுத்து இந்த வீட்டுக்கு மரியாதை சேர்த்து இருக்கீங்கல்ல என்று குத்தலாக பேசியபடி ஈஸ்வரியிடம் நீ எதற்காக ஒரு ஆம்பளையா கைநீட்டி அடிச்சா என்று கேட்கிறார்.
அதற்கு ஈஸ்வரி அவர் என்னுடைய கேரக்டரை கொச்சைப்படுத்துற மாதிரி பேசினாரு. அதனால அடிச்சேன் என்று சொல்லி முடிப்பதற்குள் ஈஸ்வரியை குணசேகரன் கன்னத்தில் அறைந்து விடுகிறார். அதை பார்த்து அதிர்ச்சியாகி அனைவரும் நிற்கயில் ஈஸ்வரியின் அப்பா என் பொண்ண என் கண்ணு முன்னாடியே அடிக்கிறீர்களே என்று சண்டைக்கு நிக்கிறார்.
அதைத் தொடர்ந்து நந்தினியிடம் நீ குணசேகரன் வீட்டுக்குள்ளே இருந்து வெளியே போய் சோறு ஆக்கி வித்துட்டு வருவியா என்று கேட்க, அப்போ வீட்டை விட்டு வெளியே போய் செஞ்சா தப்பு இல்லையா என்று நந்தினி கேட்க அப்போதும் ஈஸ்வரியை பளார் என்று அறைந்து விடுகிறார்.
அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
கதிர் கை தட்டி சந்தோஷபடுகிறார். இதை பார்த்ததும் ஈஸ்வரியின் அப்பா துடி துடித்து போய் சண்டைக்கு நிற்க அதற்கு கதிர் உங்களையும் அடித்து விடுவோம் என்பது போன்று மிரட்டுகிறார். அதைத் தொடர்ந்து குணசேகரன் இந்த வீட்டில் இனி பெண்கள் யாரும் வெளியே போய் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அப்படி வீட்டை விட்டு வெளியே போகணும் என்றால் பிணமா தான் போகணும் என்று மிரட்டுகிறார்.
அதை தொடர்ந்து கதிரிடமும் இனி உன்னை ஒரு அடி அடிச்சா நீ 10 அடி திருப்பி அடி, அண்ணி என்று எல்லாம் பார்க்க வேண்டாம் என்று அட்வைஸ் பண்ண அதற்கு கதிரும் சந்தோஷப்படுகிறார். அதுபோல கரிகாலன் ஹனிமூனுக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கதிர் மற்றும் ஞானத்திடமும் பேசுகிறார்.
அடுத்ததாக அப்பத்தா வீட்டில் உள்ள மருமகள்கள் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இனி உங்களுடைய வேலையை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கான பாதையில் நீங்க தான் பயணிக்க வேண்டும். வீட்டு நிலைமை எல்லாம் இப்போ உங்களுக்கு புரிஞ்சிருச்சு இருக்கும். குணசேகரன் இதோடு நிறுத்த மாட்டான் இன்னும் பெரிய பிளான் வைத்திருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications