நடிகர் மாரிமுத்து மறைவு.. தமிழா தமிழா நிகழ்ச்சியில் அவரை எதிர்த்த ஜோதிடர் தெரிவித்த கருத்து
சென்னை: நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்திருந்தார். இது குறித்து பல பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்து ஜோதிடத்திற்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதனால் இவர் ஜோதிடத்தை எதிர்த்து பேசியதால்தான் இவருக்கு இப்படி ஆகி விட்டதோ என்ற கருத்து இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் அது குறித்து தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்துவை எதிர்த்து பேசிய பிரபல ஜோதிடர் ஒருவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்தாலும் இவர் நிஜத்தில் முற்போக்கு வாதியாக தான் இருந்து வந்தார். தான் கடவுளை நம்ப மாட்டேன் என்றும் கூறி வந்த இவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது நவீன ஜோதிட பரிகாரங்கள் குறித்து அங்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போது நான் இதை எல்லாம் நம்பவே மாட்டேன் மாண்புமிகு முதலமைச்சர் ஆக மாட்டார் என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் அவர் அவர் இப்போ முதலமைச்சர் ஆகிவிட்டார். இப்போ அந்த ஜோதிடர்கள் எல்லாம் மூஞ்சியை எங்க கொண்டு வச்சுக்குவாங்க? இந்த நாடு நாசமா போறதுக்கு காரணமே ஜோதிடமும் ஜோதிடர்களும் தான் என்று ஒருமையிலும் மாரிமுத்து பேசியிருந்தார்.
அது குறித்து அந்த நேரத்தில் அரங்கத்திலும் பல ஜோதிடர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அதற்குப் பிறகு மாரிமுத்துவிற்கு எதிராக பல போலீஸ் கம்ப்ளைன்ட்களும் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென்று மாரடைப்பு காரணமாக மாரிமுத்து இறந்ததும் மாரிமுத்துவின் இறப்பிற்கு காரணம் ஜோதிடர்கள் விட்ட சாபம் தான் என்று ஒரு கருத்து சமூகத்தில் பரவி வருகிறது.
இதுகுறித்து தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிடர் பாலாறு சுவாமிகள் தற்போது தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் இந்த செய்தியை கேட்டு நான் ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். உண்மையில் சாபமெல்லாம் அப்படி பலிக்கும் என்று சொல்வது உண்மை இல்லை. மாரிமுத்து அவர் அவருடைய கருத்தை தான் சொன்னார்.
.
அந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது மாரிமுத்து பேசியது எனக்கும் தவறாகப்பட்டது. அதுவும் அவர் ஒருமையில் ஜோதிடர்களை பேசியது தான் எனக்கு கஷ்டமாக இருந்தது. தவிர மத்தபடி அவருடைய கருத்து சொன்னதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மாரிமுத்து பேசியதை கேட்ட பிறகு தான் எனக்கும் நாம இன்னும் ஜோதிடத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு போகவில்லை என்று சிந்தனை தோன்றியது.

ஜோதிடம் தெரியாதவர்களுக்கு கூட அந்த நிகழ்ச்சியில் மாரிமுத்து பேசியதால் பலருக்கும் ஜோதிடம் பற்றி ஒரு சிந்தனை தோன்றியது. அதனால் நாங்கள் மாரிமுத்துவுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். அதுபோல மாரிமுத்து எப்போதுமே அப்படித்தான் பேசக்கூடியவராம். அந்த நேரத்தில் அங்கே டாபிக் தொடங்கியதும் அவர் டென்ஷன் ஆகிட்டு அதனால் தான் அப்படி பேசி இருந்தேன் என்று நிகழ்ச்சி முடிந்ததும் கூட அவர் எல்லோரிடமும் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட ஜோதிடமே பொய் என்று அவர் பேசி இருக்கிறாரே உங்களால் நிரூபிக்க முடியவில்லையே என்று பலர் கேட்டார்கள். ஆனால் ஜோதிடம் என்பது அப்படி யாருக்கும் நிரூபிக்க முடியாது. அதுபோல மாரிமுத்து இறந்த செய்தியை கேட்டதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. எதையும் தைரியமாக பேசக்கூடிய ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் வருத்தத்தில் இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் அந்த ஜோதிடர் பேசி இருக்கிறார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications