விசாலாட்சியை வைத்தே குணசேகரன் பற்றிய ரகசியத்தை உடைத்த இயக்குனர்.. கரிகாலனால் வந்த பிரச்சனை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பற்றிய ரகசியத்தை நேற்றைய எபிசோடில் விசாலாட்சி மற்றும் அப்பத்தா இருவரும் யூகித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியால் வீட்டுப் பெண்களுக்கு அடுத்தடுத்து பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில் வெண்பா யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு கரிகாலன் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கிச்சனைக்குள் இருந்த படி வெண்பாவும் தாராவும் பேசிக் கொண்டிருக்க மொத்த குடும்பத்தினரும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் இவர்கள் பேசுவது ஒட்டு கேட்க வேண்டும் என்று கரிகாலன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அப்பத்தா வீட்டிற்குள் வருகிறார்.
அப்போது கிச்சனுக்குள் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கே செல்லும் அப்பத்தா யார் இந்த குழந்தை என்று கேட்க அதற்கு நந்தினி இது ஈஸ்வரி அக்காவின் பிரண்டு, நமக்கு மியூச்சுவல் ஃப்ரண்ட் என்று சொல்லி ஆனந்தமான ஜீவம் பொண்ணு தான் என்று சொல்ல, அதைக் கேட்டு அப்பத்தா சந்தோஷப்பட்டு வெண்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜன்னல் வழியாக இதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலன் முகத்தில் தர்ஷினி கழிவு நீரை ஊற்றுகிறார்.
பிறகு கரிகலன் மறைந்திருந்து பார்த்ததை புரிந்து கொண்ட கொண்ட வீட்டு மருமகள்கள் எல்லோரும் கரிகாலனை வழக்கம்போல திட்டி அனுப்புகின்றனர். அதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ஞானம் இருவரும் குணசேகரனை ஒவ்வொரு இடங்களாக தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கடைசியாக ஒரு கிராமத்தில் ஒரு கோவில் முன்பு தேடிக்கொண்டு கிளம்புகின்றனர். அப்போது அங்கு ஒரு சாமியார் வந்து கதிர், ஞானம் என் பின்னாடி வாங்க நீங்க குணசேகரனை பாக்கணும்னா என் கூட வாங்க என்று சொல்கிறார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியான கதிர் மற்றும் ஞானம் இருவரும் நீங்க யாரு அண்ணன் எங்க இருக்காரு? சொல்லுங்க? என்று அந்த சாமியார் பின்னாடியே போகின்றனர். அதைத் தொடர்ந்து வீட்டில் அப்பத்தா ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி யோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கதிரோ ஞானமும் யாராவது போன் பண்ணு நாங்களா. இனி இவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு புருஷனாக இருக்க மாட்டாங்க. அவங்க அண்ணனோட தம்பியா மட்டும் தான் இருப்பாங்க.
ஞானம் இதுவரைக்கும் கொஞ்சவாவது மனசாட்சி கூட அப்பப்போ பேசுவான். இனி குணசேகரன் சொத்தை எழுதி வைத்திருப்பதால் முழுசா அண்ணனோட தம்பியா மாறிருவான் என்னுடைய கணக்குப்படி இன்னைக்கு குணசேகரனை கதிரும் ஞானமும் பார்த்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் கரிகாலன் வந்து இவர்கள் ஏதோ பிளான் போடுகிறார்கள் என்று விசாலாட்சியை கத்தி கூப்பிட அவரும் இனி நீங்க ஜனனி வரதுக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ அப்படித்தான் இருக்கணும்.

நீங்க படிச்ச படிப்புக்கு நான் அதை செய்யப்போறேன் இதை செய்யப் போறேன்னு யாரும் எதுவும் செய்யக் கூடாது. இன்னைக்கு எப்படியும் என் மகனை கதிரும் ஞானமும் பார்த்திடுவாங்கன்னு எனக்கு தோணுது. அதனால சீக்கிரமா குணசேகரன் வீட்டுக்கு வருவான். இனி நான் அவனுக்கு அம்மாவாக மட்டும்தான் நடந்துப்பேன் என்று பேசிவிட்டு போகிறார். அதைக் கேட்டு மீண்டும் மனம் மாறிவிட்ட விசாலாச்சியை நினைத்து அப்பத்தா யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
அதே நேரத்தில் குணசேகரன் பற்றி அப்பத்தா மற்றும் விசாலாட்சி மூலமாக இயக்குனர் குணசேகரன் கேரக்டர் குறித்து இன்று முக்கிய அப்டேட் என்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜீவானந்தம் ஒரு பக்கம் குணசேகரனை தேடி போயிருக்கிறார். அதுபோல குணசேகரனால் தான் ஜீவானந்தம் மனைவி இறந்துவிட்டார் என்பதால் கவுதம் குணசேகரனை கொலை செய்வதற்காக தேடிப் போயிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் என்ன நடக்க போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications