எதிர்நீச்சலில் இயக்குனரின் சாமர்த்தியம்.. குணசேகரனுக்கு பதிலாக வீட்டிற்குள் வந்து மிரட்டும் நபர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டை விட்டு காணாமல் போயிருந்தார்.
ஆனால் அவரைப் போலவே வீட்டு மருமகள்களை மிரட்டுவதற்காக ஜான்சி ராணி வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

அதற்கு விசாலாட்சியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அத்தோடு விசாலாட்சி இதுவரைக்கும் மருமகள்களுக்கு சப்போர்ட் செய்திருந்த நிலையில் நேற்று மருமகள்கள் மீது தன்னுடைய கோபத்தை காட்டுகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் கதை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு காலமானார். அதை தொடர்ந்து அவர் நடித்து வந்த கேரக்டர் இனி யார் நடிப்பார் என்ன மாதிரி கதை கொண்டு போகப் போகிறார்கள் என்று பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் அதில் இயக்குனர் யாரும் யோசிக்க முடியாத வகையில் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே குணசேகரனுக்கு ஒரு அண்ணன் இருப்பது போன்று நேற்று முன்தினம் கதையை முடித்து இருந்தனர். ஆனால் நேற்று அவர் ஹாஸ்பிடலில் இறந்து போய்விட்டார் என்று விசாலாட்சி சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் குணசேகரன் மீண்டும் வருவார் என்று அழுத்தம் திருத்தமாக அப்பத்தா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுபோல ஜோதிடரும் இன்னும் பத்து நாளுக்குள் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்றும் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் ஜோதிடர் மூத்த உசுருக்கு ஆபத்து இருக்கு என்றும் கூறியிருக்கிறார். இதனால் என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க முடியாமல் இருக்கும் நிலையில் ஜான்சி ராணி மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அத்தோடு ஆரம்பத்தில் குணசேகரன் இல்லை என்பதை நினைத்து வருத்தத்தில் அழுது கொண்டிருந்த நிலையில் கரிகாலன் மாமா எனக்கும் சொத்து எழுதி இருக்கிறார் என்று சொன்னதை கேட்டது முகம் மாறி அவருடைய வழக்கமான நடிப்பை காட்டுகிறார்.

அதுமட்டுமல்லாமல் நந்தினிடம் ஜான்சி ராணி சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது விசாலாட்சி இனி ஜான்சிராணி இந்த வீட்ல தான் இருப்பார் என்று சொல்லி இருந்தார். அப்போது நந்தினி கண்டதை எல்லாம் வீட்டுக்குள் இருக்க வச்சிருக்கீங்க என்று சொல்ல, இத்தனை நாட்களாக நான் கண்டவளுகளோடு ஆட்டம் போட்டு தான் என் மகனை வீட்டை விட்டு போக வச்சிட்டேன் என்று விசாலாட்சி கோபத்தில் பேசுகிறார்.
அதனால் ஜான்சி ராணிக்கு மேலும் சந்தோஷம் ஏற்பட்டு இனி இந்த வீட்டில் நான் எடுக்கறது தான் முடிவு, இனி சாப்பாடு ஆக்கிக் கொண்டு வெளியே ரகசியமாக போக முடியாது. கண்ணால சைகை செய்ய முடியாது. வீட்டுக்குள்ள அறிவியல் டியூஷன் நடத்த முடியாது. எல்லாத்துக்கும் நான் இனி முடிவு கட்டுறன் என்று மிரட்டி விட்டு போகிறார். அதே நேரத்தில் இனி குணசேகரன் ஆக புது நடிகர் வீட்டுக்கு வருவாரா? அல்லது குணசேகருக்கு அண்ணனாக புது நடிகர் வருவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அதுவரைக்கும் வீட்டிற்குள் சண்டை சச்சரவு செய்வதற்கு ஜான்சி ராணி வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications