எதிர்நீச்சல்: நந்தினியை தொடர்ந்து மாட்டிய ஈஸ்வரி.. தர்ஷினி கேட்ட கேள்வி.. பல்டி அடித்த விசாலாட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ஈஸ்வரி காலேஜில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது நேற்றைய எபிசோடில் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது.

Ethirneechal Serial 2023 September 27th episode full update

அதே நேரத்தில் குணசேகரன் இல்லை என்பதால் விசாலாட்சி, கதிர், ஞானம் என மூவருமே குணசேகரன் ஆக மாறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி இடம் கதிர் வெண்பாவை பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது கண்டவங்க பிள்ளைக்கு எல்லாம் இங்கு சோறு போட்டு வளர்க்க முடியாது. இன்னைக்கு ராத்திரியோட ராத்திரியா இந்த புள்ள இங்கிருந்து கிளம்பனும். இல்லன்னா அவ்வளவுதான் என்று சொல்லி நிறுத்திவிட்டு கிளம்புகிறார்.

அவர்கள் போனதும் வெண்பா என்னால தான் உங்களுக்கு பிரச்சனையா ஈஸ்வரி அம்மா என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி ஆறுதல் கூறுகிறார். அதைத் தொடர்ந்து இரவு நேரத்தில் வீட்டு பெண்கள் எல்லோரும் தோட்டத்தில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது நந்தினி சோகத்தோடு நான் கஷ்டப்பட்டுறது கூட பரவாயில்லை. பாவம் அந்த வயசானவங்க பட்டினியா இருந்திருப்பார்கள்.

Ethirneechal Serial 2023 September 27th episode full update

நினைக்கும்போது தான் எனக்கு கஷ்டமா இருக்கு. இப்படி வயசானவங்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாமல் பண்ணுன இந்த கதிர் எல்லாம் கடைசி காலத்துல சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டு தான் சாவுவான் என்று சாபம் கொடுத்து கொண்டிருக்கிறார்.அதோடு,சாரி ஜனனி என்னை மன்னிச்சிடு. எனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு நீ வாங்கி கொடுத்த ஆனா அதை என்னால காப்பாத்த முடியாமல் போய்விட்டது என்று நந்தினி வருத்தப்பட, அதற்கு ஜனனி இது ஒரு தடங்கல் தான்.

இந்தத் தடங்கலால் நம்ம முயற்சி முடிஞ்சதா அர்த்தம் இல்லை. நாம முன்னேற கூடாது என்பதற்காக இந்த வீட்டில் இருக்கிறவங்க கயிறு போட்டு நம்மளை பின்னாடி இழுக்கிறாங்க என்று சொல்ல, அதற்கு தர்ஷினி அந்த கயிறை வெட்டி விட வேண்டியதுதானே என்று கேட்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். கூடவே உங்களுக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் நீங்க இருக்காதீங்க. நீங்க இல்லனா இந்த வீடு எப்படி இருக்கும் என புரியணும் என்று தர்ஷினி, தாரா என எல்லா குழந்தைகளும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 September 27th episode full update

அதோடு எங்கள பத்தி கவலைப்படாதீங்க. நாங்க எங்கள பார்த்துக்கொள்கிறோம் என்று குழந்தைகள் பேசிக் கொண்டிருக்க தாரா, ஜனனி சித்தி நீங்கதானே ஐடியா குடோன் ஆச்சே பட்டுனு ஏதாவது யோசிச்சு டக்குன்னு இவங்க எல்லாரையும் தூக்குங்க என்று சொல்கிறார். அப்போது எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ஈஸ்வரியை தேடி ஒரு பெண் வருகிறார். அதை பார்த்து கதிர் யார் என்று விசாரிக்க, நான் ஈஸ்வரி மேடம் வேலை பார்க்கிற காலேஜில் தான் நானும் வேலை பார்க்கிறேன். அடுத்த வாரம் ஈஸ்வரி மேடம் காலேஜில் ஒரு லெக்ச்சர் இருக்கு அதை சொல்றதுக்காகத்தான் வந்தேன் என்று சொல்ல, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Ethirneechal Serial 2023 September 27th episode full update

அதை கேட்டதும் விசாலாட்சி வீட்ல யாருக்கும் தெரியாம களவாணித்தனம் பண்றீங்களாடி. எத்தனை நாளா இது நடக்குது? என்னோட பிள்ளையை மரியாதை இல்லாம பேசி அனுப்பிட்டு கொஞ்சம் கூட, அதை பத்தி கவலைப்படாம நீயும் உன் பிள்ளைகளும் ஊதாரித்தனம் பண்றதுக்காக இப்படி திருத்துதுட்டுத்தனமா காசு கேக்குறீங்களா? என்று அசிங்கமாக திட்டுகிறார்.

அத்தோடு வீட்டிற்கு ஐஸ்வர்யா தேடி வந்த பெண்ணையும் அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு திட்டி அனுப்பிகின்றனர். பிறகு ஞானம், ரேணுகாவிடம் இன்னும் நீ என்ன திருட்டுத்தனம் செய்கிறாய் என்று தெரியவில்லை. தெரிந்ததற்கு அப்புறம் சந்தி சிரிச்சிடும், ஜாக்கிரதை என்று மிரட்டுகிறார். அதைத் தொடர்ந்து அப்போது அங்கு வெண்பா நிற்பதை கதிர் பார்த்து முறைத்தபடி நிற்கிறார்.

இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. அதே நேரத்தில் குணசேகரன் வீட்டை விட்டு கிளம்பியதும் அவருடைய அம்மாவும் தம்பிகளும் குணசேகரன் ஆக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் எப்படி எதிர்நீச்சல் போட போகிறார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+