மாரிமுத்து இறந்ததற்கு அவருக்கு சவால் விட்ட ஜோதிடர் கருத்து.. இதைப் பேசவே கூடாது.. இதுதான் காரணமா?
சென்னை: இயக்குனராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து சின்ன துறையில் ஆதி குணசேகரன் ஆக பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக சற்றும் எதிர்பார்க்காத வகையில் காலமானார். அவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என தொடர்ச்சியாக பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்துவிற்கு சவால் விட்ட ஜோதிடர் மகரிஷி மந்திராச்சலம் மாரிமுத்து பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.

நடிகர் மாரிமுத்து தமிழா தமிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நவீன ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் செய்யும்போது கலந்து கொண்டார். அதில் நான் ஜோதிடத்தை நம்ப மாட்டேன் இந்த ஜோதிடர்களாலும் ஜோதிடத்தை நம்புவர்களாலும் தான் இந்த நாடு நாசமா போகிறது என்றும் ஜோதிடர்களை ஒருமையிலும் கோபத்தில் பேசியிருந்தார்.
இந்த எபிசோடு வெளியானதில் இருந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியிலும் மாரிமுத்து பேசிய வார்த்தைகளுக்கு தவறு என்று பல ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதில் ஒருவர் தான் மகரிஷி மந்திராச்சலம். இவர் நடிகர் மாரிமுத்துவிடம் உங்களுடைய ஜாதகத்தை தாருங்கள். நான் ஐந்து நாளுக்குள் உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை சொல்கிறேன் அப்படி நான் சொன்னது நடக்கவில்லை என்றால் உங்களுக்கு இரண்டு கோடி தருகிறேன் என்று சவால் விட்டு இருந்தார்.
அதுபோல இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் மாரிமுத்து நடிப்பை விட்டு விலகுவது வரைக்கும் நாங்கள் விடமாட்டோம் என்று அவர் மீது போலீஸ் ஸ்டேஷனிலும் கம்பளைண்டும் சில ஜோதிடர்கள் கூட சேர்ந்து கொடுத்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் இது ஜோதிடர்களின் சாபத்தால் வந்ததா? என்று கூட பல கருத்துக்கள் சமூக வலைதளத்தில் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் பேட்டியில் ஜோதிடர் மகரிஷி மந்திராச்சலம் மாரிமுத்து பற்றி பேசி இருக்கிறார். அதில் பிறப்பு என்பதும் இறப்பு என்பதும் நம்முடைய கையில் எதுவும் கிடையாது. இதை பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதியும் கிடையாது. அதாவது ஒருவன் பிறக்கும்போதே இந்த காலகட்டத்தில் இறப்பார் என்பது விதி. அதை பேச வேண்டும் என்றால் முடியும் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.
நானும் மாரிமுத்துவும் வாக்குவாதத்தில் நிகழ்ச்சியில் ஈடுபட்டோம். அது உண்மைதான் ஆனால் அது எல்லா நிகழ்ச்சியிலும் நடக்கும் வாக்குவாதம் போன்று தான் நடந்தது. மாரிமுத்து மனதில் பட்டதை பேசக் கூடியவர். அவர் விவாதித்தது எல்லாம் தப்பு கிடையாது. ஜோதிடத்தை பற்றி பேச எல்லாருக்கும் உரிமை இருக்கு. ஆனால் மாரிமுத்து ஒருமையில் ஜோதிடர்களை பேசியது தான் வருத்தமாக இருந்தது.
ஆனால் அது குறித்து நிகழ்ச்சியில் அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். அதுவும் ஒருமுறை அல்ல இரண்டு முறை மன்னிப்பு கேட்டார். ஆனால் இப்போது மாரிமுத்து இறந்து விட்டதற்கு ஜோதிடர்களின் சாபம் தான் என்று என்னை கூட பலரும் இணையதளத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அது அப்படி எல்லாம் கிடையாது. கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் நடிகர் சத்தியராஜ் தமிழ் துறை உலகில் ஏழாவது ரவுண்டு வந்து விட்டார். இது எல்லாமே முன் ஜென்ம கர்ம வினை. போன ஜென்மத்தில் என்ன எழுதப்பட்டிருக்கோ அதுதான் நடக்கும். இந்த ஜென்மத்தில் நமச்சிவாயா நமச்சிவாயா என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு கூட திருநீறு தான் கிடைக்கிறது. ஆனால் நல்லவனே இல்லை, கடவுள் சொத்தை சூறையாடறான் அத்தனை அயோக்கியத்தனம் பண்றான் ஆனால் அவன் நல்லா இருக்கான் இதற்கெல்லாம் காரணமே கர்மா தான்.
இறந்து போன நடிகர் மாரிமுத்துக்கு வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நடந்த விவாதம் டிஆர்பி சம்பந்தப்பட்ட விஷயம். அதற்கு தகுந்த மாதிரிதான் அன்று விவாதம் நடைபெற்றது. மாரிமுத்துவுக்கு நடந்தது அவருடைய விதி பயன்தான். நடிகர் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நடித்தார். ஆனால் அவருடைய இப்ப நிலைமையை பாருங்க. அதே போல ஜாலியா பல நடிகர்கள் நடிச்சுக்கிட்டு இருக்காங்க இப்பவும் ஜாலியா இருக்காங்க எல்லாமே விதி.
அதனால நடிகர் மாரிமுத்து பற்றி இறந்து போன பிறகு பலர் பலவிதமாக சொன்னாலும் அதுவெல்லாம் தப்பு. இந்துக்களின் தர்ம படி இறந்து போனவர் எதிரியாய் இருந்தாலும் கூட அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் மாரிமுத்து அப்படி எதிரி கூட கிடையாது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் அவ்வளவுதான். ஆனால் எங்கள் பிரச்சனையை பெருசு படுத்தியது வலைதளங்கள் தான் என்று அந்த பேட்டியில் ஜோதிடர் பேசி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications