வேல ராமமூர்த்தி சூட்டிங் வந்த முதல் நாளே நடந்தது இது தான்! என் கண்ணால பார்த்தேன்! பாம்பே ஞானம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வந்திருந்த நிலையில் இந்த சீரியலில் பட்டம்மாள் கேரக்டரில் நடித்து வந்த நடிகை பாம்பே ஞானம் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த வேல ராமமூர்த்தி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பேசி இருக்கிறார். அது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி என்றால் எதிர்நீச்சல் சீரியலின் திடீர் முடிவு தான். இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆரம்பத்தில் பட்டி தொட்டி எல்லாம் இந்த சீரியலின் பெருமை தான் பேசப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் குறித்து அதிகமான நெகட்டிவ் கருத்துகளும் வர தொடங்கியது.

Ethirneechal Serial Television Entertainment Sun TV

இதற்கு காரணம் சீரியலில் சில கதைகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு அது பல மாதங்களுக்கு இழுத்துக்கொண்டு இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது. அதுபோல இந்த சீரியலில் ஆரம்பத்தில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்திருந்தார். அவர் இறப்பிற்கு பிறகு நடிகர் வேலராமமூர்த்தி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் ஆரம்பத்தில் இருந்த குணசேகரனை பாராட்டிய ரசிகர்கள் இரண்டாவதாக வந்த வேலராமமூர்த்தியை அதிகமாக ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் தான் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது என்ற ஒரு கருத்து இணையத்தில் பரவி வருகிறது.

அதிலும் கூட சமீபத்தில் ஒரு செய்தியில் வேலராம மூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததை அவமானமாக கருதுகிறார், அவருக்கு சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் மரியாதை கொடுக்கவில்லை என்று இணையத்தில் பரவ, அதற்கு வேலராமமூர்த்தி "இது எவன் பார்த்த வேலைடா...? நான் இப்படி சொல்லவே இல்லையே... என்னை உலக தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்ததே இந்த எதிர்நீச்சல் சீரியல்தான்" என்று காட்டமான ஒரு பதிலையும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு போட்டியாக இருந்த பட்டம்மாள் கேரக்டரில் நடித்த பாம்பே ஞானம் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் வேலராமமூர்த்தி பற்றி பரவி வந்த செய்திகள் எல்லாமே பொய். வேலராம மூர்த்தி முதல் நாள் சூட்டிங் வரும்போது இயக்குனரே எழுந்து நின்றார். அதற்கு காரணம் வேலராமமூர்த்தி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவர் ஒரு எழுத்தாளராக இருக்கிறார், அதனால் அவருக்கு சூட்டிங் ஸ்பாட்டில் அதிகமான மரியாதை தான் இருந்தது.

Ethirneechal Serial Television Entertainment Sun TV

எல்லா நடிகர்களோடும் அவர் நல்லாவே செட் ஆகிவிட்டார். சீரியல்களிலும் திரைப்படங்களில் அவர் பார்ப்பதற்கு பயங்கரமான ஆள் போல இருந்தாலும் செட்டில் எல்லோரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். முதல் நாள் அவருக்கு கிடைத்த வரவேற்பை நானே என் கண்ணால் பார்த்தேன். அதற்குப் பிறகு கூட அந்த சீரியலில் அவரோடு தம்பிகளாக நடித்த நடிகர்களோடு அவர் தம்பிகள் போலவே பழகினார்.

மாரிமுத்து எப்படி சூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரிடமும் பழகி விட்டாரோ அதுபோல வேலராமமூர்த்தி தன்னோடு நடிப்பவர்களிடம் நன்றாகவே பழகி இருந்தார். அதனால் அவருக்கு சூட்டிங் ஸ்பாட்டில் மரியாதை கிடைக்கவில்லை அதனால் அவர் அவமானமாக கருதுகிறார் என்று சொல்வதெல்லாம் முற்றிலும் பொய். அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்த குணசேகரனுக்கும் இரண்டாவது இவர் வந்த பிறகு இருந்த குணசேகரனுக்கும் வித்தியாசம் காட்டப்பட்டதால் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மைதான்.

இவர் முழுக்க முழுக்க வில்லனாகவே இருந்ததால் மக்கள் இவரை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரை ஏற்றுக் கொள்ள தொடங்கியிருந்தார்கள். அதற்குள் சீரியல் முடிவடைந்து விட்டது என்று அந்த பேட்டியில் பாம்பே ஞானம் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+