எதிர்நீச்சல்: ஜீவானந்தத்திடம் ரவுடி காட்டிய ஆதாரம்.. உடைபட்ட உண்மை.. தர்ஷினியை கடத்தியது இவரா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை தேடி போய் இருந்த இடத்தில் தர்ஷினியை அடைத்து வைத்திருக்கும் அடியாள் வந்து ஜீவானந்தத்திடம் மாட்டுகிறார்.
அதே நேரத்தில் வீட்டில் கதிரை தொடர்ந்து இப்போது ஞானமும் தங்கள் வீட்டு மருமகளை புரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற என்று விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியை கடத்தியது யார் என்ற கேள்வி தான் இப்போது அனைவர் மனதிலும் இருக்கிறது. ஒரு பக்கம் குணசேகரன் தான் எலக்சனில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மகளை கடத்தி வைத்திருக்கிறாரோ என்ற கேள்விகள் எழுகிறது. அதனால் தான் அந்த ரவுடிகள் கூட தர்ஷினியை எதுவும் செய்து விடாமல் பாதுகாத்து வருகிறார்களா என்றும் யோசிக்க வைக்கிறது.
அதே நேரத்தில் வீட்டில் ஜான்சி ராணி காணாமல் போய் இருப்பதால் ஜான்சி ராணி ஒருவேளை தர்ஷணியை கடத்தி வைத்திருக்கிறாரோ என்ற கேள்விகளும் எல்லோருக்கும் இருக்கிறது. அதை உண்மை என்று சொல்ற மாதிரிதான் அந்த ரவுடிகளில் தலைவன் ஒரு பெண்ணிடம் அடிக்கடி போனில் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பது குறித்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதுபோல இன்னொரு கோணத்திலும் எல்லோருக்கும் கேள்விகள் வரும்,
அதாவது ஜனனியின் அப்பா குடும்பத்தினரில் யாராவது ஒருவர் தர்ஷினியை கடத்தி வைத்து ஜனனியை பழி வாங்குவதற்காக புது ப்ளான் போடுகிறார்களா? அல்லது புது எதிரி யாராவது வந்திருக்கிறார்களா? என்றும் அடுத்தடுத்து கேள்விகள் எல்லோருக்கும் வந்து கொண்டே இருக்கும் நிலையில் தர்ஷினி அந்த ரவுடிகளிடமிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று அடுத்தடுத்து பிளான் போட்டுக் கொண்டே இருக்கிறார்.
அதாவது முதலில் உள்ளிருந்த ரவுடிகளிடம் எனக்கு பாத்ரூம் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்களை அடித்து போட்டு விட்டு அங்கிருந்து ஓடி வந்து அந்த ரவுடி கூட்டத்தின் தலைவரிடம் மாட்டிக் கொண்டார். அதற்கு பிறகும் விடாமல் முயற்சி செய்து தன்னுடைய கைகளை பின்பக்கமாக கட்டாதீர்கள் வலிக்கிறது என்று சொல்லி முன்பக்கமாக கையை கட்ட வைத்து அதில் பக்கத்தில் இருந்த நோட்டில் தன்னை காப்பாற்றும்படி எழுதி அதை ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசி இருந்தார்.
அதுபோல தனக்கு பீரியட்ஸ் அதனால் பேட் வேண்டும், அதுவும் நான் சொல்ற பிராண்ட் வேணும் இல்லன்னா எனக்கு அலர்ஜி இருக்கிறதால பிரச்சனை ஆகிடும் என்று பயமுறுத்தி ஒரு கடிதத்தில் தன்னை அடக்கி வைத்திருப்பது குறித்து எழுதி வைத்திருக்கிறார். இப்படியான நிலையில் நேற்றைய எபிசோடில் பெரிய அளவில் பில்டப்புக்கு இடையே ஜீவானந்தம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இத்தனை நாட்களும் சக்தி பெண்களுக்கு துணையாக வந்திருந்து நிலையில் இப்போது சக்திக்கு ஆக்சிடென்ட் ஆனதால் சக்தி மருத்துவமனையில் இருக்க இப்போது பெண்களுக்கு துணையாக நேற்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ஜீவானந்தம் வந்து சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஜீவானந்தத்திடமே அந்த ரவுடி வந்து இதுல என்ன எழுதி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க என்று கேட்கிறார்.
ஒருவேளை அது மட்டும் தர்ஷினி எழுதிக் கொடுத்த பேப்பராக இருந்தால் இன்று தர்ஷினியை கண்டுபிடித்து விடுவார்கள். அதுபோல ஜீவானந்தம் தர்ஷினியை அடைத்து வைத்திருக்கும் இடத்தின் பக்கத்தில் வரைக்கும் வந்து இந்த வழியாகத்தான் அந்த கார் போயிருக்கிறது அதுவும் போக மட்டும்தான் செய்திருக்கிறதே தவிர அந்த கார் திரும்பி வரவில்லை என்று கண்டுபிடித்து இருப்பதால் இன்றைய எபிசோடில் பெரிய அளவில் பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் வீட்டில் குணசேகரனும், விசாலாட்சி அம்மாவும் ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி நான்கு பேரும் பொண்ணை கடத்தி வச்சிட்டு அவங்களே தேட போற மாதிரி நடிச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னதுக்கு அது எப்படி அவங்களே மறைத்து வைத்துவிட்டு பொண்ணை தேடுவாங்களா? அதுவும் இராவும் பகலுமா பொண்ணுக்காக அவங்க அலைஞ்சுகிட்டு இருக்காங்களே என்று ஞானம் சப்போர்ட் பண்ணி இருக்கிறார்.
அதே நேரத்தில் தாரா, கதிர் மற்றும் ஞானத்திடம் நம்மல பெரியப்பா இவ்வளவு பேசின பிறகும் நாம அவங்க வீட்டில் சாப்பிடனுமா என்று கதிர் மற்றும் ஞானம் தன்மானத்தை தூண்டி இருக்கிறார். இதனால் இவர்கள் மனம் இனி மனம் மாறுவார்களா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications