ஜனனி பிளான் பற்றி வீட்டில் மாட்டி விட்ட கரிகாலன்.. குணசேகரனால் அடுத்து நடக்கப்போவது இதுதானா?

ஆதிரையை அருணை சந்திப்பதற்காக அழைத்து சென்றது ஜனனி தான் என கரிகாலன் குணசேகரனிடம் போட்டு கொடுத்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 27வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஆதிரைக்கு விருப்பமில்லாத திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று ஜனனி பிளான் செய்து இருக்கிறார்.

சென்டர் சென்ற இடத்தில் கரிகாலனுக்கு தெரியாமல் ஆதிரையை அருணை சந்திப்பதற்காக ஜனனி கூட்டி சென்றிருக்கிறார்.

அடுத்தடுத்த பிரச்சனைகள்

அடுத்தடுத்த பிரச்சனைகள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பான கதை களத்தில் பல திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது. ஆதிரையின் திருமண விஷயத்தில் அடுத்தடுத்து குணசேகரனின் வீட்டில் புதுப்புது பிரச்சனைகள் கிளம்பி கொண்டே இருக்கிறது. ஆதிரை அருணை காதலிக்கும் விஷயத்தை கரிகாலன் வீட்டில் போட்டுக் கொடுக்க, அதற்குப் பிறகு பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. ஆதிரையின் திருமண விஷயத்தில் தன்னுடைய சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தம்பிகளையும் வரிசை கட்டி அவமானப்படுத்த தொடங்கிவிட்டார்.

ஏமாற்றிய ஆதிரை

ஏமாற்றிய ஆதிரை

ஆரம்பத்தில் சக்தி குணசேகரனை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தற்போது அதைத் தொடர்ந்து ஞாணத்தையும் குணசேகரன்
திட்டியதால் ஞாணமும் குணசேகரனை விட்டு பிரிந்து இருக்கிறார். இந்த நிலையில் எப்படியும் கரிகலனுக்கும் ஆதிரைக்கும் தான் திருமணம் என்று விடாப்பிடியாக இருக்கும் குணசேகரனிடம் தான் சென்டர் வரைக்கும் சென்று விட்டு வருவதாக ஆதிரை நேற்று கூறியிருந்தார். சென்டருக்கு செல்வது என்றால் கரிகாலனை கூட்டிகிட்டு செல் இல்லை என்றால் போக வேண்டாம் என்று கராராக குணசேகரனும் கூறியிருந்தார்.

மன்னிப்பு கேட்ட ஜனனி

மன்னிப்பு கேட்ட ஜனனி

இந்த நிலையில் கரிகாலனோடு சென்ற ஆதிரையை கரிகாலனுக்கு தெரியாமல் ஜனனி கூட்டிக்கொண்டு சென்று அருணை சந்திக்க வைத்திருக்கிறார். அங்கே குணசேகரனை பற்றி எங்களுக்கு தெரிந்தும் உங்களை அங்கே கூப்பிட்டது என்னோட தப்பு தான் என்று ஜனனி மன்னிப்பு கேட்க, அருண் என்னுடைய அண்ணியை குணசேகரன் அவமானம் செய்தது எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை என்று கூற, ஜனனி அதற்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தபடி நிற்கிறார். பிறகு வீட்டிற்கு வரும் நிலையில் அங்கே கரிகாலன் அவர்களுக்கு முன்பே வீட்டிற்கு சென்று விடுகிறார்.

மாட்டிக்கொண்ட ஜனனி

மாட்டிக்கொண்ட ஜனனி

ஆதிரை அருணை சந்தித்த விஷயம் கதிருக்கு தெரிந்துவிட, அந்தப் பையனோட ஊர் சுத்த போயிருக்கா என்று ஆதிரையை திட்டிக் கொண்டிருக்க, அப்போது வரும் குணசேகரன் நீ சென்டருக்கு போறேன் என்று தானே போன என்று கேட்க? அம்புட்டும் பொய் மாமா, இந்த மேடம் தான் கூட்டிட்டு போய் இருக்காங்க என்று அங்கே வந்த ஜனனியை பார்த்து கரிகாலன் போட்டுக் கொடுக்க, கோபத்தில் குணசேகரன் ஜனனியை முறைத்தபடி நிற்க, இனி என்ன நடக்கப் போகிறதோ என்று ரேணுகா மற்றும் நந்தினி பதறி கொண்டு இருக்கின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி பரவி வர, என்னிடம் நீ விட்ட சவாலில் ஜெயிப்பதற்காக இப்படி ஆதிரையை கூட்டி கொடுக்கிறியா? என்று குணசேகரன் ஜனனியை திட்டி அடுத்த முகூர்த்தத்தில் கரிகாலனுக்கு ஆதிரைக்கும் திருமணம் என்று சொல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இனி அடுத்ததாக என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்று ரசிகர்களை எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+