மறைந்தார் ஆதி குணசேகரன்.. வருத்தங்களை பகிரும் எதிர்நீச்சல் குடும்பம்.. என்ன சொல்லி இருக்காங்க!
சென்னை: நடிகர் மாரிமுத்து எத்தனையோ திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் இருந்திருந்தாலும் அவருக்கு சின்னத்திரையில் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான்.
இந்த சீரியலில் வில்லனாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்ற நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து விட்டார்.

இது குறித்து அதிகமான ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவரோடு சீரியலில் ஒன்றாக நடித்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய சோகங்களை பகிர்ந்து இருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி ஆக நடிக்கும் ஹரிப்பிரியா நேற்று மாரிமுத்துவுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "நேற்று தான் நாம் இதை எடுத்தோம். இதை இருவரும் ஒன்றாக போஸ்ட் செய்ய சொன்னீர்கள். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை. நீங்கள் இன்று இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்ன சார் உங்களுக்கு அவசரம். இப்படியே எங்களை விட்டுட்டீர்களே? நந்தினி மிஸ் யூ மாமா... உண்மையான கலைஞனுக்கு முடிவே இல்லை. எங்கள் இதயங்களில் நீங்கள் என்றும் இருப்பீங்க. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று கூறி இருக்கிறார்.

அதுபோல இந்த சீரியலில் பர்ஹானா கேரக்டரில் குணசேகரனை எதிர்த்து நிற்கும் பெண்ணாக நடித்து வரும் நடிகை ஜிபா,, "இந்த மோசமான செய்தியால் தான் நான் எழுந்தேன். எதிர்நீச்சல் சீரியலில் உங்களுடன் பணி புரிந்த தருணங்களை என்னால் மறக்கவே முடியாது. எங்கள் தொழில் துறையில் எங்களுடைய அனைவருடைய இதயங்களிலும் நீங்கள் ஒரு முக்கியமான அடையாளத்தை அமைத்து இருக்கிறீர்கள். மாரிமுத்து சார் நீங்க இல்லாம் எதுவுமே நடக்காது. இவ்வளவு சீக்கிரமாக சென்று விட்டார். ஆர் ஐ பி என்றாலும் முடிந்தால் திரும்ப வர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

அதுபோல இந்த சீரியலில் ஜனனியாக நடித்து வரும் நடிகை மதுமிதா," நீங்கள் சிறந்தவர், பிரகாசம், உழைப்பு, சிரிப்பு மற்றும் அன்பு எல்லாவற்றாலும் நிரப்பப்பட்ட ஒரு பாரம்பரியத்தை நீங்கள் விட்டு சென்றிருக்கிறீர்கள். அதை யாராலும் மாற்ற முடியாது. உங்களுடைய விருப்பம் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும்..." என்று பதிவு மாரிமுத்துவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அதுபோல எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் மனைவியாக நடிக்கும் கனிகா, "ஏன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்தாய். ஏன் சார் இவ்வளவு அவசரப்பட்டு எங்களை விட்டுட்டுட்டிங்க..? உங்க சிரிப்பு, உங்கள் பேச்சு, எல்லாம் கண்ணு முன்னாடியே நிக்குது" என்று கண்ணீரோடு உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று அவரோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications