எதிர்நீச்சலில் குணசேகரனை பார்த்த கதிர், ஞானம்.. வீட்டில் கிடைத்த அதிர்ச்சி.. பரபரப்பின் உச்சம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 25ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனை தேடி போயிருந்த கதிர் மற்றும் ஞானத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது.

அதே நேரத்தில் வீட்டில் நந்தினி ஆதரவற்றோருக்கு உணவு சமைத்து அனுப்புவது விசாலாட்சி மூலமாக கதிருக்கு தெரிய வருகிறது. இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
இந்த நிலையில் அவர் நடித்து வந்த ஆதி குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்துவிற்கு பதில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரன் இனி மீண்டும் வருவாரா? இல்லையா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் குணசேகரன் ஈஸ்வரி மற்றும் தன்னுடைய குழந்தைகள் தன்னை பற்றி பேசியதை கேட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியது போன்று கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.

அதில் குணசேகரனை தேடி கதிர் மற்றும் ஞானம் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்திருந்தனர். இந்த நிலையில் குணசேகரன் இங்குதான் இருக்கிறார். இப்போது அவரை கூட்டிட்டு வருகிறேன் என்று சாமியார் ஒருவர் நேற்றைய எபிசோட்டில் கதிர் மற்றும் ஞானத்தை ஒரு கோவிலில் காத்த வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் காரில் இருந்து இறங்கி வெள்ளை வேஷ்டி கட்டிய ஒரு நபர் நடந்து வருகிறார்.
அப்போது அதே சாமியார் கதிர் மற்றும் ஞானம் முன்பு வந்து நிற்கையில் அவரிடம் ஞானம், என்னய்யா சொல்ற நீ என்று கோபமாக கேட்க, அதற்கு அந்த சாமியார் நான் சொன்னதை நீங்க நம்பலையா? அதோ பாருங்க ஆதாரம் என்று காட்டுகிறார். அதை பார்த்து கதிர் மற்றும் ஞானம் இருவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். அதைத்தொடர்ந்து கதிரும், ஞானமும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது கிச்சனிலிருந்து சமையல் செய்து சாப்பாடு பாத்திரங்களோடு நந்தினி வெளியே வந்து இவர்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்.
அதைத் தொடர்ந்து கிச்சனுக்குள் சாப்பாடு செய்து பாத்திரங்கள் இருப்பதை பார்த்ததும் உள்ளே வரும் கதிர் எங்கடி போகுது இந்த சோறு எல்லாம் என்று கேட்கிறார். அதற்கு அது வந்து என்ற நந்தினி சமாளிக்க பார்க்க, அப்போது விசாலாட்சி அதை நான் சொல்றேன்ப்பா என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது.

அதே நேரத்தில் குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் வரவில்லை என்பது தெரிகிறது. அதுபோல அவர்கள் பார்த்தது குணசேகரனை தானா? அல்லது வேற யாரையுமா? என்ற எதிர்பார்ப்பும் பெரிய அளவில் எழுதுகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications