எதிர்நீச்சல்: மாரிமுத்து குணசேகரனாக நடித்த கடைசி எபிசோடு.. நெகிழ வைத்த காட்சி.. இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் ஆக நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துவிட்டார்.

இதில் அவர் நடித்த எபிசோடுகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் சீரியலில் சில உணர்வுபூர்வமான கதைகளும் இருந்தது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial 2023 September 13th episode Actor Marimuthu to acted Gunasekaran ended yesterday

இத்தனை நாட்களாக குணசேகரனாக கம்பீரமான குரலோடு அனைவரையும் மிரட்டி கொண்டு இருந்த மாரிமுத்து இனி எதிர்நீச்சல் சீரியலில் இல்லை என்பது பலருக்கும் வருத்தங்களாக இருக்கிறது. இந்த நிலையில் இனி யார் குணசேகரனாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கடைசியாக குணசேகரன் ஆக மாரிமுத்து நடிக்கிறார் என்பதால் அதிகமான ரசிகர்கள் ஆர்வத்தோடு சீரியல் பார்த்தனர். அந்த வகையில் நேற்றைய எபிசோடு ஆரம்பத்தில் குணசேகரன் தன்னுடைய அம்மாவிடம் நீயும் இவர்களுடன் சேர்ந்து என்னை ஏமாற்றுதியா அம்மா என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது ரேணுகா டீச்சருடன் இரண்டு மாணவிகளை தனியாக மாடிக்கு கூட்டிட்டு போனது எதற்காக என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கரிகாலன் மாடிக்கு போய் அங்கு ரேணுகாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு கீழே வந்திருந்தார்.

Ethirneechal Serial 2023 September 13th episode Actor Marimuthu to acted Gunasekaran ended yesterday

அதை தொடர்ந்து கரிகாலன், மாமா உங்களை எல்லாருமே ஏமாற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு அக்கா பொங்கல் செய்து, வண்டியில எடுத்துட்டு போகுது. இன்னொருத்தங்க வீட்டுக்கு வந்தவங்கள கூட்டிட்டு தனியா மாடிக்கு போயிட்டாங்க. ஏதோ வீட்டுக்குள்ள கூட்டு சதி நடக்குது என்று சொல்ல, அதற்கு விசாலாட்சி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. அவனே கோபத்தில் இருக்கான். நீ வேற ஏதாவது ஏத்தி விடாத என்று கரிகாலனை திட்ட, எனக்கு என்னவோ உங்க மேல தான் சந்தேகம் இருக்கு என்று கரிகாலன் விசாலாட்சி மீது பழியை போடுகிறார்.

அதற்கு குணசேகரன் என்னை ஒவ்வொரு இடத்திலும் விட்டுக் கொடுப்பதுதான் உன்னுடைய வேலையா போய்கிட்டு இருக்கு அம்மா என்று பேசிக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து தான் சில நெகிழ்ச்சியான காட்சிகள் வந்தது. அதாவது நந்தினியின் அம்மா உடம்பு சரி இல்லாமல் இருக்கிறார் என்று ஏற்கனவே அவருடைய அப்பா வீட்டில் வந்து சொல்லி இருந்தார். இந்த நிலையில் நேற்று தான் முதன்முதலாக பிசினஸில் பணத்தை வாங்கிக் கொண்டு தன்னுடைய அம்மாவை பார்ப்பதற்காக நந்தினி ஜனனி மற்றும் சத்தியை கூட்டிக்கொண்டு போயிருந்தார்.

அப்போது தன்னுடைய அம்மாவிடம் தான் புதியதாக நாட்டி ஃபுட்ஸ் பிஸ்னஸ் தொடங்கி இருப்பதாகவும் சமையல் மூலமாக பலருடைய வயிறு பசியை நான் தீர்த்து வைக்கப் போகிறேன் என்று பேசி கொண்டு இருந்தார். இதற்கு நந்தினியின் அம்மாவும் அப்பாவும் சப்போர்ட் கொடுத்திருந்தனர். அப்போது அவருடைய அப்பா இந்த வீட்டில் என் பொண்ணு காலேஜ் படிக்கும்போது அவ்வளவு சர்டிபிகேட், மெடல் போட்டோஸ் எல்லாமே நிறைஞ்சிருக்கும். இந்த இடத்தில் கூட அவ வாங்கிய பரிசுகள் எல்லாம் அவ்வளவு இருந்தது. ஆனால் நான் தான் அவளுடைய திறமையை வெளியே கொண்டு வராமல் அந்த பாழாப்போன குடும்பத்தில் கட்டி கொடுத்து விட்டேன்.

என் புள்ள வாழ்க்கையை நானே நாசமாக்கிட்டேன் என்று கண் கலங்கி அழுதார். இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவின் அம்மாவோ அல்லது ஈஸ்வரியின் அப்பாவோ தாங்கள் இந்த குடும்பத்தில் தன்னுடைய பிள்ளையை கட்டிக் கொடுத்து நாங்க தான் தப்பான முடிவு எடுத்து விட்டோம் என்று சொன்னதே கிடையாது. முதல் முறையாக நேற்று நந்தினியின் அப்பா சொல்லி இருந்தது பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அதுபோல நந்தினி தான் சம்பாதித்த பணத்தை தன்னுடைய அம்மா கையில் கொடுக்க அவர் வேண்டாம் என்று சொல்லி இதை தாராவுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வைத்துக் கொள் என்று சொல்ல, இனி நான் சம்பாதிக்க போற பணத்தில் பாதி அவளுக்கு தானே செய்யப் போறேன். இந்த பணத்தை நீங்க வச்சுக்கோங்க. நான் காலேஜ் படிக்கும்போதே வேலைக்கு போய் முதல் மாசம் சம்பளத்தில் அப்பாவுக்கு டூருக்கு போறது ரொம்ப பிடிக்கும் அதனால நாம எல்லாரும் சேர்ந்து டூருக்கு போகனும் உனக்கு புடவை வாங்கி தரணும், நீ ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி தரணும் என்று ஆசைப்பட்டேன்.

ஆனால் அதற்கான சாத்தியம் தான் நடக்காமயே போயிடுச்சு ஆனா இப்போ எனக்கு அது நடக்க தொடங்கிடுச்சு. அதனால என்னுடைய அம்மாவுக்கு நான் முதல் முதலாக என்னுடைய சம்பாத்தியத்தில் பணம் கொடுக்கிறேன் என்று சொல்ல, இந்த காட்சிகள் உணர்வு பூர்வமாக இருந்தது என்பது மறுக்க முடியாது. இனி குணசேகரனின் காட்சிகள் இன்னும் சில தினங்களுக்கு இருக்காது. காரணம் எதிர்நீச்சல் சீரியலில் புதியதாக குணசேகரன் கேரக்டரில் எந்த நடிகரும் கமிட் ஆகாமல் இருக்கிறார்கள்.

அதனால் குணசேகரன் கேரக்டரை விடவும் மீதம் இருக்கும் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் இப்போது நந்தினி மற்றும் அவருடைய அம்மாவிற்கு உணர்வுபூர்வமான ஒரு கதை வைத்தது போல இனி வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் கதை முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதுபோல ஜனனி கம்பெனி தொடங்கியதை தெரிந்து அவரை அவருடைய குடும்பத்தினர் வந்து பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அப்போதுதான் குணசேகரன் இல்லாத ஒரு குறையை இந்த சீரியல் நிவர்த்தி செய்யும். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது பொறுமையாக பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+