ஜீவானந்தத்தால் ஈஸ்வரிக்கு வரும் பிரச்சனை.. குணசேகரனுக்கு வீட்டிற்குள் தங்கி ஆப்பு வைக்கும் பெண்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 23ஆம் தேதிக்கான எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை காப்பாற்றுவதற்காக ஜெயிலுக்கு போகும் வழியில் வேனில் இருந்து ஜீவானந்தம் தப்பி வெளியே ஓடி இருக்கிறார்.
அதே நேரத்தில் குணசேகரன் வீட்டில் ஜனனியின் அத்தை தங்க போவதாக சொல்லி மொத்தக் குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். குணசேகரன் குடும்பத்தை பழி வாங்குவதற்காக ஜனனியின் அப்பா குடும்பத்தினர் பிளான் போட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் காணாமல் போன தர்ஷினியை கிட்டத்தட்ட ஒரு மாதமாக தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பற்றிய செய்தி மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் குணசேகரன் வீட்டிற்குள் நாளுக்கு நாள் பிரச்சனைகளும் சவால்கள் மட்டும் பஞ்சம் இல்லாமல் வெடித்துக்கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு மாத்தி மாத்தி சவால் போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர காணாமல் போன பிள்ளை என்னாச்சினு யாரும் தேடவில்லை.
நேற்றைய எபிசோடில் கதிர் தர்ஷினியை போலீஸ் ஒரு பக்கம் தேடட்டும் நாமும் ஒரு பக்கம் தேடுவோம் என்று சொல்லும் போது ஜனனி அதை மறுத்துவிட்டார். ஏற்கனவே நாங்க ஒரு பக்கமாக போலீசை நம்பாமல் தர்ஷினியை தேடியதால் தான் இன்னைக்கு ஈஸ்வரி அக்கா ஜெயிலுக்குள் இருக்காங்க. அதனால மீண்டும் நாம அதே தப்பை பண்ண கூடாது போலீஸ் ஜனனியை தேடி கண்டுபிடிக்கட்டும் என்று அசால்டாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்க்கும்போதே கடுப்பாக இருக்கிறது. வீட்டில் ஒரு பிள்ளையை காணவில்லை என்றால் வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு பதறி துடிப்பார்கள். ஆனால் இந்த சீரியலில் மட்டும் வீட்டு பிள்ளையை காணவில்லை ஆனால் எல்லோரும் அடுத்து என்ன பிசினஸ் செய்யலாம் என்று ஆர அமர பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறாரா என்று சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.
அதனால் அவர் கூட தர்ஷினி காணவில்லை என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் வீட்டில் இருப்பவர்கள் நடவடிக்கை பார்த்து ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கும் நேரத்தில் இதற்கு இயக்குனர் கதையை வேறு விதமாக மாற்றி இருக்கிறார். இதுவரைக்கும் இந்த சீரியல் பெண்கள் முன்னேற்றத்தை பற்றியது என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் தோற்றுப் போய்க் கொண்டிருந்தனர்.

ஆனால் இப்போது இந்த சீரியலில் இயக்குனரே கதாநாயகனாக மாறி இருக்கிறார். அதாவது இன்று வெளியான ப்ரோமோவில் ஜெயிலுக்கு போகும் வழியிலேயே வேனில் இருந்து ஜீவானந்தம் தப்பித்து போய் இருக்கிறார். அதனால் இனி ஈஸ்வரிக்கு தான் பிரச்சனை வரப் போகிறது. அதே நேரத்தில் குணசேகரன் வீட்டுக்கு நேற்று வந்த ஜனனியின் அத்தை நான் இந்த வீட்டில் இரண்டு நாள் தங்கி இருந்து அண்ணனுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஜான்சி ராணி என்று குணசேகரனுக்கு சப்போர்ட் பண்ணி கொண்டு இருந்த நிலையில் ஒரே நாளில் குணசேகரன் ஜான்சி ராணியை ஓட விட்டிருந்தார். ஆனால் இப்போது ஜனனியை பழி வாங்க வேண்டும் என்று வீட்டுக்குள் வந்திருக்கும் புது பெண்ணால் இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications