எதிர்நீச்சல்: ஜீவானந்தத்தை பார்க்க போன தர்ஷனுக்கு கிடைத்த அதிர்ச்சி.. வீட்டு பெண்களின் சூழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் செப்டம்பர் 15ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் தர்ஷனும் ஈஸ்வரியும் ஜீவானந்தத்தை பார்க்க சென்று இருக்கின்றனர். அங்கு வெண்பா கேட்ட கேள்வியால் தர்ஷன் அதிர்ச்சி அடைகிறார்.

Ethirneechal Serial 2023 September 15th promo full update

அதே நேரத்தில் வீட்டு பெண்கள் கரிகாலனை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது. காரணம் இந்த சீரியலில் இதுவரைக்கும் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதால் அவருக்கு பதிலாக இனி யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

Ethirneechal Serial 2023 September 15th promo full update

அதே நேரத்தில் இத்தனை நாட்களாக அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டு வந்த குணசேகரன் கேரக்டர் இப்போது இல்லை என்பதால் கதை என்ன மாதிரி நகரப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கின்றது. அதே நேரத்தில் நேற்று எபிசோடில் குணசேகரனுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஹாஸ்பிடலுக்கு போய் இருக்கிறார் என்று கதையை நகர்த்தி இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் முதல் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்த நந்தினி அதில் எல்லோருக்கும் சில பரிசு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில் அதை எல்லோருக்கும் எடுத்து கொடுத்து கொண்டிருக்கிறார். அப்போது ஆதிரை நந்தினியை கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை காட்ட விசாலாட்சியும் சந்தோஷத்தோடு இருக்கிறார்.

Ethirneechal Serial 2023 September 15th promo full update

அதைத் தொடர்ந்து அங்கு வரும் கரிகாலன் அது என்னவென்று கேட்க இது பொம்பளைகளுக்கான பிரசாதம் என்று விசாலாட்சி சொல்ல, அதை நான் பாக்கணும் என்று கேட்க இதை பாக்குறவங்க கண்ணு அவிஞ்சு போயிரும் அப்புறம் நீ ஆசைப்பட்டியே ஹனிமூன் போகணும் என்று, அதுக்கு கண்ணு தெரியாத கபோதியா தான் நீ போகணும் என்று சொல்ல, அதற்கு கரிகாலன், இல்ல ஹனிமூனுக்கு கண்ணு தான முக்கியம் என்று சொல்ல எல்லோரும் நக்கலாக சிரிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து ஹோட்டலில் ஜீவானந்தமும் அவருடைய மகள் வெண்பாவும் இருக்க, அவர்களோடு சேர்ந்து ஈஸ்வரியும் தர்ஷனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவானந்தம் கஷ்டத்தில் இருக்கிறது வெண்பா தான் அது என்னால ஏற்பட்டது என்று சொல்ல, அதற்கு வெண்பா நீங்க என்ன நல்லா பாத்துக்குறீங்க என்ன அம்மா மட்டும் நம்ம கூட இல்லை என்று சொல்ல, தர்ஷன் ஈஸ்வரியை பார்க்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+