எதிர்நீச்சல்: குணசேகரன் இல்லாமல் வந்த ப்ரோமோ.. இனி நடக்கப்போவது இதுதானா? வெளிவரும் உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 14ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதே நேரத்தில் முதல் முறையாக குணசேகரன் ப்ரோமோவில் வராமல் இருக்கிறார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரேணுகா டான்ஸ் சொல்லிக் கொடுப்பது பற்றி ஞானம் கேள்வி கேட்க அதற்கு ரேணுகா எதிர்பாக்காத பதிலடி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரி முத்து சற்றும் எதிர்பார்க்காத விதமாக சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்திருந்தார். அவருடைய இறப்பிற்கு பிறகு அவர் நடித்த எபிசோடுகள் நேற்று வரைக்கும் ஒளிபரப்பாகி வந்தது. இதுவரைக்கும் குணசேகரன் இல்லாத ப்ரமோ வெளியானதே கிடையாது என்று சொல்லும் வகையில் தினமும் ப்ரோமோவில் தவறாமல் குணசேகரனுடைய முகம் இடம் பிடித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் காணப்படவில்லை. அவர் இதுவரைக்கும் கம்பீரமாக அமர்ந்திருக்கும் டைனிங் ஹாலில் அந்த சேர் காலியாக இருக்கிறது. இது குறித்து அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் பரபரப்பான காட்சிகளும் இடம் பெற்று இருக்கிறது.

அந்த வகையில் நேற்று ரேணுகா டான்ஸ் சொல்லிக் கொடுக்க ஐஸ்வர்யாவின் ஸ்கூல் டீச்சர் இரண்டு மாணவிகளை குணசேகரன் உடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்திருந்தார். இது குறித்து கரிகாலனுக்கு சந்தேகம் வந்து என்ன ஏதுவென்று அடிக்கடி கேள்வி மேல கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரேணுகா அந்த குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்க போகிறேன் என்றும் அவர்களுக்கு சந்தேகம் இருப்பதால் இங்கு வந்து படிக்க வந்திருக்கிறார்கள் என்றும் சமாளித்து இருந்தார். ஆனாலும் நம்பாமல் கரிகாலன் ரேணுகா இருந்த ரூமிற்கு வந்து பார்க்க அங்கு ரேணுகா கரிகாலனை மிரட்டி அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ரேணுகா மாணவிகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து கொண்டு டீச்சரையும் அழைத்துக் கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறார். அப்போது ஞானம் ரேணுகாவிடம் ஐஸ் எங்கே என்று கேட்க, அதற்கு ரேணுகா என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்க, அப்போது கரிகாலன் என்ன மண்டைய சொரிகிறிங்க? கைய சொடுக்கு போடுறீங்க?
இங்க பாருங்க முழிய... முழியே சரி இல்ல என்று கத்தி கொண்டு இருக்க, அதைத்தொடர்ந்து ரேணுகா ஞானத்திடம் உங்களுக்கு பயந்து பயந்து எல்லாம் என்னால இருக்க முடியாது. காலமெல்லாம் உங்க அண்ணனுக்கு கூஜா தூக்கறன்னு முடிவு பண்ணிட்டீங்கல்ல, அந்த வேலையை மட்டும் பாருங்க என்று பேச, அதற்கு ஞானம் ஏய் என்று கையை நீட்டி கத்துகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் இப்ப வரைக்கும் கமிட் ஆகாமல் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில எபிசோடுகளுக்கு மீதம் இருக்கும் கேரக்டர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ரேணுகா டான்ஸ் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ரகசியம் இனி வீட்டில் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது ஞானம் அதை எதிர்க்கும் நிலையில் ரேணுகாவிற்கு ஆதரவாக விசாலாட்சி களம் இறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications