மாரிமுத்து இல்லா முதல் எபிசோடு.. கதிர் செய்த நெகிழ வைத்த செயல்.. இதை கவனிச்சீங்களா? கிரேட் செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகராக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அதற்குப் பிறகு அவர் இல்லாத எபிசோடு நேற்று ஒளிபரப்பாகியது.

அதில் நடந்த நிகழ்வுகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். அதே நேரத்தில் நேற்று நடந்த சில நெகழ்ச்சியான விஷயங்கள் பலருடைய மனதையும் ரணப்படுத்தி இருக்கும்.

Ethirneechal Serial 2023 September 14th episode full updated

காரணம் இத்தனை நாட்களாக கர்ஜிக்கும் குரலோடு எதிர்நீச்சல் வீட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்த குணசேகரனுக்கு உயிர் கொடுத்திருந்த மாரிமுத்து இல்லாமல் நேற்று அந்த வீடே வெறிச்சோடி இருந்ததாகத்தான் ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்திருக்கும்.

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்கள் தான் அதிகமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விடுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வரிசையில் பல சீரியல்கள் இருந்தது. ஆனால் இப்போது விரல் விட்டு எண்ணும் வகையில் தான் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் இருக்கிறது. அந்த வகையில் ஒன்றுதான் எதிர்நீச்சல் சீரியல்.

இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியை விடவும் குணசேகரனுக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் யார் கண் வைத்து விட்டார்களோ என்று தெரியவில்லை. திடீரென்று இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வாழ்ந்து வந்த மாரிமுத்து அனைவரையும் தவிக்க விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் அவர் இல்லாமல் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ரேணுகா தன்னுடைய மாணவிகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து மாடியில் இருந்து கீழே கூட்டிக்கொண்டு வந்தார்.

Ethirneechal Serial 2023 September 14th episode full updated

அப்போது ஞானம் ரேணுகாவிடம் நீ இவங்க ஐஸ்வர்யா கூட படிக்கிற பிள்ளைங்கன்னு தான சொன்னா? ஆனா ஐஸ்வர்யா இல்லையே எங்க ஐஸ்வர்யா? எங்க போனா ஐஸ்வர்யா இவங்க கூட படிக்கலையா? என்று கேள்வி மேல கேள்வி கேட்க, ஐஸ்வர்யா ஜெராக்ஸ் கடைக்கு பிரின்ட் எடுக்க போயிருக்கா என்று ஈஸ்வரி சொல்ல, நான் உங்ககிட்ட பேசல என் மனைவி கிட்ட பேசுறேன் என்று ஞானம் கோபமாக ரேணுகாவையும் அங்கு வந்த குழந்தைகளிடமும் பேச சொல்லி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

அப்போது ரேணுகா அந்த குழந்தைகளுக்கு வாயும் பேச முடியாது காதும் கேட்காது என்று சொல்ல ஞானம் ஆப் ஆகிவிட்டார். ஆனால் அப்போது ஞானத்தை ஏற்றிவிட்டு கரிகாலன் பிரச்சினை செய்து கொண்டிருந்தார். ஆனால் ஞானம் அமைதியாக மாறியதும் கரிகாலன் ஞானத்தை கிண்டல் செய்ய அப்போது ஞானம் கரிகாலனை வெட்டி போட்டு விடுவேன் கதிர் என்று சொல்லியிருந்தார். ஆனால் இதுவரைக்கும் எல்லா எபிசோடுகளிலும் துள்ளிக் கொண்டு மிரட்டி கொண்டிருக்கும் கதிர் நேற்று டைனிங் டேபிளில் அமைதியாகவே இருந்தார்.

Ethirneechal Serial 2023 September 14th episode full updated

அவருக்கு ஒரு சில சாட்கள் மட்டுமே இருந்தது. அப்போதும் அவர் முகத்தில் அவ்வளவு சோகம் தெரிந்தது. இத்தனை நாட்களாக ஒன்றாக நடித்து வந்த மாரிமுத்து இல்லை என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அவரோடு சீரியல் நடிப்பவர்களுக்கும் பெரிய அளவில் வேதனையை கொடுத்திருக்கிறது என்பது நேற்றைய எபிசோடில் கதிரின் முகத்தை பார்க்கும்போது தெரிந்தது என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல குணசேகரன் இதுவரைக்கும் இருந்து வந்த சேர் நேற்றைய எபிசோடில் அவர் இல்லாமல் அனாதையாக இருந்தது. அத்தனை பிரச்சனைகளும் குணசேகரன் இருக்கும் சேர் பக்கத்திலேயே எல்லாமே நடந்து கொண்டிருந்தது. விசாலாட்சி குணசேகரன் எங்கே என்று கேட்கும் போது அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ஹாஸ்பிடலுக்கு போய் இருக்கிறார் என்று சொல்லி கதையை மாற்றி கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 September 14th episode full updated

அதுபோல நேற்றைய எபிசோடில் இன்னொரு நெகிழ வைத்த செயலும் நடைபெற்றது. அதாவது ஞானத்திடம் சண்டை போட்டு தன்னை தேடி வந்த மாணவிகளை ரேணுகா வீட்டிற்கு அனுப்பி வைத்த பிறகு நந்தினி வீட்டிற்கு வருகிறார். அப்போது தன்னுடைய சம்பளத்தில் தான் வாங்கிய பொருட்களை பற்றி சொல்லி ஆரம்பத்தில் நாம பேன்சி ஸ்டோருக்கு போனா ஒவ்வொரு பொருளும் வாங்கும்போது எவ்வளவு கணக்கு பார்த்து வாங்குவோம். அப்போ பல நேரங்களில் கடன் கூட சொல்லிட்டு வந்திருக்கோம். ஆனா இன்னைக்கு என்கிட்ட காசு இருக்கிறதால நானே ஆசைப்பட்டதெல்லாம் வாங்கினேன் என்று சொல்லும்போது அவருடைய வலி வார்த்தைகளில் மட்டுமல்லாமல் கண்களிலும் தெரிந்தது.

அதுபோல நந்தினி தனக்கு வாங்கி கொடுத்த கண்ணாடி வளையலை ரேணுகா அவ்வளவு சந்தோஷமாக வாங்கி வைத்துக் கொண்டார். அதை தொடர்ந்து ஈஸ்வரிக்கு தர்ஷனின் காலேஜ் ப்ரொபசர் போன் செய்து பெண்கள் மட்டுமே வேலை செய்யும் கம்பெனியில் மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுக்க வேண்டும் என்று சொல்ல, ஈஸ்வரியும் தர்ஷனும் வீட்டிற்கு தெரியாமல் வெளியே கிளம்பி போகின்றனர் இப்படியாக நேற்று எபிசோடு முடிவடைந்தது.

Ethirneechal Serial 2023 September 14th episode full updated

அதே நேரத்தில் குணசேகரன் இல்லையே என்று பல ரசிகர்கள் பீல் பண்ணிக் கொண்டிருந்தாலும் நேற்றைய எபிசோடில் வீட்டு பெண்கள் தங்களுடைய பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதுவும் சொந்தமாக இவர்கள் தங்களுடைய கனவுகளை நோக்கி நடக்க தொடங்கி இருக்கும் நிலையில் இது பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் தான் இருக்கும். குணசேகரனை காணவில்லையே அவர் இல்லையே என்று பீல் பண்ணிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த பெண்களின் வெற்றி ஆறுதல் மருந்தாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+