பலரால் புகழப்படும் எதிர்நீச்சலில் இப்படி சொதப்பலா? கடைசியில் இப்படி பண்ணலாமா? ரசிகர்கள் கேள்வி
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை விஷம் குடித்த விஷயத்தை வைத்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 28 வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
காதலுக்காக ஆதிரை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
பெண்கள் எதிர்நீச்சல் போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் இது என்ன கோழைத்தனமாக முடிவெடுக்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆதரவு அதிகமாக இருக்கிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் நடிக்க முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்பட்டு வருவதால் கதை விறுவிறுப்பாகவும் வித்தியாசமாகவும் இருந்து வரும் நிலையில் திடீரென்று இந்த சீரியலில் சருக்கல் ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகமாக கருது தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலின் ப்ரோமோ வெளியானதும் நிமிடங்களில் வியூஸ் லட்சங்களை தாண்டி சென்று விடுகிறது. லைக்குகள் அதிகமாக குவிந்து வரும் நிலையில் இந்த சீரியலில் இப்படி ஒரு சொதப்பல் தேவையா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

ஆதிரையின் காதல்
எதிர்நீச்சல் சீரியலில் சமீப காலமாகவே ஆதிரையின் காதல் விஷயமும் அதைத்தொடர்ந்து அவருக்கு கல்யாணம் விஷயம் தான் இழுத்துக் கொண்டே வருகிறது. ஆதிரை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் போட்டுக் கொடுத்த கரிகாலனுக்கு உடனே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று குணசேகரன் முடிவெடுத்திருக்கும் போது தன்னை மதிக்காமல் யாருக்கும் மரியாதை கொடுக்காமல் இருக்கும் ஆதிரைக்கு வீட்டில் இருக்கும் மருமகள்கள் குறிப்பாக ஜனனி உதவி செய்து அவளுக்கு பிடித்த திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்.

எதிர் நீச்சல் இல்லையே
ஆதிரை குணசேகரனின் பரம எதிரி குடும்பத்து பையனை காதலிக்கிறார் என்ற ஒரே காரணத்தால் குணசேகரன் பிடிவாதமாக ஆதிரை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அடுத்தடுத்து தன்னுடைய தம்பிகளிடம் தன்னுடைய வன்மத்தை காட்டி அவர்களும் தன்னை விட்டு பிரிந்து போக காரணமாக இருக்கிறார். இந்த நிலையில் பெண்கள் இந்த சீரியலில் துணிச்சலாக முடிவெடுப்பார்கள். பலருக்கும் முன்மாதிரியாக இருப்பார்கள் என்றெல்லாம் அதிகமாக புகழப்பட்டு வரும் நிலையில் பட்டம்மாள் அப்பத்தா மட்டும் தான் தண்ணியாகவே துணிச்சலாக எந்த முடிவும் எடுக்கிறார். கதாநாயகியாக இருக்கும் ஜனனியும் எந்த இடத்திலும் முடிவு எடுக்கும் போது தயக்கத்தோடும் அது கடைசியில் தவறாகத்தான் வந்து நிற்கிறது. அப்பத்தாவின் உதவியோடு தான் ஜனனியும் இருந்து வருகிறார்.

எதிர்பார்க்காத சொதப்பல்கள்
தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொருத்தராக சுயமாக முடிவெடுப்பார்கள் என்று நினைத்திருந்த நிலையில் சில மாதங்களுக்கும் முன்பு ஈஸ்வரி தன்னுடைய பையனை திருத்தியது பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. அதற்கு பிறகு ஆதிரை திருமண விஷயம் வந்த பிறகு இந்த சீரியலில் இழுவை அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். அருணை கதிர் அடிக்கும் போது அருண் திருப்பி அடிக்கவில்லை. அதே நேரத்தில் ஆதிரையும் எதுவும் சொல்லாமல் பயந்தபடி அழுது கொண்டிருக்கிறார். எந்த ஒரு கோழையாக இருந்தாலும் தனக்கு மனதிற்கு பிடித்த ஒரு நபரை அடிக்கும்போது எதிர்த்து நிற்பார் ஆனால் ஆதிரை அதையும் செய்யவில்லை என்பது பலருடைய குறையாக சொல்லப்படுகிறது.

இவருக்குத்தான் இது பொருந்தும்
அது மட்டுமில்லாமல் குணசேகரன் திட்டியதாலும் திருமணத்திற்கு சம்மதிக்காததாலும் ஆதிரை தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் சாப்பிட்டு விட்டார். இன்றைய பிரமோவில் ஆதிரையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அனைவரும் ஓடுகின்றனர். தூக்கி வளர்த்த அண்ணன் என்று பெருமை பேசிக்கொண்டு இருக்கும் குணசேகரன் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு தேவையானதை போராடி பெறாமல் கோழைத்தனமாக முடிவெடுக்கும் கதையை எதிர்நீச்சல் சீரியலிலும் கொண்டுவந்து விட்டார்களா? இந்த சீரியலில் உண்மையாக எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருப்பது என்றால் குணசேகரன் மட்டும்தான். அவர்தான் எந்த இடத்திலும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தாண்டி தைரியமாக இருக்கிறார். மத்த பெண்கள் யாரும் அப்படி இல்லையே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications