மாரிமுத்து இறப்பிற்கு.. சீரியலில் மனைவியாக நடித்த கனிகா சொன்ன வார்த்தை.. வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: சன் டிவில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்.
அவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரோடு எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரை ரசிகர்களில் மத்தியில் தனக்கென்று தனி அடையாளம் விட்டு சிம்ம சொப்பனமாக குணசேகரன் கேரக்டரில் மிரட்டிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய மறைவு இந்த சீரியலின் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது.
காலையில் இந்த செய்தி வெளியான நேரத்தில் இருந்து இது உண்மையாக இருக்காது என்று பலரும் தெரிவித்து இருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்து விட்டது என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதோடு அவரோடு சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றனர்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் குணசேகரனுக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா தன்னுடைய இரங்கல் குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் என்னால் பேசவே முடியவில்லை. என்னால் இதை நம்பவும் முடியவில்லை. மாரிமுத்து போன்ற ஒரு மனிதரை நான் பார்த்ததும் இல்லை, இனி பார்க்கப் போவதுமில்லை.
சீரியலில் மட்டும் தான் அவர் குணசேகரன் ஆக இருக்கிறாரே தவிர நிஜத்தில் நடிகர் மாரிமுத்துவின் குணம் யாருக்கும் வராது என்று பேசி இருக்கிறார். அதற்கு மேலே அவரால் பேச முடியாமல் வார்த்தைகள் திணற விட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரோடு அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பல பிரபலங்களும் தங்களுடைய வருத்தத்தையும் மாரிமுத்து பற்றி பல தகவல்களையும் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications