இப்பதானே நல்ல நிலைமைக்கு வந்தான்.. அவனுக்கு இத்தனை கவலைகள்..மாரி முத்து மறைவுக்கு வைரமுத்து வருத்தம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மறைவு குறித்த அவருக்கு ஆஸ்தான குருவாக இருந்த வைரமுத்து கண்ணீரோடு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
மாரிமுத்து 56 வயதில் இறந்தது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் எவ்வளவோ கனவோடு இருந்தான் என்று கண்ணீரோடு வைரமுத்து அதில் பேசியிருக்கிறார்.

மாரிமுத்துவுக்கு கல்யாணம் முடித்து வைத்ததே நான்தான். அவருடைய குடும்பத்திற்கு எந்த மாதிரி நான் ஆறுதல் சொல்ல போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை என்று வைரமுத்து பேசி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் ஆக மிரட்டி கொண்டு இருந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பு குறித்து பல்வேறு பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் மாரிமுத்து சினிமா வாழ்க்கையை நேசிப்பதற்கு காரணமாக இருந்த வைரமுத்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் மாரிமுத்து இறந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்ப முடியவில்லை. நான் வெளியிடத்தில் இருக்கிறேன். இந்த செய்தியை கேட்டதும் அப்படியே சேரில் சாய்ந்து விட்டேன். மாரிமுத்து என்னோட வீட்டில் செல்ல பிள்ளையாக வலம் வந்தவன். என்னுடைய கவிதைகளை அந்த அளவிற்கு அவன் நேசித்து பாராட்டி இருக்கிறான்.
மாரிமுத்து என்னுடைய கவிதைகளை பாராட்டிய பிறகு தான் எனக்கே அதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்று கூட தெரிந்தது. அந்த அளவிற்கு உன்னிப்பாக பார்த்து பேசக்கூடிய நல்ல மனிதன் மாரிமுத்து. முற்போக்கு வாதியாகவும் பல இக்கட்டான சூழ்நிலையிலும் தைரியமாகவும் துணிச்சலாகவும் முடிவெடுக்கக்கூடிய ஒரு நபர்தான்.
மாரிமுத்துவுக்கு கல்யாணத்தை முடித்து வைத்ததே நான்தான் என்னுடைய கையால் தான் நான் தாலி எடுத்துக் கொடுத்தேன். இப்போது மாரிமுத்துவின் இறப்பிற்கு அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எப்படி ஆறுதல் சொல்ல போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. மாரிமுத்து மறையவில்லை இந்த ஏமாற்றத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எவ்வளவோ கஷ்டங்களை தாண்டிய மாரி முத்து இப்போதுதான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்தான். இந்த நிலைமையில் இப்படி ஆகிவிட்டது என்று என்னுடைய இதயம் வலிக்கிறது. 56 வயதில் மாரடைப்பால் அவன் இறக்க வேண்டிய அவசியமே இல்லையே. இதெல்லாம் என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.
அவனுக்கு வீடு கட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு கல்யாணம் முடித்து வைக்க வேண்டும் என்று பல கனவுகள் இருந்தது. அதைக் குறித்து என்னிடம் எப்போதும் பேசிக் கொண்டிருப்பான். இப்போது இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என்று அந்த பேட்டியில் மாரிமுத்து குறித்து வைரமுத்து கண்ணீரோடு பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications