மாரிமுத்து வேட்டியை மடித்து கட்டாத காரணம்! ஆனால் எனக்கு அதிக வில்லத்தனம்! வேலராமமூர்த்தி ஓப்பன் அப்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வேல ராமமூர்த்தி அந்த சீரியலில் ஏற்கனவே நடித்த நடிகர் மாரிமுத்து குறித்தும் தற்போது சீரியலில் நடக்கும் கதை குறித்தும் சில தகவல்களை பேசி இருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் மாரிமுத்து தான் ஆதி குணசேகரன் கேரக்டரில் ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் திடீரென இறந்து போயிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக வேல ரமமூர்த்தி நடிக்க வந்து பிறகு அதிகமாக வில்லத்தனம் அந்த கேரக்டரில் காட்டப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்பது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அந்த வகையில் தமிழ் சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத விதமாகத்தான் நடிகர் மாரி முத்துவின் மறைவு நிகழ்ந்தது. மாரிமுத்து பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் ஆதி குணசேகரன் கேரக்டரில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. ஆனால் அந்தப் புகழை அதிக நாட்கள் அனுபவிக்காமல் அவர் திடீரென்று காலமானார்.
பிறகு அவரை போலவே பேச்சு வழக்கு மற்றும் உடல் மொழியில் இருக்கும் வேல ரமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அவரை சீரியல் தரப்பினர் நடிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வேலராமமூர்த்திக்கு நடிப்பு இல்லை என்பது சிலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. வேலராம மூர்த்தி தன்னுடைய தனித்துவமான கேரக்டரில் நடித்தாலும் இதுவரைக்கும் பார்த்து வந்த ஆதி குணசேகரன் ஆக இவர் இப்போது இல்லை அதிகமாக வில்லத்தனம் காட்டுகிறார்.
அதுபோல இதுவரைக்கும் இதற்கு முன்பு நடித்த மாரிமுத்து வில்லனாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர் ஹீரோ போல தான் வலம் வந்தார். எந்த இடத்திலும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நின்றது கிடையாது. தனக்கு காரியமாக வேண்டும் என்றால் அழுது நடிப்பார், கோபப்படவும் செய்வார். ஆனால் இப்போது உள்ள குணசேகரன் எதற்கும் வீராப்பாக விறைத்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இது குறித்து சமீபத்தில் வேலராமமூர்த்தி பேட்டி ஒன்றில் சில தகவல்களை பேசி இருக்கிறார். அதில் கொம்பன் திரைப்படத்திலிருந்து தான் எனக்கும் மாரி முத்துவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் சேர்ந்து எட்டு படங்கள் ஒன்றாக நடித்திருக்கிறோம். கடைசியாக "வீராயி மக்கள்" என்ற படத்தில் நாங்கள் அண்ணன் தம்பி ஆகவே நடித்தோம். அந்த திரைப்படம் கூட சின்ன பட்ஜெட் படம் தான்.
அதற்காக நாங்கள் ஒரே ஓட்டலில் தங்கி ஒரே காரில் ஷூட்டிங் போயிட்டு வந்தோம். அதனால எங்களுக்குள் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. ஒருநாள் நான் காரைக்குடிக்கு ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தேன் அப்போ மாரிமுத்து இறந்ததாக தகவல் வந்தது அதைக் கேட்டு என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அன்னைக்கு முழுக்க எனக்கு ஷூட்டிங்கில் கவனம் செல்லவில்லை. அதுபோல எதிர்நீச்சல் சீரியலில் நான் ஒரு எபிசோட்டை கூட பார்த்ததே கிடையாது.
ஆனால் மாரிமுத்து என்கிட்ட பேசும்போதெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் பற்றி தான் பேசிக்கொண்டே இருப்பார். அதுபோல நான் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த போதும் முதல் காட்சியிலேயே என்னை வேட்டியை தூக்கிக்கொண்டு போலீஸ் நெஞ்சில் மிதிப்பது போல எடுத்தார்கள். ஆனால் மாரிமுத்து எப்பவுமே வேட்டியை தூக்கி கட்டி நடிக்க மாட்டார். அதற்கு காரணம் அவருடைய கால்கள் ஒல்லியாக இருப்பதால் அவர் காட்டாமல் இருந்திருக்கிறார்.
அதுபோல சூட்டிங் போகும் இடமெல்லாம் அங்கே செல்பி எடுக்க வருபவர்களிடம் குழந்தைகளாக இருந்தால் கூட மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியல் பாக்குறியா இல்லையா? என்று கேட்பார். எனக்கு இது கொஞ்சம் பில்டப்பா இருக்கே என்று தோனிச்சு. ஆனா அதுக்கு பிறகு தான் எதிர்நீச்சல் சீரியல் அவரை எந்த அளவிற்கு புகழின் உச்சத்துக்கு கொண்டு போனsது என்று எனக்கு தெரிந்தது.
ஆரம்பத்தில் இருந்து குணசேகரன் கேரக்டரை விட இப்போது எனக்கு அதிகமாக வில்லத்தனத்தை கொடுக்கிறார்கள். அது சீரியல் தரப்பினர் எடுக்கும் முடிவு. அதுபோல நான் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே எனக்கு எப்படி நடிக்கணும்னு தோணுதோ அது படி தான் நான் அந்த கேரக்டரில் நடிப்பேன்.
ஏற்கனவே நடித்த மாரிமுத்துவை போலவோ அல்லது வேறு யாரை போலவோ என்னால் நடிக்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டு தான் நடிக்க வந்தேன். அவர்களும் அதற்கு அப்போதே சம்மதம் சொல்லிவிட்டார்கள் அதனால் என்னால் ஃப்ரீயாக வேலை பார்க்க முடிகிறது. ஆனால் படங்களை விடவும் இந்த சீரியலில் நடிப்பது கஷ்டமாக இருக்கிறது என்று வேல ராமமூர்த்தி கூறியிருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications