மீண்டும் வீட்டிற்கு வந்த அப்பத்தா.. குணசேகரனுக்கு வந்த புது பிரச்சனை.. ஈஸ்வரி கொடுத்த பதிலடி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் போலீஸோடு அப்பத்தா வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
அதே நேரத்தில் குணசேகரன் ஈஸ்வரியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என்று வீட்டு பெரியவர்களை கூப்பிட்டு வைத்து பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கிச்சனில் ஈஸ்வரி அழுது கொண்டிருக்க, அவரை நந்தினியும் ரேணுகாவும் சமாதானப்படுத்துகின்றனர். நீங்க இப்படியே அழுதுகிட்டு இருக்காம குழந்தைகள் கிட்ட பேசுங்க அப்பதான் அவர்கள் என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியும். அவர்கள் பயந்து விடக்கூடாது என்று சொல்லி குழந்தைகளும் சாப்பிடவில்லை அவர்களுக்கு பால் கொடுத்துட்டு வாங்க என்று அனுப்பி வைக்கின்றனர்.

அதற்கு ஈஸ்வரியும் சரி என்று தர்ஷினி மற்றும் தர்ஷனை சாப்பிட வர கூப்பிட தர்ஷினி கோபப்பட்டு திட்டுகிறார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய, பிறகு நீ எதற்காக இந்த ஆளுகிட்ட அடிமையா இந்த வீட்டில் இருக்கணும்? எங்களுக்காக இந்த வீட்டுல இவ்வளவு பிரச்சினையை தாங்கிக்கிட்டு இருக்கேன் என்று மட்டும் சொல்லாத அம்மா என்று கோபத்தில் கத்த, அதற்கு தர்ஷன் இன்னொரு தடவை அந்த ஆளு உன்ன பத்தி ஏதாவது தப்பா பேசினா நான் பார்த்துகிட்டு இருக்க மாட்டேன் என்று கத்தி மிரட்டுகிறார்.
குழந்தைகள் இருவரும் தன் மீது நம்பிக்கை வைத்து இருப்பதை பார்த்து ஈஸ்வரி சந்தோஷத்தில் இருவரையும் கட்டி அணைத்துக்கொள்ள அதை பார்த்து வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் ஈஸ்வரி தர்ஷினி மற்றும் தர்ஷனுக்கு படிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் கீழே குணசேகரன் ஈஸ்வரியின் அப்பா மற்றும் மேலும் ஒரு சில பெரியவர்களோடு அமர்ந்திருக்கிறார்.

அப்போது ஈஸ்வரியின் அப்பா என்ன ஆச்சு? எதுக்காக எங்களை வரச் சொல்லி இருக்கீங்க என்று கேட்க, அதற்கு நீங்க நேற்றைக்கு நீங்க உடைத்த உண்மையின் விளைவு தான் இது. உங்க மகள் என்கிட்ட சுதந்திரம் கேட்குறா, அதனால அவளுக்கு நான் சுதந்திரத்தை கொடுக்க போறேன் என்று சொல்ல, நான் என்னத்த சொன்னேன் என்று ஈஸ்வரியின் அப்பா புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, ஈஸ்வரி ஜீவானந்தம் பற்றி நீங்க சொன்னதை வைத்து தான் இவ்வளவு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காரு என்ற விளக்கம் கொடுக்கிறார்.
அதற்கு ஈஸ்வரியின் அப்பா நான் எதார்த்தமா பேசினதை இந்த பாவி மனுஷன் இப்படி மனசுக்குள்ள வஞ்சகமா வச்சுக்கிட்டு பிரச்சனை பண்ணுவான்னு எனக்கு தெரியலையே என்று திட்ட, அதற்கு கதிர் வார்த்தையை அளந்து பேசணும் ஏதாவது திமிரா பேசிகிட்டு இருக்க கூடாது வெளியே போயிரு என்று மிரட்ட அதற்கு ஈஸ்வரி கதிரை திட்டுகிறார். அதைத் தொடர்ந்து குணசேகரன் தன்னுடைய மாமாவிடம் எங்களை பிரித்து விட்ருங்க மாமா இவளுக்கு எவ்வளவு ஜீவாம்சம் வேணுமோ கேட்கச் சொல்லுங்க. நான் குடுக்குறேன் . அவளை வீட்டை விட்டு போக சொல்லுங்க என்று சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி கல்யாணம் என்கிற பெயரில் கூட்டிட்டு வந்து அடைச்சு வச்சு இத்தனை வருஷமா சித்ரவதை பண்ணிக்கிட்டு இப்போ பணம் தரேன் போயிடு என்றால் என்ன கதை? நான் படிச்ச படிப்புக்கு வேலைக்கு போயிருந்தா இன்று என்னுடைய நிலைமை என்ன தெரியுமா என்று கேட்க குணசேகரன் மீண்டும் தன்னுடைய மாமாவிடம் இவளை பிரித்து விட வேண்டும் என்று சொல்ல, அதற்கு அவருடைய மாமா இத்தனை வயசுக்கு பிறகு பிரிச்சு வச்சு என்ன பண்ண போற என்று கேட்க, குணசேகரனை கட்டிக்க ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அப்பத்தா போலீஸ்காரர்களோடு வீட்டிற்குள் வருகிறார்.
வீட்டில் எல்லோரும் ஹாலில் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு போலீஸோடு அப்பத்தா வந்து நிற்க்க, குணசேகரன் அப்படியே கோபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. இனி அப்பத்தா என்ன பிரச்சனை செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்புக்கு இன்று விடை தெரியும். அதே நேரத்தில் ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்றும் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications