காற்றோடு கரைய போகும் மாரிமுத்து.. அவன் நினைவே வேண்டாம்.. அதனால் தான் இப்படி! தம்பி சொன்ன வார்த்தை
சென்னை: சன் டிவி குணசேகரனாக பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவருடைய உடலுக்கு அவருடைய ஊரில் தகனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மாரிமுத்துவின் தம்பி மாரி முத்துவின் உடலை எரி ஊட்ட போவதாக புது தகவலை சொல்லி இருக்கிறார்.

நடிகராகவும் இயக்குனராகவும் பிரபலமடைந்த மாரிமுத்து பெரிய அளவில் உலக அளவில் பிரபலம் அடைந்தது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருந்தார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் நேற்று அவர் மறைந்த பிறகு அவருடைய மறைவுக்கு கண்கலங்கி கண்ணீரோடு கதறி அழுவதை பார்க்கும் போதே தெரியும்.
ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து செய்த வில்லத்தனத்தையும் ரசிக்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில் மாரிமுத்து நடிகராக மட்டுமல்லாமல் ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகவும் இருந்தார். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிற மாதிரி தான் நாளை என்பது அது நடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற சிந்தனையில் தைரியமாக எப்போதும் பேசிக் கொண்டிருந்தார்.
அதனால் கூட அதிகமான ரசிகர்களுக்கு இவரை பிடித்து விட்டது என்றும் சொல்லலாம். மனதில் பட்டதை டக்கென்று பேசி விடுபவர். தன்னுடைய அப்பாவின் மறைவிற்கு கூட நான் அழவில்லை என்னை பார்த்து எல்லாரும் கல் நெஞ்சக்காரனா? என்று கூட கேட்டார்கள் என்று கூட பேட்டியில் மாரிமுத்து பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய உடல் தகனம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மாரிமுத்துவின் உடலுக்கு உறவினர்கள் மட்டுமல்லாமல் அதிகமான ரசிகர்களும் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மாரிமுத்துவின் தம்பி தன்னுடைய அண்ணனின் உடல் இன்று மாலை நேரத்தில் எங்க ஊருக்கு பக்கத்தில் இருக்கிற மயானத்தில் தகனம் செய்ய போகிறோம். இன்னும் நிறைய பேரு வர வேண்டியது இருக்கு. அதனால நாங்க காத்துகிட்டு இருக்கோம்.
அதுபோல எங்க ஊரு கட்டுப்பாட்டு படிதான் நாங்கள் இறுதி சடங்குகளை செய்வோம், எங்க அப்பா இந்த ஊர்ல பல வருஷமா நாட்டாமையாய் இருந்திருக்காரு. அதனால ஊரு வழக்கத்தை நாங்க மீற முடியாது. அதேபோல என்னுடைய அண்ணனின் உடலை எரியூட்ட போகிறோம் ஏன்னா அவருடைய நினைவுகள் எங்களுக்கு வேண்டாம். நல்லடக்கம் வைத்தால் அதில் ஒரு மரத்தை வைக்க வேண்டும்.. அதை நாங்கள் நாங்கள் பேணி பாதுகாக்க வேண்டும். அதுவெல்லாம் வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.
அவன் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டான். கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்தான். அதனால அவனுடைய நினைவு எங்களுக்கு வேண்டாம். பத்தாவது படிக்கிற வரைக்கும் கரண்ட் இல்லாத ஊருல தான் படிச்சோம். அப்படிப்பட்ட ஒரு ஊர்ல இருந்து நாங்க எல்லாம் வேண்டான்னு தான் சென்னைக்கு புறப்பட்டு வந்தான். எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்னு தான் சென்னைக்கு வந்தான் ஆனா கஷ்டப்பட்டு வந்துட்டான். ஆனா அது நிலைக்கவில்லை.
அதை ஏத்துக்கிட்டு போறது தான் நல்லது. ஒவ்வொரு வருஷமும் சிறந்த நல்ல மாணவர்களுடைய விருது கொடுப்பாங்க. அதை ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் மாரிமுத்து தான் வாங்கி இருக்கான். அது மாதிரி இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட ஒரு பங்க்ஷனுக்கு வந்துட்டு போயிருந்தான். எதுலையும் ரொம்ப பிரபஷனல் பாப்பான்.
செருப்பு இந்த இடத்துல கழட்டிட்டு போட்டுட்டு போனா, நாளைக்கு இந்த இடத்தில் இருக்கணும் என்று நினைப்பான். அப்படி ஒரு பிரபஷன். அதனால எதுலயும் கரெக்ட்டா இருப்போம். அப்பா அம்மா தான் அவனுக்கு ரொம்ப உயிரு. எங்க ஊர்ல மத்த ஊரு மாதிரி சண்டை எல்லாம் கிடையாது. நாங்க 500 பேமிலி இருக்கோம். சொந்தக்காரங்க யாருமே பேச மாட்டோம், வர மாட்டாங்க என்று எல்லாம் கிடையாது. எல்லாருமே ஒண்ணுக்குள்ள ஒண்ணா பேசி பழகிட்டு தான் இருக்கோம்..
அப்பா அப்படித்தான் எங்கள வளர்த்தாங்க. இன்னைக்கு உலகத்துல சன் டிவி பாக்குற எல்லாருக்குமே மாரிமுத்து என்கிற பெயரை விட ஆதி குணசேகரன் என்கிற பெயர்தான் தெரியும். எங்களைப் போலவே ஆதி குணசேகரன் டீமுக்கு தான் பெரிய இழப்பு என்று அவருடைய தம்பி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை நேரத்தில் மாரிமுத்து பேசுவது போன்றே அவருடைய தம்பியின் குரலும் இருக்கிறது. அதுபோலவே எதார்த்தத்தை புரிந்து கொண்டு பேசுகிறாரே என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications