அப்பத்தா கேட்ட கேள்வி.. வீட்டை விட்டு போக முடிவெடுத்த குணசேகரன்.. சக்தி செய்த நக்கல்.. செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஈஸ்வரியை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சொன்ன குணசேகரனுக்கு அப்பத்தாவால் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

அதே நேரத்தில் அப்பத்தா சொன்ன கண்டிஷனை கேட்டு குணசேகரன் நாங்க குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியேறவா? என்று கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் ஒவ்வொரு நாளும் புது புது பிரச்சனைகளும் அடுத்தடுத்த திருப்பங்களும் வேகமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தம் ஈஸ்வரியை ஆரம்பத்தில் பொண்ணு கேட்டது, அதற்கு அவருடைய அப்பா முடியாது என்று சொன்னது எல்லாம் இப்போது குணசேகரனிடம் ஈஸ்வரியின் அப்பா உளறி கொட்டி வைத்திருக்கிறார்.

அதனால் அடுத்து பெரிய பிரச்சனை வர இருக்கிறது என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அதுபோலவே நேற்றைய எபிசோடில் நடந்தது. குணசேகரன் தன்னுடைய மாமா மற்றும் ஊரில் இருக்கும் ஒரு சில பெரிய மனிதர்களை தன்னுடைய வீட்டிற்கு வரவைத்து எனக்கும் ஈஸ்வரிக்கும் விவாகரத்து செய்து வைக்க வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஈஸ்வரி இடம் உன்னை இனி அந்த ஆளு ஒரு வார்த்தை தப்பா பேசினாலும் நடக்கிறதே வேற என்று தர்ஷன் தன்னுடைய அப்பாவை பற்றியே பேசியிருக்கிறார். அதுபோல தர்ஷனியும் ஈஸ்வரிக்கு சாதகமாக பேசி இருக்கிறார். இந்த நிலையில் குணசேகரன் செய்யும் பிரச்சனைக்கு தர்ஷன் அல்லது தர்ஷினி பதிலடி கொடுப்பாரா? என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிரடியாக நேற்றைய எபிசோடின் இறுதியில் அப்பத்தா வீட்டிற்குள் இரண்டு போலீஸோடு வந்திருந்தார்.

இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்று பிரமோக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய எபிசோடுக்கான பிரமோ இன்று மதியத்துக்கு மேலே தான் வந்திருக்கிறது. அதில் அப்பத்தா இவங்க எல்லாம் எதுக்காக வந்து இருக்காங்க என்று அங்கு இருப்பவர்களை பார்த்து கேட்க, அதற்கு ரேணுகா அது ஈஸ்வரி அக்காவை டைவர்ஸ் பண்ண போறாங்கலாம் அதுக்கு தான் என்று சொல்ல, அதுக்கு முன்னாடி தீர்க்க வேண்டிய கணக்கு எல்லாம் நிறைய இருக்குப்பா என்று அப்பத்தா சொல்கிறார்.
சத்தி, ஜனனி இனி இந்த வீட்டில என்கூட தான் இருப்பாங்க என்று அப்பத்தான் சொல்ல, அதற்கு குணசேகரன் அப்போ நாங்க வேணா மொத்தமா வெளியேறட்டுமா என்று கேட்க, அதற்கு அப்பத்தா அது உன் இஷ்டம் என்று சொல்ல, சரி ரைட்டு விடு வடிவேலு போல குணசேகரன் சொல்ல அதைக் கேட்டு சக்தி நக்கலாக சிரிக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் அதிகமான ரசிகர்கள் இன்றைய எபிசொட்டில் சண்டை மட்டுமல்லாமல் காமெடியும் இருக்கும் போல என்று அதற்காக காத்திருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications