தர்ஷினி விஷயத்தில் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த இயக்குனர்? கடைசியில் இப்படி ஆகிடுச்சே?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் மார்ச் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் தர்ஷினியை தேடி போன கொற்றவை அணியினர் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்த ரேணுகா மற்றும் நந்தினிக்கு இடையே ஞானத்தால் பிரச்சனை வெடித்திருக்கிறது.
இந்த நிலையில் ஞானம், கதிர், ரேணுகா, நந்தினி நான்கு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படும் குணசேகரனுக்கு ஞானம் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த தருணம் நடக்க தொடங்கி இருக்கிறது. அதாவது இத்தனை நாட்களாக தர்ஷினி எங்கே போனார் என்று தேடிக் கொண்டிருந்த ஜனனி மற்றும் கொற்றவை குரூப்பிற்கு குதிரை மூலமாக தர்ஷினி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே குதிரை தான் தர்ஷினியை கடத்தி வைத்திருந்தார்.
அவரிடம் இருந்து இப்போது இன்னொரு அடியாள் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறார் என்பது போலீஸ் தரப்பினருக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் தர்ஷினி இருக்கும் இடத்தை எல்லோரும் சுற்று போட்டு இருக்கின்றனர். ஆனால் நேற்றைய எபிசோட்டை பார்த்த ரசிகர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும் அதாவது குணசேகரன் போன் பண்ணி தர்ஷணியை அடைத்து வைத்திருக்கும் ரவுடி இடம் நீ என் பொண்ணை ஒரே இடத்துல அடச்சி வெச்சி இருக்காத,
அடிக்கடி இடத்தை மாத்திடு, அது போல அந்த குதிரையை நம்பாத அவனுக்கு இப்ப நடக்குற விஷயத்தை எதையும் சொல்லாத என்று சொல்லி இருக்கிறார். அதனால் ஜனனி குரூப் போலீஸோடு குதிரையை பின் தொடர்ந்து இருப்பது ஏமாற்றம்தான் கிடைக்கப்போகிறது.. அதே நேரத்தில் இத்தனை நாட்களாக குணசேகரன் வீட்டில் ஆண்கள் தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இப்போது பெண்களுக்குள் பிரச்சனை வந்து அவர்களுடைய சண்டை தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் நேற்றைய எபிசோடில் நந்தினி பேசுவதை புரிந்து கொள்ளாத ரேணுகா மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது பார்க்கும் ரசிகர்களையும் கடுப்பாக்கி இருக்கும். இத்தனை நாட்களாக நந்தினி பேசினால் கோபப்படாத ரேணுகா இப்போது கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
அதே நேரத்தில் இவர்களுடைய சண்டையை பார்த்து குணசேகரன் உங்க சமாச்சாரம் தான் ரோடு வரைக்கும் தெரியுது எதுக்காக இப்படி கத்திகிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறார். அதற்கு ஞானம் சும்மா எதையும் பேசிக்கிட்டே இருக்காதிங்க என்று குணசேகரனை அதட்டி இருக்கிறார். இப்படியான நிலையில் இனி தர்ஷினி கிடைத்தாலும் வீட்டிற்குள் நந்தினி மற்றும் ரேணுகாவிற்கு இடையே விழுந்திருக்கும் விரிசலால் ஆளாளுக்கு இனி குடும்பத்தை பிரித்துக் கொண்டு தனியாக போய் விடுவார்களோ என்று யோசிக்க வைக்கிறது.
அதே நேரத்தில் காணாமல் போன ஜீவானந்தம் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இனி ஜீவானந்தம் தான் தர்ஷினியை காப்பாற்றுவாரா? அல்லது கொற்றவை போலீஸ் மூலமாக தர்ஷினி காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இன்று எப்படியும் தர்ஷினியை இவர்கள் காப்பாற்ற போறது இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
ஏற்கனவே குணசேகரன் கரிகாலனோடு தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்கான எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருக்கும் நிலையில் இப்போதே தர்ஷினி கண்டுபிடிக்கப்பட்டால் கதையே மாறிவிடும். அதனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு தர்ஷினி கடத்தல் நாடகம் இழுக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications