குணசேகரா.. கதறி அழுத நடிகை சத்யபிரியா.. மாரிமுத்துவின் மனைவிக்கு செய்த செயல்.. நெகிழ வைத்த காட்சி
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துவிட்டார்.
இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அந்த சீரியலில் குணசேகரனின் அம்மாவாக நடித்துவரும் விசாலாட்சி கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்துக் கொண்டிருந்த மாரிமுத்து இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். டப்பிங் பேச போன இடத்தில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவராகவே அங்கிருந்து காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார். பிறகு அவரை மருத்துவமனையில் சேர்க்க மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்திருக்கிறார்.
இந்த செய்தி வெளியானதில் இருந்து அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சியோடு இது உண்மைதானா? இல்லையா? என்று இணையத்தில் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தான் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மாரிமுத்துவின் உடல் அவருடைய வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதற்கு ரசிகர்கள், சீரியல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என தொடர்ச்சியாக பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து உடன் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மனைவியாக நடிக்கும் கனிகா கண்கங்கியபடியே, " இதை என்னால் நம்ப முடியவில்லை. நான் அதிர்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.
அதுபோல இந்த சீரியலில் தன்னுடைய மகன் குணசேகரன் தப்பே செய்கிறான் என்று தெரிந்தாலும் விட்டு கொடுக்காத விசாலாட்சி கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்யபிரியா குணசேகரின் இறப்பு கேட்டு பதறி அடித்து அவருடைய வீட்டிற்கு அவருடைய உடலை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அங்கு எப்போதும் சந்தோஷமாகவே மாரிமுத்துவை பார்த்த நடிகை சத்யபிரியா அமைதியாக மாரிமுத்துவின் உடல் அசைவற்று இருப்பதை பார்த்ததும் கதறி அழுது இருக்கிறார்.
மாரிமுத்துவின் உடலை பார்த்து குணசேகரா... குணசேகரா... என்று கதறி அழுது மேற்கொண்டு பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அருகில் கதறி அழுது கொண்டிருந்த மாரிமுத்துவின் மனைவியை பார்த்ததும் ஆறுதல் சொல்ல முடியாமல் அவருடைய முகத்தை தடவி பதில் பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பி போயிருக்கிறார். தனியாக இருந்தும் நடிகை சத்யபிரியா அழுது கொண்டிருந்தார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது. அத்தோடு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications